#

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சிறப்பாக நடைபெற்ற லண்டன் விளையாட்டு விழா 2015. updated 10-07-2015

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் ஏற்பாட்டில் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 04-07-2015 சனிக்கிழமை மதியம் 11.30 ஆரம்பமாகி மாலை 7.30 க்கு நிறைவு பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திரு திருமதி சத்தியதாசன் (கிறிஸ்ணர் ஜயாவின் மகன்) பிரான்சிலிருந்து வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தார்.

கடுமையான வெப்ப நிலை இருந்த போதிலும் இந்த நிகழ்வு சிறப்பற நடைபெற்றது. மங்கல விளக்கை பிரதம விருந்தினர் அவர்கள் ஏற்றினார்கள். அதன் பின்னர் குப்பிழான் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது. ஒட்ட போட்டிகள், நீளம் பாய்தல், குண்டெறிதல் போன்றவற்றுடன் விநோத உடைப் போட்டி, உதைபந்தாட்டம், கயிறுழுத்தல் போட்டிகளும் இடம்பெற்றது.

பரிசளிப்பு விழாவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இந்த நிகழ்வுகள் திறம்பட நடாத்துவதற்கு Ratna & co, Sathyam Resturent அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றமானது ஒவ்வொரு வருடமும் விளையாட்டு நிகழ்வையும் கலை நிகழ்வையும் சிறப்பாக நடாத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது. எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான ஊர்களை சேர்ந்தவர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனாலும் அண்ணளவாக 30 ஊர்களை சேர்ந்தவர்கள் தான் இப்படியான நிகழ்வுகளை செய்கின்றார்கள். பெரிய கிராமத்தை சேர்ந்தவர்களாலேயே ஒரு விழாவை தானும் செய்ய முடியாமல் இருக்கும் போது இரண்டு சதுர பரப்புள்ள சின்னஞ்சிறிய கிராமத்தை சேர்ந்தவர்களால் எப்படி இது சாத்தியமாகுது.

பிரித்தானியாவை பொறுத்தவரை அண்ணளவாக 120 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதில் 50 குடும்பங்கள் சமூகத்தோடு இணையாமல் இருக்கின்றார்கள். அவர்கள் இணையாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒரு பகுதியினருக்கு தாழ்வு மனப்பான்மையும் மற்ற பகுதியினருக்கு சமூகத்தோடு இணைவதை கௌரவ குறைச்சலாகவும் பார்க்கின்றார்கள். இப்படியான பிரிவினர் எல்லா ஊர்களிலும் வாழ்கின்றார்கள். 40 குடும்பங்களின் உறுதியான பங்களிப்பு தான் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடாத்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. மிகுதி 30 குடும்பங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வருகை தராவிட்டாலும் ஏதோ இடத்தில் இணைகின்றார்கள்.


இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 20வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது;. இந்த மன்றத்தின் அங்கத்தவர்கள் மன்றத்தை தொடங்கும் போது இளைஞர்களாக இருந்தார்கள். இப்போது 40 வயதையும், 50 வயதையும் கடந்து விட்டார்கள். இந்த மன்றம் மற்றும் இப்படியான நிகழ்வுகள் இன்னும் 10, 12 வருடங்கள் மட்டுமே இடம்பெறும் அதற்கு பிறகு சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே தென்படுகின்றது.

ஆகவே எமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருடாவருடம் இப்படியான நிகழ்வுகளை தொடர்ந்து நடாத்தவேண்டும். நேற்று என்பது முடிந்த விடயம், நாளை என்பது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இன்று என்பது தான் நியம்.

 

மேலதிக புகைப்படங்களை kuppilanweb facebookil பார்க்கலாம்