எங்கள் சிவசோதி(பொன்னன்) அவர்களுக்கு ஓர் அஞ்சலி

 குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிட்சர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவசோதி(பொன்னன்) அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளோம். எமது கிராம பற்றளரான திரு சிவசோதி எங்கள் கிராமத்திற்கு ஆற்றிய பணி மிகவும் மகத்தானது. சிறந்த விளையாட்டு வீரரான எங்கள் பொன்னன், விளையாட்டில் எமது கிராமத்தின் பல வெற்றிகளுக்கு காரணமானவர். தாய் நாட்டை விட்டு புலம் பெயர்ந்த போதிலும் ஊரின் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்த மாமனிதன். அவர் கடந்த பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த போதிலும், தனது நோயை பொருட்படுத்தாமல் எமது கிராம விளையாட்டு, கல்வி வளர்ச்சிக்கு தேவையான நிதியை சுவிஸ் வாழ் எமது கிராம மக்களிடம் சேகரித்து அனுப்பி வந்தார். அவரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம் அதற்கு வார்த்தைகள் போதாது. அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தவர்களோடு நாமும் துயரை பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்களுக்காக,

பொன்னான பொன்னன் ஜயா
மனங்களை கவர்ந்த மன்னன் ஜயா

மன்றம் அமைத்த பொன்னன் ஜயா
நோய் வந்து தாக்கையிலும்

தாய் மண்ணை நேசித்தவா
தாய் மொழியே மூச்சு என்று யாசித்தவா

நாடகத்தின் நாயகன் நீ
வேடம் பல போட்ட உன்

வாழ்க்கை எனும் நாடகத்தின்
நீ போட்ட இந்த வேடம் ஏன் அண்ணா

அள்ளிக் கொடுக்கின்ற பாரிக்கும்
அள்ளிக் கொடுக்க கொடுக்கின்ற மனம் உண்டு

அலையின் தேடல் கரை மட்டும்
கரையின் தேடல் யார் அறிவார்

அந்தக் கரையாய் இன்று நாங்களும்
உன்னை தேடுகிறோம் பாரண்ணா

அண்ணனே எங்கள் பொன்னனே
ஏழை மனங்களில் வாழும் மன்னனே.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா