குப்பிழான் சனசமூக நிலைய பொதுக்கூட்டமும், நிர்வாகிகள் தெரிவும், கடந்த கால கணக்கறிக்கையும்.


கடந்த 3 வருடங்களாக திரு சிவலிங்கம் தலைமையிலான நிர்வாகம் இயங்கியது. இந்த நிர்வாகமானது நேர்மையான முறையில் செயல்பட்டு ஒன்றரை கோடி பெறுமதியான சனசமூக நிலையத்தை கட்டி முடித்து பால் காச்சி படம் வைத்து சரியான முறையில் கணக்கறிக்கை வெளியிட்டு பதிய நிர்வாகத்திடம் அதன் எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளனர்.


புதிய நிர்வாக தெரிவு 31-01-2017 சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிர்வாக தெரிவானது குறிப்பிட்ட சிலர் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தெரிவு செய்யும் முயற்சி செய்யப்பட்ட போதும் முற்றுமுழுதாக சாத்தியபடவில்லை. தலைவராக திரு பொ.சந்திரவேல் தெரிவு செய்யப்பட்டார். திரு சந்திரவேல் சொக்கர்வளவு சோதி விநாயகர் ஆலய செயலாளராக கடமையாற்றி வருகின்றார். அவரின் தலைமையில் இந்த நிர்வாகம் நேர்மையாகவும் செயல் திறன் உள்ளதாகவும் செயல்படும் என்பதில் ஜயமில்லை. எப்படி திரு சிவலிங்கம் அவர்கள் நிர்வாகத்தை நேர்மையாகவும் கட்டுப்படாகவும் நடாத்தினாரோ அதே போல் இந்த நிர்வாகவும் சிறப்பாக இயக்குவது தலைவரின் கடமையாகும். இந்த நிர்வாகத்தில் முன்னாள் தலைவர் திரு தட்சணாமூர்த்தி மற்றும் திரு ஜோதிலிங்கம் அவர்களும் உள்வாங்கப்பட்டது ஒரு சிறப்பம்சமாகும்..


இனிவரும் காலங்கள் இந்த நிர்வாகத்திற்கு பெரும் சவாலாகவும் தமது செயற் திறனை நிரூபிக்கும் களமாகவும் அமையும். நிர்வாகத்தை கட்டுக்கோப்பாகவும், செயற்திறன் மிக்கதுமாக கொண்டு செல்ல வேண்டியது தலைவரின் கடமையாகும்.


புலம்பெயர் சமூகம் தமது உழைப்பை இந்த சனசமூக நிலையம் அமைவதற்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்பு வீணாக போய்விடக் கூடாது. நவீன காலத்துக்கு ஏற்ப இந்த சன சமூக நிலையத்தை அதாவது Community Centre ஜ இயங்கு நிலைக்கு கொண்டு வரும் பாரிய பணி உள்ளது. ஆரம்ப காலங்களில் சன சமூக நிலையங்கள் பெரும்பாலும் பத்திரிகை வாசிப்பதற்கும் வானொலி கேட்பதற்குமே பயன்பட்டது. அந்த காலங்களில் எமது ஊரில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வானொலி வைத்திருந்தார்கள். அதே போல் பத்திரிகையும். இன்று நவீன இணைய யுகத்தில் வாழ்கின்றோம் யாரும் பத்திரிகை வாசிக்க வேண்டும் என்று வர மாட்டார்கள். ஆகவே தற்போது எமது சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, பெண்களுக்கு, முதியோர்களுக்கு என்ன தேவையோ அதை செய்தால் மட்டுமே இதை செயல் திறன் உள்ளதாக மாற்றலாம். எமது கிராமத்துக்கு கிடைத்த இந்த பொக்கிசத்தை சரியாக பயன்படுத்தி எல்லோரும் பயன் பெற செய்வது புதிய நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். அது எதுவாகவும் இருக்கலாம் உங்கள் திறமைக்கு ஒரு சவால்.


ஏற்கனவே கனடா மன்றம் சில வேலைத்திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதனோடு ஏழை பிள்ளைகள் பயன்படுத்தும் வகையில் இணைய வசதிகள் ஏற்படுத்தல் (சமூக வலைத்தளங்கள் பாவிப்பதை தடை செய்தல்). நூல் நிலையத்திலுள்ள அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்க கொடுத்து அதில் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்குவதினூக வாசிப்பு பழக்கத்தை வளர்க்கலாம், சங்கீதம், நடனம், கராட்டே பயிற்சி வகுப்புக்களை நடாத்தலாம். இதற்கு குறைந்த கட்டணங்களை அறவிட வேண்டும். இலவசம் என்றால் அதன் பலா பலன்கள் மிகவும் குறைவாகவே இருக்கும். முக்கியமாக நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்த வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும் தவறான செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.


நிர்வாக உறுப்பினர்களின் விபரங்கள்.
தலைவர் - பொ.சந்திரவேல்
செயலாளர் - இ.நிரூபன்
பொருளாளர் - இ.மகேஸ்வரராஜ்
உப தலைவர் - க.பாலசுப்பிரமணியம்
உப செயலாளர் - தி.பிரதீபன்


போசகர்கள்
ந.சிவலிங்கம்
க.சின்னராசா

உறுப்பினர்கள் -
சி.ஜோதிலிங்கம்
சி.தட்சணாமூர்த்தி
தி.சசிதரன்
சி.திசாந்தன்
தங்கமலை
இ.இராகுலன்

கணக்கு பரிசோதகர் - செந்தமிழ்செல்வன்

 


கண்கறிக்கை இங்கு தரப்படுகின்றது.