அண்மையில் லண்டனில் நடைபெற்ற செம்மண் இரவு 2011 நிகழ்ச்சி தொடர்பான விமர்சனத்தை எங்களுக்கு எழுதி அனுப்பியுள்ளார் திரு.திருநாவுக்கரசு விக்கினராஜா அவர்கள். நிகழ்ச்சியின் குறை நிறைகளை நிட்சயம் எல்லோரும் தெரிவிக்க வேண்டும். குறை நிறைகளை எமக்கு தெரிவிப்பதன் மூலம் தான் அடுத்த நிகழ்ச்சிகளை எம்மால் திறம்பட செய்யமுடியும். உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை எமக்கு அனுப்பி வையுங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நாம் நிட்சயம் முயற்சி செய்வோம்.
அன்புடன்
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் லண்டன்,

அவரின் விமர்சனத்தை முழுமையாக உங்களுக்கு தருகிறோம்.

Dear Friends,

I thought of giving my comments and feedback on the successful event we had this month. The comments are based on my personal opinion and the feedback I got from some participants and audience. Please find it below.

எல்லோருக்கும் குழந்தைகளின் நிகழ்ச்சிகள் பிடித்திருந்தன - கராத்தே உட்பட.

முதலாவதாக வந்த பையன் பாட்டுப் பாடினதும் தான் எனக்கு இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது, எப்படியிருக்க வேண்டும் என்று புரிந்தது. இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. சின்னஞ் சிறுசுகளின் ஆட்டமும், பாட்டும், ஏன் அவர்கள் விடும் பிழைகளும் மிக மிக ரசிக்கத்தக்கதாக இருந்தன.

இளையவர்கள் பாடிய சங்கீதம், வீணை, பரதம், (சினிமா) நாட்டியம் அனைத்தும் ரசிக்கத்ததாக இருந்தன. இன்னும் அவர்களைக் கூடுதலாகப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். அவர்களுக்குக் கிடைத்த கைதட்டுகள் அதைத் தான் சொன்னது.

ஓவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடத்துக்குள் அடங்கியிருந்தது நல்லது. இது நிறைய varietyஐ கொடுத்தது.

ரட்ணபாலன் அண்ணை ரொம்ப நல்லாப் பாடினார். இன்னும் ஒன்றிரண்டு அவர் பாடியிருக்கலாம். பபிற்றா பாதியில் நிறுத்த வேண்டி வந்தாலும், அவரும் நன்றாகப் பாடியதாகவே ஆட்கள் சொன்னார்கள் (நான் சவுண்ட் சிஸ்டத்துடன் மல்லுக் கட்டியதால் அவரது பாட்டைக் கேட்க முடியவில்லை).

சாப்பாடு, ஸ்நாக்ஸ் எல்லாம் நல்லம். அடுத்தநாள் 'பின்'விளைவுகள் எவையும் இருந்திருக்கவில்லை.

இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக நடத்த நிர்வாகத்தினர் எவ்வளவு தூரம் உங்கள் சொந்த நேரங்களையும், பணங்களையும் செலவு செய்தீர்கள் என்று ஓரளவுக்காவது எமக்குத் தெரியும். எனவே உங்களைப் பராட்டுவது மட்டுமன்றி, இப்படி ஒரு இனிய மாலையை, ஒரு ஒன்று கூடலை எற்படுத்தியதற்குத் தனிப்பட்ட முறையில் நன்றியும் கூற வேண்டும்.

இது நீங்கள் செய்த முதல் கலை நிகழ்ச்சி. தயவுசெய்து அடுத்த முறையும் தவறாமல் இதைத் தொடரவும்.

ஒரு விஷயத்தைச் செய்யும் போது அதன் ஆத்மாவைக் கண்டுபிடிப்பது முக்கியானது. ஒன்றின் ஆத்மாவைப் பிடித்துவிட்டால் பிறகு அதை ஒட்டி மீதி அனைத்தையும் கட்டி எழுப்பி விடலாம். ஆனால் அந்த ஆத்மாவைக் கண்டு பிடிப்பது தான் பெரிய வேலை. இந்த நிகழ்ச்சியின் ஆத்மா எனக்குப் புரிந்தது..... வெள்ளி அண்ணையின் பேரன் வந்து முதல் பாடிய போது.

அது தான் ஆத்மா.

அது தான் 'தீம்'.

நாங்களும், எங்கட ஆக்களும்.

உள் வீட்டுக் கூத்து.

ஒரு கலியாண வீட்டின் இரண்டாம், மூன்றாம் நாள் இரவு போல. நமக்குள் கதை, சாப்பாடு, சங்கீதம், சிரிப்பு, ஆட்டம்.

இது தான் இந்த நிகழ்ச்சியின் ஆன்மா.

எனவே இந்த ஆன்மாவை மையமாகவும் சுற்றமாகவும் வைத்து அடுத்த முறை நிகழ்ச்சியை திறம் பட அமைக்க உங்களை வேண்டுகிறேன்.

எனக்கும், நான் கதைத்த மற்றவர்களுக்கும் பெரிதாகப் பிடிக்காத நிகழ்ச்சி – அந்த இசைக் குழுவினரின் பாட்டு. முதலில் பக்திப்பாட்டு, பிறகு மென்மையான பாடல்கள், கடைசியில் டப்பாங்குத்து என்ற பாணியில் அவர்கள் தங்கள் நிகழ்ச்சியை தயாரித்திருந்தது மிகப் பழைய பாணி.

இது 2011.

லண்டன்.

யாழ்ப்பாணத்தில் 1970களில் எடுபட்ட விஷயங்கள் இங்க எடுபடாது. இங்க தாத்தாமாரே ஆட ரெடி (தாத்தா என்று சொன்னது என்னைத் தான்).

இரண்டு மூன்று இளம் பையன்கள், பெண்கள், டான்ஸ் மியூசிக்கிற்காகக் காத்திருந்து போர் அடித்து வீட்டுக்குப் போய் விட்டார்களாம் என்று அவர்களது சக வயதினர் சொன்னார்கள்.

சவுண்ட் சிஸ்டமும் ரொம்ப மோசம். வீணையின் சத்தத்தை கேட்டவே முடியவில்லை. அதைவிட பாட்டுக் கச்சேரி நடந்த நேரம் சவுண்டைக் கொன்ரோல் பண்ண ஒருத்தரும் இல்லை.

இந்தச் சின்னத் திருஷ்ட்டியைத் தவிர நிகழ்சி முற்று முழுக்கு மன நிறைவாகவே இருந்தது.

எனவே, மீண்டும் நன்றி. மீண்டும் பாராட்டு.

தயவுசெய்து தொடருங்கள்.

Well done. Very... Good Plan

 

அன்புடன்

விக்கி