நடந்து முடிந்த குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் பற்றிய செய்திதொகுப்பு. updated 18-02-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் 12-01-2014 புதன்கிழமை மாலை 2 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திரு தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண சபை உறப்பினர் திரு கஜதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு ஜ சண்முகலிங்கம் அவர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர்.

 துறை சார் விருந்தினராக வலிகாமம் ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.நடராஜாவும் மற்றும் ஓய்வு நிலை இந்துக் கலாசார உதவிப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், சுன்னாகம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி தசநாயக்கா, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக விருந்தினர்கள் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய சகிதமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி,வடமாகாண சபைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.

மிக நீண்ட காலத்திற்கு பிறகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வு அனைவரினதும் பாராட்டை பெற்றது. அதிபர் அவர்களின் சிறந்த செயல்பாட்டினால் பாடசாலையின் கல்வி மெல்ல மெல்ல வளர்ந்து வரும் அதே வேளை விளையாட்டு துறையிலும் போதிய கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த நிகழ்வானது பாராட்டபட வேண்டியதொன்றாகும். புலம்பெயர் வாழ் குப்பிழான் இளைஞர் அமைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் நிதி பங்களிப்போடும் இந்த விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது. எல்லோரையும் அரவணைத்து ஒற்றுமையாக நடாத்தி முடித்தது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.

எமது கிராமத்தின் மிகச் சிறந்த எழுத்தாளராகிய திரு ஜ சண்முகலிங்கம் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து அவருக்கு கொடுக்கபட்ட இந்த கெளரவமானது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. அவர்கள் திருமணபந்தத்தில் இணைந்து வெளியூரில் வாழ்ந்தாலும் தனது பெயருக்கு முன்னால் குப்பிழான் சண்முகன் என்ற நாமத்தோடே அவரின் கட்டுரைகள், கவிதைகள் வெளிவரும். அப்படிபட்ட சிறந்த அறிஞரை பாராட்டுவதில் நாம் பின் நிற்க கூடாது. ஒருவர் வாழும் போதே அவரை கெளரவிப்பதே சிறந்ததாகும். படித்தவர்கள், படிக்காதவர்கள், ஊரில் பிறந்தவர்கள் பிறக்காதவர்கள் என்ற வேற்றுமையில்லாமல் எமது ஊரின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள், எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்தவர்களை எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு உரிய கெளரவத்தை வளங்க வேண்டும், தவறுதலாக கூட ஒன்றுமே செய்யாதவர்களை, உதவி செய்ய மறுத்தவர்களை அவரின் பட்டத்திற்காக கெளரவிக்கூடாது.

முதலாம் இடத்தை சுப்பையா இல்லம் (400 புள்ளிகள்) பெற்றுக்கொண்டது. இரண்டாவது, மூன்றாவது இடத்தை சுந்தரசர்மா இல்லம் (365 ப5ள்ளிகள்), தம்பிராசா இல்லம்(336 புள்ளிகள்) பெற்றுக்கொண்டது.