செல்வி மதாஜி விசாலாட்சி அவர்களின் வாழ்க்கை குறிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விபரமும்.ஈழ மணித் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனிச்சைவ கிராமம் குப்பிழான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,சிங்களவர் ஆகியோரால் ஈழநாடு அடிமை கொள்ளப்பட்ட போது பல ஊர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தது. ஆனாலும் குப்பிழான் கிராமம் தன் தனித்துவத்தை என்றும் இழக்கவில்லை. எமது கிராமம் ஆனது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்கு மிக அதிகமாகும். சின்னஞ் சிறிய எமது கிராமத்தில் பல சைவ ஆலயங்கள் உள்ளன. இது தான் எமது மக்களின் தனித்துவமான அடையாளத்திற்கு சாட்சி. இன்றும் புலம்பெயர்ந்தாலும் எமது ஆலயங்களை கை விடவில்லை பலர் நிதி உதவிகளை வாரி வழங்கி ஆலயங்களின் புனர்நிர்மானத்திற்கு செய்யும் பங்களிப்பு அளப்பரியது. எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து விடாமால் எமது புலம்பெயர் உறவுகள் கர்னனிடம் உள்ள கவசகுண்டலம் போல் காத்துவருகிறார்கள்.

அப்படிப்பட்ட மண்வாசனையுள்ள எமது மண்ணில் உதித்தவர்தான் செல்வி விசாலாட்சி அம்மையார். யார் இந்த விசாலாட்சி நேற்று வரை எமக்கு தெரியாது. சிலவேளைகளில் உங்கள் சிலபேருக்கு தெரிந்து இருக்கலாம். ஆனால் பலபேருக்கு தெரியாது அது தான் உண்மை. ஆனாலும் எமக்கு தெரிந்த சிறிய தகவல்களோடு எதிர்வரும் 04-02-2012 சனிக்கிழமை நடைபெறவுள்ள முத்துவிழா சிறப்பு மலர் பற்றிய விபரங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். அவர் பற்றிய மேலதிக தகவல்கள் பின்னொரு பந்தியில் தரப்படும் என்பதை உங்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மாதாஜி அம்மையார் என்று அழைக்கப்படும் செல்வி விசாலாட்சி அவர்கள் இந்த மண்ணில் அவதரித்து 80 ஆண்டுகள் கடந்து விட்டது.

மானிட வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் போதுமென்ற அளவுக்கு பல பணிகளை ஆற்றியுள்ளார், ஆற்றிக்கொண்டும் உள்ளார். மதாஜி அவர்கள் 1964 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். அம்மையார் இசை வல்லுனர் ஆத்ம ஜோதி முத்தையா அவர்களுடன் பல சந்தர்பங்களில் பணியாற்றியுள்ளார். கிளிநொச்சி மகாதேவ ஆச்சிரமத்தில் மந்திர தீட்சை பெற்று தவ வாழ்வு வாழ்ந்தவர். கிளிநொச்சியில் இயங்கிய தாய், தந்தையை இழந்த பிள்ளைகளை தாய் போல் ஆதரித்து வந்தார்.

2000 ஆம் ஆண்டு ஏற்றபட்ட போர் நிறுத்தத்தோடு கொழும்பில் சிறிய காலம் தங்கி இருந்து பல அரிய நூல்களை வெளியிட்டார். இதுவரை 25 க்கு மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கலாச்சார அமைச்சு, லண்டன் சைவப் பேரவை, அருள் மிகு ஜயப்பன் பேரவை அவர்களை கெளரவித்தனர். அவர்களின் 80 ஆவது அகவையைில் சிறப்பு மலர் வெளியீட்டு விழா எதிர்வரும் 04-02-2012 அன்று சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.