குப்பிழான் விவசாயிகள் சம்மேளனம் உருவாக்கமும் அண்மையில் நடைபெற்ற புதிய கட்டிட திறப்பு விழாவும். updated 24-01-2016

 


விவசாய சம்மேளனமானது 1997 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. விவசாய பூமியான குப்பிழான் கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்களுக்கான விவசாய உள்ளுடுகள் போன்றவற்றை பெறுவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதற்காக நமது கிராமத்திலேயே ஒரு விவசாய சம்மேளனம் உருவாக்கப்பட்டது. உருவாக்கத்தின் போது அதன் தலைவராக திரு வைத்தீஸ்வரன் அவர்களும் செயலாளராக திரு நவரத்தினராசா அவர்களும் நின்று ஒரு நிர்வாகத்தை அமைத்தார்கள். ஒரு போர் சூழ்நிலையான காலகட்டத்தில் விவசாயிகளுக்கான சகல உதவிகளையும் இந்த நிறுவனம் செய்து வந்தது. 2000ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் முயற்சியால் விவசாயிகளக்கான உள்ளுடுகள் விற்பனை நிலையம் ஒன்றை ஸ்தாபித்து வீடு ஒன்றில் நடத்தி வந்தார்கள்.


அப்போது எமது கிராமத்தின் மைந்தன் அமரர் ஆ.மகாலிங்கம் அவர்கள் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்தார். அவரின் முயற்சியால் 7 பரப்பு அரச காணி விவசாய சம்மேளனத்திற்கு வழங்கப்பட்டது. சம்மேளனத்தின் தொடர்முயற்சியால் 2004 ஆம் ஆண்டு உள்ளீடுகள் விற்பனை நிலையத்திற்கான 2 அறைக் கட்டிடத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டு அக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.


ஒன்று கூடும் மண்டபம் முக்கிய தேவையாக இருந்து வந்தது. எமது ஊரவரும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான திரு பஞ்சலிங்கம் அவர்களின் முயற்சியால் 2 வட்சம் பெறப்பட்டு வேறு சிலரின் உதவியோடும் கட்டிடம் அமைக்கப்பட்டு அரைவாசியில் போதிய நிதி இல்லாமையால் நிறுத்தப்பட்டது. 2014 ஆண்டு அரசாங்கத்தால் கிராம அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி இந்த கட்டிடத்திற்கு ஒதுக்கப்பட்டது. குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா 1லட்சம் நிதி உதவியை வழங்கியது. பொதுமக்களின் பங்களிப்பையும் பெற்று அண்மையில் அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் அவர்களால் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.


விவசாயிகளுக்கு இந்த மன்றம் பெரும் சேவைகள் ஆற்றி வருகின்றது. விவசாய உள்ளீடுகள், மருந்துகள், உரவகைகள், வங்கிகள் மூலம் விவசாய கடன்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல மற்ற கிராம மக்களும் பயனடைந்து வருகின்றார்கள். முற்றுமுழுதாக திரு நவரத்தினராசா அவர்களின் முயற்சி தான் இந்த விசாய சம்மேளனம். நமது கிராமமக்கள் திரு நவரட்ணராசா அவர்களையும் இந்த விவசாய சம்மளனம் செய்யும் சேவைகளையும் பராட்டி ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து என்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். தளபாடம், மலசலகூடம் இன்னும் இந்த கட்டிடத்திற்கு தேவையாக உள்ளது.

 


எழுத்தாக்கம் - ந. மோகனதாஸ்
படங்கள் - சி.திசாந்தன்.

 

 

தொடர்புபட்ட செய்தி

யாழ். குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015

குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத் தலைவர் திரு. செ.நவரத்தினராசா அவர்களது தலைமையில் குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டியத்தொகுதியில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வின்; சிறப்பு விருந்தினர்களாக திரு. நந்தகோபாலன் (பிரதேச செயலாளர், வலி தெற்கு, உடுவில்), திரு. கு.சுரேஸ்குமார் (கணக்காளர், கமநல அபிவிருத்தி திணைக்களம் யாழ்ப்பாணம்), திரு. நா.பஞ்சலிங்கம் (மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, யாழ்ப்பாணம்) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திரு. பி.மயூரதன் (கிராம சேவையாளர், குப்பிழான் தெற்கு ஜே-210),, திரு. என்.நவசாந்தன் (கிராம சேவையாளர், குப்பிழான் வடக்கு ஜே-211), திருமதி அமிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே-210), ப.மீனலோஜினி (வி.போதனாசிரியர் உடுவில்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

உருளைக்கிழங்கு விவசாயம் இங்கு உடுவில், கோப்பாய் பிரதேச செலயகங்களை உள்ளடக்கிய வகையில் ஒரு வரையறைக்குள்தான் நடைபெறுகின்றது. அதாவது உருளைக்கிழக்கின் உற்பத்திச் செலவு மிகவும் அதிகமாக இருக்கின்றது. ஆகவே விதைகிழக்கு மானியம் வழங்கப்பட வேண்டும் என்பதோடு, உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான சில மானியங்களையும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றேன். ஏனென்றால் இங்கு உற்பத்தியாகின்ற கிழக்குகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் கிழக்குகளுடன் போட்டிபோட்டு விற்கமுடியாத நிலைமை இருக்கின்றது. ஆகவே உற்பத்திச் செலவினைக் குறைக்க வேண்டும்.

அறுவடை நேரத்தில் வரியை அதிகரிக்க வேண்டும் அல்லது ஒரு நிர்ணயிக்கப்பட்ட விலையில் சதொச போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் இந்தக் கிழக்கினை பெறவேண்டும். இவ்வாறாக இந்த விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமே உருளைக்கிழங்கு விவசாயத்தை வடக்கிலே சிறிதுசிறிதாக முன்னெடுத்து பாரியளவிலே செய்யக்கூடிய நிலை உருவாகும்.

இதற்காக அரசாங்கத்திலே விவசாய அமைச்சருடன் பேசி உருளைக்கிழக்கு விவசாயத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முடியற்சி எடுப்பேன் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது குப்பிழான் வடக்கு ஜே-211, குப்பிழான் தெற்கு ஜே-210 பிரிவுகளிலிருந்து கிராம சேவையாளர்களால் தெரிவுசெய்யப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு சிங்கப்பூர் க.கிருஸ்ணர் அவர்களின் அனுசரணையில் இடம்பெற்றது.

 


நன்றி அதிர்வு