குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய மகோற்சவ பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன். updated 13-05-2012குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 26-04-2012 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, கடந்த 8 நாட்களாக வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடைபெற்றது. 04-05-2012 அன்று இரதோற்சவம் நடைபெற்றது. இவ் இராதோற்சவத்திற்கு பெருமளவான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலை 6.30 மணியளவில் அபிஷேகம் பூஜைகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 9 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை இடம்பெற்றது.

அதனை அடுத்து அம்பாள் உள்வீதியிலே ஆடி அசைந்து வருகின்ற அற்புதக் காட்சியினைக் காணக் கூடியதாக இருந்தது. மலர்கள் தூவ மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்த அம்பிகையை அடியவர்கள் மெய்யுருக வழிபட்ட காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைப்பதாய் அமைந்திருந்தது.


அதனைத் தொடர்ந்து 10.45 மணியளவிலே அம்பாள் அழகிய தேரிலே ஆரோகணித்தார். தொடர்ந்து திருத்தேர் முன்பாக சேந்தனாரால் இயற்றப்பட்ட திருப்பல்லாண்டு ஓதப்பட்டது. தொடர்ந்து அடியவர்களால் திருத்தேர் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை உடைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


பகல் 11.15 மணியளவில் ஊர் மக்கள் ஒன்று கூடி வடம் இழுக்க தெருத்தேர் மெல்ல அசைந்து அம்பாள் பவனி வந்த திருக்காட்சி அந்த தேவர்களே மயங்கிடும் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. நாதஸ்வரம் தவில் முழங்கிட அரோகரா என்ற கோசத்துடன் அடியவர்கள் ஆனந்தக் கூத்தாட அன்னை ஆதிபராசக்தி அடியவர்களுக்கு எழுந்தருளி அருள் பாலித்தாள்.

திருத்தேர் பவனி வந்த போது அடியவர்கள் பலர் கற்பூரச் சட்டி ஏந்தியும், அங்கப் பிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியமையையும் காணக்கூடியதாக இருந்தது.


கொடியிறக்கம்
05.05.2012 அன்று தீர்த்தத்திருவிழா இடம்பெற்ற தினம் மாலை ஐந்து மணியளவில் எம்பெருமாட்டிக்கு அபிசேக ஆராதனைகள் மற்றும் விசேச பூயைகள் நடைபெற்று அதன் பின்னர் அடியவர்களின் கூட்டு பிரார்த்தனை வழிபாடுகளும் சிறப்புற இடம்பெற்று அனைத்து அடியவர்களும் இதில் கலந்து சிறபித்ததை காணக்கூடியதாக இருந்தது. அதன் பின்னர் அம்பாள் வசந்த மண்டபத்திலிருந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஆடைகளுடனும்..... தங்க நகைகள் தக தக என கண்ணை பறிக்கும் மின்னல் போன்ற ஆபரணங்களுடனும்.... கொடியிறக்கத்தை காண்பதற்கு கொடித் தம்பத்திர்க்கருகில் அமர்த்தப்பட்டாள்.... தவில் நாதஸ்வரங்கள் இன்னிசை கானம் பொழிய அந்தணர்கள் மந்திரம் ஓத அனைத்து அடியவர்களும்... தங்கள் துக்கங்களை எல்லாம் மறந்து அங்கே மெய் சிலிர்த்து இருந்ததை காணக்கூடியதாக இருந்தது... கொடியிறக்கம் முடிவடைந்ததும் கொடிசீலையுடன் அம்பாள் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து இருக்கையில் அமந்தாள். அதன் பின் சண்டேஸ்வர உத்சவம் இடம்பெற்று குருக்கள் தரிசனை நடந்ததை காணக்கூடியாதாக இருந்தது. திருவிழா நாட்களில் வாத்தியங்களை வாசித்த தவில் குழுவினர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் ஆலய நிர்வாக சபையினர்களால் கௌரவிக்கபட்டனர். அடியவர்கள் அனைவரும் குருதரிசனம் பெற்று பிரசாதங்கள் வாங்கி வீடு சென்றனர்.

பூங்காவனம்
06.05.2012 அன்று ஆறு மணியளவில் அபிசேக அராதனைகளுடன் ஆரம்பிக்கபட்டு, மற்றும் விசேட பூயை வழிபாடுகளும் இடம்பெற்றன. அதன் பின்னர் தாவடியில் இருந்து விசேடமாக அழைக்கபட்ட தவில் வாத்திய கலைஞர்களின் தவில் முழக்கமும் இடம்பெற்றது. அதன் பின் நிர்வாக சபையினரால் ஒழுங்கு படுத்தபட்ட சங்கீத இசை கச்சேரியும், அந்த நிகழ்ச்சியின் முடிவின் பின் வெளியூர் நடுத்தர இளைஞர்களினால் வில்லிசை கச்சேரியும் நடைபெற்றது. அதன் பின் வசந்தமண்டப பூயையும் அம்பாள் வீதியுலா வந்து விழா இனிதே நிறைவுற்றது.

  • நன்றி - தகவல் மற்றும் படங்கள் குப்பிளான்லிருந்து தனுஷன்