சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அவர்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றத்தினால் கௌரவிக்கப்பட்டார். updated 15-08-2016


 

சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்கள் இல்போர்ட் விநாயகர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு தொடர் சொற்பொழிவு ஆற்றுவதற்காக ஆலய நிர்வாகத்தினரால் அழைக்கப்பட்டிருந்தார். குப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தின் பக்தனான திரு சிவ மகாலிங்கம் அவர்கள் கட்டாயம் கற்கரை கற்பக விநாயகனின் கொடியேற்ற திருவிழாவில் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக தனது சொற்பொழிவை 05-08-2016 வரை மட்டுமே செய்திருந்தார். குறுகிய காலமே அவர் லண்டனில் தங்கியிருந்தார். பிரித்தானியாவில் இப்போது விடுமுறை காலமாதலால் பெருமளவானவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார்கள். ஆனாலும் எமது மண்ணின் மைந்தனை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக குறுகிய ஏற்பாட்டில் அவருக்கான சிறப்பான வரவேற்பு இடம்பெற்றது. அதாவது 30-07-2016 ஞாயிற்றுக்கிழமை மதியபோசனத்துடன் கூடிய கௌரவிப்பு விழா இடம்பெற்றது.