பிரபல சிறுகதை எழுத்தாளர் குப்பிளான் சண்முகன் ‘சங்கச் சான்றோன்’ விருது வழங்கிக் கௌரவிப்பு (Photos)

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தால் யாழ்.குப்பிளானைச் சேர்ந்தவரும் தற்போது கரவெட்டியில் வசித்து வருபவருமாகிய பிரபல சிறுகதை எழுத்தாளர் ஐ.சண்முகன் ‘சங்கச் சான்றோன்’சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் இதற்கான நிகழ்வு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போது பதில் உபவேந்தர் பேராசிரியர் சாந்த கேனநாயகவினால் இவ் விருது சம்பிராதய பூர்வமாக வழங்கப்பட்டது.

இதன் போது பேராசிரியர் வ.மகேஸ்வரன்,பேராசிரியர் சிவயோகநாதன் ஆகியோரும் உடனிருந்தனர்.

வருடாவருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இந்தவருடம் தனது இலக்கியப் பணிகளுக்காக குப்பிளானைச் ஐ.சண்முகன் பெற்றுக் கொண்டார்.

”உதிரிகளும்……” “கோடுகளும் கோலங்களும்”, ”சாதாரணங்களும் அசாதாரணங்களும்” போன்ற சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்ட ஐ.சண்முகன் கவிஞராகவும், இலக்கிய விமர்சகராகவும் பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட ஒருவராகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள்: ரவி

In English: 
The famous short story writer Kuppilan I.Shanmugan was honoured with “Sangam Saanroon” Award

The famous short story writer I.Shanmugan who hailed from Jaffna Kuppilan currently living in Karaveddy was honoured with “Sangam Saanroon” (Association of Scholars) award by University of Peradeniya Tamil Association.

During the recently held event at the Peradeniya University Vice Chancellor Professor Shantha Kenanayakavin handed over this award officially. In this event, professor V.Mageswaran and professor Sivayoganathan were also there.

Annually this award is being given by the University of Peradeniya and this year it has been recieved by Kuppilan I.Shanmugan for his literary works.

“Uthirikalum”, “Kodukalam Kolingalum”, “Chatharangalum Asatharangalum” and many more short stories are written by I.Shanmugan. Not only this but he has is poet, literacy also.

News and Pictures: Ravi