பாதுகாப்பு வலயமாக இருந்த குப்பிழானின் எஞ்சிய பகுதியும் விடுவிக்கப்படுகின்றது என்ற செய்தியோடு விரிகின்றது இம்மாத செய்தி தொகுப்பு. updated 05-03-2015

குப்பிழான் வடக்கின் ஒரு பகுதியும் குரும்பசிட்டி போன்ற கிராமங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக கடந்த 30 வருடங்களாக இருந்து வருகின்றது. புதிய ஆட்சி மாற்றத்தோடு குறிப்பிட்ட சில பகுதிகளை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் குரும்பசிட்டி சந்தியிலிருந்து தெல்லிப்பளை சந்தி வரை உள்ள தென்பகுதியை விடுவிக்கும் செயற்பாட்டை தொடங்கியுள்ளனர். தற்போது குரும்பசிட்டி சந்தியிருந்தியிலிருந்து தெல்லிப்பளை வரை வீதிப்போக்குவரத்தை அனுமதித்துள்ளனர். இரண்டு வாரங்களில் இந்த பகுதிகள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.


25 ஆண்டுகளுக்கு பிறகு பல நோக்கு கூட்டுறவுச்சங்க தேர்தல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர். குப்பிழான் மக்கள் இதில் ஆர்வம் செலுத்தவில்iயாகினும். எமது கிராமத்திலிருந்து 6 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்கள் பெயர்கள் வருமாறு திரு தமிழ்ச்செல்வன், திரு சந்திரவேல், திரு குணலிங்கம், திரு ஆனந்தன், திரு சின்னராசா.

 

இந்திய வீட்டுத்திட்த்தின் கீழ் சமாதி கோயில் பகுதி மக்களுக்கு 25 புதிய வீடுகள் ஏற்கனவே கட்டி கொடுக்கப்பட்டன. மேலும் 10 பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கிடைக்கவுள்ளது. போரினால் மிகவும் கடுமையாக பாதித்த பிரதேசம். 80 களின் ஆரம்பத்தில் சனத்தொகை கூடிய பிரதேசமாக இருந்தது. போர் காரணமாக இந்த பகுதி மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து 3 தசாப்த காலங்களாக தமது இருப்பிடங்களுக்கு திரும்ப முடியவில்லை. அந்த மக்களின் கடின உழைப்பினால் அந்த பிரதேசம் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. இது எமது கிராமத்தின் வளர்ச்சியின் இன்னொரு படி.

 

முன்னைய தோற்றம் 2010

முன்னைய தோற்றம் 2013


தற்போதைய தோற்றம்

ஏற்கனவே உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதிகளான பலட்டன் எறும்புக்கடவை பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புலம்பெயர் மக்களும் தமது காணிகளை திருத்தி விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளார்கள். வெறும் சூனிய பிரதேசமாக இருந்த பகுதிகள் மெல்ல மெல்ல குடியிருப்புக்களாகவும் விவசாய பூமியாகவும் மாறி வருகின்றது.

கடந்த இரண்டு வருடங்களாக காளி கோவில் திருப்பணிகள் நடந்து வந்தன. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிசேகம் எதிர்வரும் 8ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் மகுட வாக்கியம்.