எங்கள் கிராம பற்றாளன், எங்கள் மண்ணில் உதித்த சிறந்த விளையாட்டு வீரன் அவனுக்கு ஒரு அஞ்சலிநண்பனே எங்கள் பொன்னனே
எம் பொன்னான பொன்னனுக்கு என்னானதோ

செம்மண்ணின் பொன் ஒன்று மண்ணானதோ
இல்லை விண் சென்றதோ

கண்ணான கண்ணனுக்கு என்னானதோ
கால் இல்லா கட்டினிலே கண் மூடி ஏன் தூங்குகிறாய்

பறக்கும் தட்டு உன் கழகம்
பறந்தே அடிப்பாய் கோல்கள் அண்ணா

என்னாச்சு அட என்னாச்சு
உன் மூச்சு எங்கே போயாச்சு

கட்டியவள் கதறி நிக்க
தாய் சேயும் பதறி நிக்க
நோய் வந்து கொன்றதுவோ

உன் தொண்டு ஏராளம் - அதை
ஊரே சொல்லும் தாராளம்

மதவடி அரசும் ஆடாமல் நிக்குதடா
உன் பிரிவுச் செய்தி கேட்டு

வாழ்க்கை பயணத்தில் நீ மறைந்தாய்
வரலாற்றில் நீ என்றும் நிறைவாய்
நீ எங்கள் வழி காட்டி தான் அண்ணா

நண்பனே எங்கள் பொன்னனே
எம் பொன்னான பொன்னனுக்கு என்னானதோ

செம்மண்ணின் பொன் ஒன்று மண்ணானதோ
இல்லை விண் சென்றதோ


உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கும்
குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா.