அண்மையில் பொலிசாரால் குப்பிழானில் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டமும் அதன் பின்னணியும். updated 20-11-2013


தமிழர்களின் கலை, கலாச்சாரம், உணவு உட்பட சகல விடயங்களும் இந்து மதத்தை அடிப்படையாக வைத்தே காலம் காலமாக இருந்து வந்தது. ஆனால் இன்று எமது பண்பாடு கலை கலாச்சாரம் வேகமாக மாறி வருகின்றது. இதற்கு காரணம் கட்டாய மதமாற்றம் ஆகும். அம்பாறை போன்ற மாவட்டங்களில் தொன்மையாக வாழ்ந்த தமிழர்களின் வறுமை மற்றும் கல்வியறிவு இன்மையை பயன்படுத்தி முஸ்லீம்களாக மாற்றப்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். 6 மாதத்திற்கு முன்பு கூட 100 தமிழ் குடும்பங்கள் முஸ்லீம்களாக மாற்றப்பட்ட நிகழ்வை பல ஊடகங்கள் சுய தணிக்கை செய்த போதும் தினக்கதிர் போன்ற ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்ததை அறிவோம். அதே போன்று தமிழ் தாயக பிரதேசம் எங்கும் கிறிஸ்தவ தேவலயங்களை நிறுவி கட்டாய மதமாற்றம் செய்யப்படும் கொடுமையான நிகழ்வு நடந்தேறி வருகின்றது. இந்த மதமாற்றும் முயற்சியில் உண்மையான கிறிஸ்தவர்கள் இறங்காமல் அண்மையில் தமது சுயநலத்திற்காக மதம் மாறிய இந்துக்களை கொண்டு இந்த இழி செயலை செய்து வருகின்றார்கள். கடந்த 3 தசாப்த காலமாக ஏற்பட்ட கடும் போர் அதனால் ஏற்பட்ட உயிரழிவு, சொத்தளிவு இதன் தாக்கத்தால் உருவான வறுமை, மனப்பாதிப்புக்கள் ஆகியவற்றை தமக்கு சாதகமாக்கிய பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகள் பலரை வஞ்சகமான முறையில் மதமாற்றம் செய்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. எம் மதமும் சம்மதம் என்ற வெறும் வாய்ப் பேச்சுக்கு அப்பால் எமது கலை கலாச்சாரத்தில் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணி கொண்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பழைய கிறிஸ்தவ பிரிவுகள் இந்துக்களுடன் இணைந்து செயல்பட்டாலும் தற்போது புதிதாக முளைத்துள்ள கிறிஸ்தவ பிரிவுகள் இந்துக்களை சாத்தானாக தான் பார்க்கின்றார்கள். இந்து மத நம்பிக்கைகளை இழிவாக விமர்சனம் செய்கின்றார்கள்.

அந்தவகையில் தான் தனி தமிழ் சைவ கிராமமாகிய குப்பிழானில் கட்டப்பட்ட தேவ சபை. தமிழ், சைவ பாரம்பரியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு சிவகுமார் ஆசிரியரின் பூர்வீக வீட்டை தாம் வாழ்வதற்காக என்று சொல்லி திருமதி அருந்தவம் அருணாச்சலம் அவர்களால் 10 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது. இந்த சொத்து விற்பனையில் முன்னின்று செயற்பட்ட முக்கிய நபர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அந்த சொத்தை அருந்தவம் வாங்குவதற்கு காரணமாக இருந்தார். ஆனாலும் திரு சிவகுமார் ஆசிரியருக்கு இந்த வீடு தவறான வழியில் பாவிக்கப்பட போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. ஆரம்பத்தில் வீட்டில் மட்டும் அவர்களின் சமய நிகழ்வுகளை செய்து வந்தனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் பேரவலம் நடந்த சந்தர்ப்பத்தை பாவித்து உரிய அனுமதிகள் பெறப்படாமல் பாரிய கட்டிடத்தை வீட்டின் பின்புறமாக எழுப்பினார்கள். 2009 காலப் பகுதியென்பது மிகவும் கொடூரமான நாட்கள். கடத்தல்கள், கொலைகள் பெருமளவு நிலவிய காலம். யாரும் வாயே திறக்க அஞ்சிய காலம். சாப்பிடுகிறதுக்கு மட்டுமே வாயை திறந்தார்கள் என்றே சொல்லாம். கட்டிடம் அமைவதை அயலவர்கள் தெரிந்து கொண்டாலும் யாரும் ஒன்றும் கதைக்கவில்லை. கட்டிடம் மெல்ல மெல்ல எழும்பி முடியும் தறுவாயில் எமது இணையத்தில் இது சம்மந்தமாக சில கட்டுரைகளை பிரசுரித்திருந்தோம். இதற்கெதிராக குறிப்பிட்ட சில இளைஞர்களும், முதியோர்களும் சாத்வீக போராட்டங்களை மேற்கொண்டு ஊடகங்கள், மற்றய ஊர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்கள். பல சைவ பெரியார்கள் எமது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவும் உதவிகளும் செய்ய முன்வந்த போதும் நாம் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம் என்பதை மறுக்கமுடியாது அதற்கு காரணம் யாரும் முற்றுமுழுதாக அர்பணிக்க விருப்பமின்மையே ஆகும்.

மக்களின் சாத்வீக போராட்டங்களை மதிக்காமல் தேவசபையை திறக்க முற்பட்ட வேளை எமது அயல்கிராம இளைஞர்கள் தேவ சபையை தாக்க முற்பட்ட வேளை தேவசபை கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டது. பிரச்சனைகள் மேலும் வளராமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரதேச சபையினால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தேவசபை கட்டிடத்தை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர் பாதிரிமாரின் அழுத்தம் காரணமாக அனுமதி கொடுக்க DS office முயற்சித்த போதும் எம்மவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊடக பிரச்சாரத்தால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது. அதோடு இதில் மும்முரமாக ஈடுபட்டவர்களும் ஒதுங்கி கொண்டனர். ஒவ்வொரு மனிதனும் தமக்கு ஏதேனும் ஒன்று கிடைக்குமென்றால் தான் இதில் நிலைத்து நிற்பார்கள் இல்லையென்றால் நிலைத்து நிற்கமாட்டார்கள். தேவ சபைக்கு சீல் வைக்கப்பட்ட போதிலும் அதன் செயல்பாடுகளை யாராலும் தடுக்க முடியவில்லை. அவர்கள் தமது நிகழ்வுகளையும் அட்டூளியங்களையும் இன்று வரைக்கும் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். அயலில் உள்ள பெண்கள் கிணற்றடியில் குளிப்பதற்கே கூச்சப்படும் நிலமை இருக்கின்றது. தேவசபை கட்டித்தில் வசிக்கும் நபர்கள் உயரமான கட்டிடத்தில் ஏறி நின்று சபல புத்தியால் கிணற்றடியில் குளிக்கும் பெண்களை பார்வையால் அசிங்கப்படுத்துகின்றார்கள் அல்லது விசில் அடிக்கின்றார்கள்.


பலருக்கு அல்லலோய மதப் பிரிவினர் எப்படி சமய நிகழ்வுகளை செய்கின்றார்கள் என்பதை அறிய மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஓலம் இட்டு கத்துவார்கள் அப்போது பக்கத்தில் இருப்பவர்களின் காது செவிப்பறையே வெடித்து விடும் என்ற அளவுக்கு இருக்கும்.
இந்த சத்தங்களை பொறுக்க முடியாமல் மீண்டும் ஒரு முறை தேவ சபை மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலின் பின்னணி தான் பொலிசாரினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டம். தடை செய்யப்பட்ட கட்டிடத்தில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் பொலிசாரின் வலுவான ஆதரவுடனேயே நடப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றார்கள். அது உண்மையாக கூட இருக்கலாம் இந்த கட்டிடத்தினுள் செல்ல அருந்தவம் குடும்பத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு ஆனால் மற்றவர்கள் செல்வதற்கு அனுமதியில்லை அப்படி இருந்தும் அவர்களுடைய ஜெப கூட்டங்கள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றது. அப்படி இருக்கும் போது அதை தடுக்காத பொலிசார் மக்களை சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் நாம் அதை பார்த்துக்கொள்வோம் என்று பிரசங்கங்கள் செய்கின்றார்கள்.சாத்தான் வேதம் ஓதுவது யாருக்காக என்பது விழங்குகின்றதா.


ஒவ்வொரு சமூகத்திற்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகள் இருக்கும். நூறு வீதம் இந்துக்கள் வாழும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அந்த சுற்றாடல் மக்களின் அனுமதியில்லாமல் இந்த கட்டிடத்தை சட்டவிரோதமாக அமைத்தது பாரிய மனித உரிமை மீறலாகும். மனசாட்சியே இல்லாத இந்த மனித ஜென்மங்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்த கொள்வது கடினம் தான்.

100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களை பெளத்த புனித பூமி என்று சொல்லி அழிக்கும் இலங்கை அரசு. தமிழர்களின் தனித்துவத்தை அழிப்பதற்கு திட்டமிட்டரீதியில் தேவலயங்களை அமைப்பதற்கு அனுமதி கொடுத்து வருகின்றது.

 

இது தொடர்பான இணைப்பு

குற்ற செயல்களை தடுப்பதற்க்கு கிராம மக்கள் ஒன்றிணைய வேண்டும்சுண்ணாகம் பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி. updated06-11-2013

கிராமம் தோறும் குற்ற செயல்கள் அதிகரித்த  வண்ணம் உள்ளன இதனை தடுக்க வேண்டும் எனில் மக்கள் நலனுக்காக சகல கிராம மக்களும் ஒற்றுமையாக வேண்டும் என சுண்ணாகம் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்தார் .

      குப்பிளான் தெற்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இதனை தெரிவித்தார் மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் எல்லோரும் ஒன்றானவர்கள் எமக்கு எலோருக்கும் இலங்கையின் சட்டம் ஒன்றுதான் வடக்குக்கு ஒன்று தெற்குக்கு வேறு ஒன்று என்று இல்லை எனவே தான் நாம் சட்டத்தின் முன் வேறுபாடுகள்  அற்றவர்கள். நாம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சட்டத்தினை மீற்பவர்கள் தகுந்த தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

      இங்கு சட்டத்தினை மீறுபவர்கள் மீது பராபட்ட்சம் காட்டபடமாட்டாது பெரும்பாலும் சட்டத்தினை மீறுபவர்கள் இளைஞர்கள் ஆக காணப்டுகின்றனர். இதில் முக்கியமாக மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்ககள் பெரும்பாலும் குற்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

 

 

குப்பிளான் கிராமம் ஆனது இயற்கை வளம் செழிக்கும் கிராமம் ஆகும் இங்கு கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி சகலரும் முனேறவேண்டும். இவ் கிராமத்தினர் கல்வியில் சிறந்து விளங்குபர்கள் பலர் அரச சேவையில் இருபவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இவ்வாறன இக் கிராமத்தில் அண்மை காலமாக குற்றசெயல்கள் அதிகரிப்பதனை காணமுடிகின்றது. இவ்வாறான குற்றசெயலை தடுப்பதற்கு பொது மக்கள் ஆகிய நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் குற்ற செயல்களை கண்டதுடன் கிராமசேவகர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுபதுடன் குற்ற வாளிக்கும் தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியும்  என தெரிவித்தார்.