குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா மலர் வெளியிட்டு விழா . updted 08-07-2014

குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா மலர் 02-07-2014 புதன்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருமதி தங்கமுத்து தம்பித்துரை, திரு சி.ஜோதிலிங்கம் , திரு ஞா.சபேசன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைமை உரையை பாடசாலை அதிபர் த.தவராஐh அவர்களும், வாழ்த்துரையை திரு ந.சிவலிங்கம் அவர்களும் நிகழ்த்தினர்.
வெளியீட்டுரையை சிவத்தமிழ் வித்தகர் சிவ மகாலிங்கம் அவர்கள் நிகழ்த்தினார். மலரின் ஆய்வுரையை பிரபல அரசியல் ஆய்வாளர் திரு ஜோதிலிங்கம் அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தினரால். பாடசாலையின் தேவைகளுக்காக ஒலிபரப்பு சாதனம் அன்பளிப்பாக வளங்கப்பட்டது. இறுதியாக நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.