தமிழ்நாட்டிலுள்ள பேரூர் ஆதினத்தால் மண்ணின் மைந்தன் சிவபாதம் கணேஸ்குமார் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


கடந்த 11-03-2017 சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் சத்வித்யா சன்மார்க்க சங்க 103 ஆண்டு விழாவில் சாந்தலிங்க இராசசாமி அடிகளார் அவர்களால் திரு சிவபாதம் கணேஸ்குமார் அவர்களுக்கு 'இந்து இளம்பரிதி' என்னும் விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டார். திரு கணேஸ்குமாரின் சமய, இலக்கியத் தமிழ்ப் பணிகளை பாராட்டி இந்த விருது வளங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


அருள் திரு சாந்தலிங்க அடிகளார் குரு பூசை விழாவில் 09-03-2017 அன்று திரு கணேஸ்குமார் அவர்கள் குருவருளும் திருவருளும் என்ற தலையங்கத்தில் சிறப்புரையாற்றினார்.

திரு கணேஸ்குமார் அவர்கள் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமாவார்.