இலண்டன் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற செம்மண் இரவு 2016. updated 11-12-2016

 

 


இந்த ஆண்டின் செம்மண் இரவு நிகழ்வு கடந்த 03-12-2016 ஞாயிற்றுக்கிழமை கிழக்கு லண்டனில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவுக்கு பிரதம விருந்தினர்களாக திரு திருமதி திருநாவுக்கரசு விக்கினராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு திருமதி சின்னத்தம்பி நல்லதம்பி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலை 6 மணிக்கு சிறப்பு விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. செல்வன் ஞானலிங்கம் அவர்களால் கிராமிய கீதம் இசைக்கப்பட்டது. பல்வேறு கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. சிறுவர் சிறுமியர் தமது ஆற்றல்களை வெளிக்கொணரும் களத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தி கொடுத்துக்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் அமரத்துவம் அடைந்த எமது கிராமபற்றாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. செம்மண் சுடர் பொன்னம்பலம் நடனசிகாமணி அவருக்கான சுடரை அவரின் மகன் ரூபன் (ஜேர்மனி) அவர்களும்;, செம்மண் சுடர் மாதாஜி விசாலாட்சி அவருக்கான சுடரை அவரின் பெறாமகன் தவராஜாவும், செம்மண் சுடர் வைத்தீஸ்வரன் அவருக்கான சுடரை அவரின் உறவினர் பஞ்சவர்ணகிளியும் ஏற்றினர். அமரர்களுக்கான அஞ்சலி உரையை திரு கணேஸ்குமார் அவர்கள் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து விக்கினேஸ்வரா மன்ற உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.


தலைமை உரையை திரு அருந்தவராசாவும், பிரதம விருந்தினர் உரையை திரு விக்கினராஜா அவர்களும் நிகழ்த்தினர். திரு முருகானந்தன் அவர்களின் சிற்றுரையும் இடம்பெற்றது.