லண்டன் மாநகரில் நடைபெற்ற செம்மண் இரவு 2017 பற்றிய பார்வை. updated 16-12-2017


வழமை போல் இம்முறையும் செம்மண் இரவு நிகழ்வு நடைபெற்று முடிந்தது. இந் நிகழ்வானது கடந்த 09-12-2017 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினராக திரு வைத்திலிங்கம் ஜங்கரலிங்கம் அவர்கள் தனது பாரியாருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


பிரதம விருந்தினரான திரு ஜங்கரலிங்கம் அவர்கள், ஆரம்ப காலம் முதல் தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்து வருகின்றார். குறிப்பாக அகதிகளாக வந்த எமது ஊர் இளைஞைர்களை பொறுப்பேற்று அவர்களுக்கான உணவு உறைவிடம் போன்றவற்றை வளங்கினார். குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தின் ஆரம்ப கால உறுப்பினரான திரு ஜங்கரலிங்கம் அவர்கள் மன்றத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். பாடசாலை பிரதான மண்டபம் அமைப்பதற்கு வேண்டிய நிதி திரட்டும் செயல்பாடுகளிலும் தமது பங்கை வளங்கினார். இரண்டு ஆண்டுகள் மன்றத்தின் தலைவராக பொறுபேற்று பல்வேறு நிகழ்வுகளை சிறப்பாக செய்து காட்டினார். மன்ற உறுப்பினர்களால் முன் வைக்கப்படும் நல்ல செயல்பாடுகளுக்கு தமது ஆதரவை வழங்கினார்.


திரு திருமதி இரத்தினபாலன் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து வரவேற்பு நடனமும், கிராமிய கீதமும் இடம்பெற்றது. மன்ற தலைவர் திரு அருந்தவராசா தலைமையுரையாற்றினார்.

திரு விக்கினராஜா மற்றும் திருமதி தயாழினி அவர்கள் நிகழ்வுகளை வழி நடத்தினார்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக திரு சச்சிதானந்தம் செயலாற்றினார். சுவிஸிலிருந்து வருகை தந்த திரு வரதராஜன் அவர்கள் பாடிய பழைய பாடல்கள் செவிக்கு இனிமை சேர்த்தது. நமது ஊர், வெளியூர் சிறார்களும் பெரியோர்களும் பல்வேறு கலை நிகழ்வுகளை வளங்கினார்கள்.


திரு இரத்தினபாலன் அவர்களின் எழுத்தில் உருவான பக்திப் பாடல்கள் தாங்கிய இசைப் பேழை திரு இரத்தினபாலன் அவர்களால் வெளியிடப்பட்டது. திரு இரத்தினபாலன் நமது கிராமத்தின் சிறந்த கவிஞன். ஏற்கனவே 2001 ஆண்டு தனது முதலாவது இசைப் பேளையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் செம்மண் இரவு பிரசுரம் வெளியிடப்பட்டது. இந்த பிரசுரத்தில் பிரதமவிருந்தினரின் வாழ்த்துச் செய்தியோடு, திரு கணேஸ்குமார்,திரு அசோகன் மற்றும் திரு விக்கினராஜா அவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றது. மேலும் விக்கினேஸ்வரா மன்றத்தின் வருடாந்த கணக்கறிக்கையும் இடம்பெற்றுள்ளது.
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தின் தலைமகன் திரு ஜங்கரலிங்கம் அவர்களின் 60வது பிறந்த நாள் நிகழ்வு கேக் வெட்டி கொண்டாடபட்டது.

இனி வரும் காலங்களில் நிகழ்வுகள் இன்னும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகின்றோம்.

 

 

 

மேலதிக படங்கள் குப்பிழான் முக புத்தகத்தில்