சிவத்தமிழ் வித்தகர் திரு சிவ மகாலிங்கம் அவர்கள் எழுதிய தவமுனியின் தமிழ் மந்திரம் என்ற திருமந்திர நூல் வெளியீட்டு விழா. updated 26-07-2016


சிவத்தமிழ் வித்தகர் திரு சிவ மகாலிங்கம் அவர்கள் எழுதிய தவமுனிவரின் தவமந்திரம் என்ற திருமந்திர நூல் வெளியீடு 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை சைவ முன்னேற்ற சங்கத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.


அதனைத் தொடர்ந்து திருமதி சோபனா சசிதரன் அவர்களின் பண்ணிசை இடம்பெற்றது. தொடர்ந்து ஆசியுரைகளும், வாழ்த்துரைகளும், வெளியீட்டுரையும் இடம்பெற்றது. வெளியீட்டுரையை கலாநிதி பற்றிமாகரன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.


நிகழ்ச்சி தொகுப்பை திரு கணேஸ்குமார் வழங்க திருமதி சதானந்தரூபி பரமேஸ்வரன், திருமதி தயாழினி மோகனராசா அவர்கள் வாழ்த்துரைகளை வழங்கினார்கள். திரு சிவமகாலிங்கம் ஏற்புரை மற்றும் நன்றியுரையை வழங்கினார்.


லண்டனிலே இப்படியான நிகழ்வுகளில் பெருமளவு மக்கள் கலந்து கொள்வது மிகவும் குறைவு ஆனாலும் குறுகிய அழைப்பை ஏற்று பெருமளவு மக்கள் பங்கு பற்றி இந்த விழாவை சிறப்பித்தனர்.


இந்த விழா முற்று முழுதாக சர்வதேச இந்து சமய பேரவை தலைவர் திரு கணேஸ்குமார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.

 

பின்குறிப்பு
அன்பர் ஒருவர் தனது புகைப்படம் வருவதை விரும்பவில்லை என்பதால் அவரின் முகம் மறைக்கப்படுகின்றது. பொது நிகழ்வுக்கு வந்துவிட்டு இப்படி நடந்து கொள்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.