குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு விசேட கூட்டுப் பிரார்த்தனை(Photos)


 

யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் நான்காவது ஆண்டு விழா நேற்றுச் சனிக்கிழமை(28) ஆச்சிரம மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.


நேற்றுக் காலை-08 மணியளவில் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் முன்றலில் பொங்கல் பொங்கி, ஆச்சிரமத்திற்கு முன்பாக அமைந்துள்ள விநாயகர் திருவுருவச் சிலைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. 

 

அதனைத் தொடர்ந்து முற்பகல்- 11.30 மணியளவில் ஆச்சிரமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும், ஈழத்து, இந்தியச் சித்தர்கள், ஞானிகளின் திருவுருவப் படங்களுக்கும் சைவசமயத்தின் மிக உன்னத மந்திரமான திருவைந்தெழுத்து மந்திரத்தால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. 

அத்துடன் நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டுப் பக்தர்களால் விசேட கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. கிராம முன்னேற்றம் வேண்டியும், நாட்டில் அமைதி நிலவ வேண்டியும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.  


தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் பறிமாறப்பட்டது. 

 

செய்தித் தொகுப்பு:- குப்பிளானிலிருந்து செ-ரவிசாந்-