யாழ்.குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபைக் கூட்டம் இரு வேறு காரணங்களால் பிற்போடப்பட்டது. updated 25-04-2015

 


யாழ்.குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய பரிபாலன சபையின் பொதுக் கூட்டம் இன்று சனிக்கிழமை(25.04.2015) நடைபெறுவதாகவிருந்த போதும் அது இரு வேறு காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 04 மணிக்குக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவித்து வருடாந்த மஹோற்சவ உபயகாரர்கள் மற்றும் திருப்பணிகளுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் பொதுச் சபையில் அங்கத்துவம் பெற்றவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 25 இற்கும் குறைவான எண்ணிக்கையானவர்களே வருகை தந்திருந்தனர்.அத்துடன் ஆலய பரிபாலன சபையின் பொருளாளர் சி.ரதீஸ்குமார் தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணத்தால் இன்றை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.இதன் காரணமாக இன்றைய கூட்டத்தில் பொருளாளரின் கணக்கறிக்கையும் சமர்ப்பிக்க முடியாத நிலையும் காணப்பட்டது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தைப் பிற்போடுவதற்கு நிர்வாக சபை தீர்மானித்தது.இதன்படி இன்று கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தரப்பினர் அனைவரிடமும் நிர்வாக சபை சுமூகமான முறையில் கலந்துரையாடியதன் அடிப்படையில் எதிர்வரும் 21 நாட்களுக்குள் பொதுக் கூட்டத்தை மீள நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு முதல் நாள் பொதுமக்களுக்கு உரிய அறிவிப்புக்களை வழங்குவதெனவும் உத்தேசிக்கப்பட்டது.


இன்றைய கூட்டத்தில் ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்தியதுடன்; வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றது. இருந்த போதும் தற்போதைய நிர்வாக சபையின் நிதானமானமான செயற்பாட்டாலும், சிலரின் வரவின்மையாலும் பெரும் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டது.


செய்தித் தொகுப்பு:-ரவி.


 

புகைப்படங்கள்
திசாந்தன் மற்றும் ரவிசாந்