எளிமையான முறையில் இடம்பெற்ற குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வு (Photos) updated 28-01-2016


குப்பிளான் மண்ணிற்கு வாய்த்த குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28-01-2016) எளிமையான் முறையில் இடம்பெற்றது .

காலை -9 மணிக்கு ஆச்சிரம முன்றலில் அமைந்துள்ள விநாயகர் திருவுருவச் சிலைக்கு  முன்பாக விஷேட பொங்கல் இடம்பெற்றன . அதனைத் தொடர்ந்து விநாயகர் ,சிவலிங்கப் பெருமான் ,ஆச்சிரமத்தில் அமைந்துள்ள ஈழத்து இந்தியச் சித்தர்களின் திருவுருவப் படங்களுக்கு விஷேட பூசை வழிபாடுகள்  நிகழ்த்தப் பெற்றன. அதனைத் தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்குப் பொங்கல் பரிமாறப்பட்டது. பூசை நிறைவில் சிவபூமி அறக்கட்டளையின்  தலைவர் கலாநிதி ஆறு .திருமுருகன் அவர்களும் வருகை தந்திருந்தார்.


ஆச்சிரமத்தில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் காலை-10 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை, பூசைகள் என்பன இடம்பெற்று  அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு  மகேஸ்வர பூசை(அன்னதானம் ) நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி நாயன்மார்களின் குருபூசை நிகழ்வுகள் , சிவராத்திரி , நவராத்திரி போன்ற நிகழ்வுகள் சிறப்பாகவும் இடம்பெற்று வருகின்றன. இந்த ஆச்சிரமத்தில் வேறெங்கும் காண முடியாத ஈழத்து இந்தியச் சித்தர்களின் திருவுருவப் படங்கள் , ஆச்சிரமப் பூங்கா என்பவற்றையும் காண முடியும் .ஆச்சிரமத்தில் பல்வேறு ஆன்மீக நூல்களையும் உள்ளடக்கிய நூலகமும் உள்ளது. காலை -8 மணி முதல் மாலை -6 மணி வரை ஆச்சிரமம் திறந்திருக்கும் எனவும் மாணவர்கள் , பக்தர்கள் ஆகியோர்  குறிப்பிட்ட நேரங்களில் வருகை தந்து தரிசித்துப் பயன் பெற முடியுமெனவும் ஆச்சிரம நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள் :-செ -ரவிசாந்.