"செம்மண் சுடர்" என்ற விருதை வழங்கி கௌரவிக்கவிருக்கும் பெருமக்களின் விபரங்கள்.


எமது கிராமத்தின் வளர்ச்சிக்கும், அதன் பெருமைக்கும் பலர் அன்று தொடக்கம் இன்று வரை அரிய சேவைகளை செய்து கொண்டு வருகின்றார்கள். இதில் பலர் அமரர்களாகி விட்டனர். அவர்களின் சேவைகள் போற்றுதற்குரியது. விருதளித்து கௌரவிக்க பொருத்தமானவர்கள் பலர் இருந்தும் இந்த வருடம் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் 10 பேருக்கு இந்த விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த விருதை மற்றவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கவுள்ளோம். மூப்பின் அடிப்படையிலும் காலத்தின் தேவை கருதியும் இந்த பெருமக்களின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. எண்ணற்ற சேவையாளர்கள் அமரர்களாகி விட்டனர். என்பதால் அவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் அவர்களின் சேவைகள்; குப்பிழான் என்ற வரலாற்று நூலில் பதிக்கப்படும் என்பதையும் அறியத் தருகின்றோம்.

செம்மண் சுடர் ஜயாத்துரை சண்முகலிங்கம்
செம்மண் சுடர் சிவசுப்பிரமணியம் மகாலிங்கம்;
செம்மண் சுடர் கலாநிதி கந்தையா கணேசலிங்கம்
செம்மண் சுடர் செல்லத்துரை ஞானசபேசன்
செம்மண் சுடர் மதாஜி விசுவாம்பா விசாலாட்சி
செம்மண் சுடர் தம்பு தருமலிங்கம்
செம்மண் சுடர் ஆறுமுகம் சிறிஸ்கந்தமூர்த்தி
செம்மண் சுடர் சண்முகம் வைத்தீஸ்வரன்
செம்மண் சுடர் பொன்னம்பலம் நடனசிகாமணி
செம்மண் சுடர் கந்தையா கிருஷ்ணன்

நன்றி - குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா

முக்கிய குறிப்பு
நமது கிராமத்தில் வசிப்பவர்களுக்கு விசேட நிகழ்வொன்றில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பதையும். மற்றையவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.