ஆன்மீகவாதியின் மறைவும் சமூகம் சார்ந்த பொது அமைப்புக்களின் பங்களிப்பும் சில அமைப்புக்களின் பொய் முகங்களும். updated 09-03-2016


குப்பிழான் கிராமத்திலும் புலம்பெயர் தேசத்தில் பல்வேறு பொது ஸ்தபானங்கள் இயங்குகின்றன பொது அமைப்புக்கள் என்று வரும் போது ஆலய நிர்வாகங்கள், சமூக அமைப்புக்கள, கல்வி சார்ந்த அமைப்புக்கள், விளையாட்டுக்கழகம், புலம்பெயர் அமைப்புக்கள்.

ஆலய நிர்வாகங்கள் - எமது கிராமத்தில் உள்ள முக்கிய ஆலய நிர்வாகங்கள் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம், சொக்கர்வளவு சோதி விநாயகா ஆலயம், கன்னிமார் அம்பாள் ஆலயம், கேணியடி வைரவர் கோவில், காளி கோவில் போன்ற 3 பெரிய ஆலயங்களும், 15 சிறிய கோவில்களும்.

பொது அமைப்புக்கள் - விக்கினேஸ்வரா சன சமூக நிலையங்கள், குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம், விவசாயிகள் சம்மேளனம், கிராம அபிவிருத்தி சபை.

விளையாட்டுக் கழகங்கள் - குறிஞ்சிகுமரன் விளையாட்டுக் கழகம், விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்.

கல்வி சார்ந்த அமைப்புக்கள் - தனியார் கல்வி நிலையங்கள், பாடசாலை, வடக்கு, தெற்கு முன்பள்ளி மற்றும் அறநெறி பாடசாலைகள்.

புலம்பெயர் அமைப்புக்கள் - குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா, விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா, விக்கினேஸ்வரா மன்றம் சுவிஸ், கலைவாணி கலை மன்றம் மொன்றியல்.

இலங்கையில் உள்ள சகலராலும் மதிக்கப்பட்ட ஆன்மீகவாதி மாதாஜி அம்மையாரின் இறுதி நிகழ்வுகளில் எமது சமூகம் சார்ந்த பொது அமைப்புக்கள் எத்தகைய பங்களிப்பை வழங்கியது என்பதை ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

ஆலய நிர்வாகங்களை எடுத்துக் கொண்டால் கற்கரை கற்பக விநாயகர் ஆலய புதிய நிர்வாகம் மாதாஜியின் இறுதி யாத்திரையில் பங்கு கொண்டு பனர் வைத்து அஞ்சலி செலுத்தி இம்முறை முதன் முதலாக தமது சமூகத்திற்கான பங்களிப்பை வளங்கியுள்ளார்கள். சொக்கர்வளவு ஆலயமும், கன்னிமார் ஆலயமும் பல வருடங்களாகவே சமூகம் சார்ந்த பல விடயங்களை செய்து வருகின்றார்கள். அதே போல் கேணியடி வைரவர் நிர்வாகமும் இறுதி நிகழ்வில் தமது பங்களிப்பை வளங்கினார்கள். மற்றைய ஆலயங்கள் தமது பங்களிப்பை செய்யவில்லை.

பொது அமைப்புக்களை பொறுத்தவரை விவசாயிகள் சம்மேளனமும் அதன் தலைவரும் காத்திரமான பங்களிப்பை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வழங்கி வருகின்றனர். மற்ற பொது அமைப்புக்கள் பார்வையாளர்களாகவே இருக்கின்றனர்.

அடுத்தது எமது இரண்டு விளையாட்டுக் கழகங்கள். இளைஞர்களால் நிர்வகிக்கபடுகின்ற அமைப்பு மனித வளம், நிதி வளம் உள்ள அமைப்பு. இவர்கள் சமூகம் சார்ந்து என்ன செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே இல்லை. ஆன்மீகவாதியின் இறுதி ஊர்வலத்தை இன்னும் இவர்களால் மிக சிறப்பாக செய்திருக்க முடியும் ஆனால் அவர்கள் ஒரு அஞ்சலி பிரசுரத்தை தானும் பிரசுரிக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம் எதிர்காலத்தில் இப்படியான தவறுகள் விடாமல் சமூக சிந்தனையோடு செயல்பட வேண்டும் என்பது எல்லோரிடைய விருப்பமும் ஆகும்.


கல்வி சமூகம்- பாடசாலை சமூகமானது அதிபர் உட்பட பெரும்பாலானவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள். அவர்கள் ஆன்மீகவாதியின் மறைவுக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருக்கின்றார்கள். அவரின் மறைவுக்கு அஞ்சலி பிரசுரம் வெளியிட்டு அஞ்சலி நிகழ்வுகளிலும் பங்கு பற்றி அன்னாருக்கு இறுதி விடை கொடுத்து எல்லோருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து இருக்கின்றார்கள். இப்போதைய கால கட்டத்தில் பாடசாலையை விட தனியார் கல்வி நிலையங்களை தான் மாணவர்கள் பெரிதும் நம்பி இருக்கின்றார்கள். எமது கிராமத்தில் 3 மேற்பட்ட கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. அவைகள் தனியார்களால் நடாத்தப்பட்டாலும் அவையும் பொது அமைப்புக்கள் தான் அவர்களிடமிருந்து தான் எதிர் கால சந்ததியினர் உருவாகின்றனர். படித்தவர்கள், இளம்சந்ததியினரை வழிகாட்ட போகின்றவர்கள் அவர்களுக்கு சமூகம் சார்ந்த சிந்தனை எல்லோரையும் விட கூடுதலாக இருக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் ஒரு அஞ்சலி பிரசுரத்தைதானும் விடவில்லை என்பது கவலைப்பட வேண்டிய விடயமாகும்.

புலம்பெயர் அமைப்புக்கள் - புலம்பெயர் தேசத்தில் அந்தந்த நாடுகளில் இறப்பவர்களுக்கு தமது அஞ்சலியையும் பங்களிப்பையும் செலுத்த தவறுவதில்லை. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதிலும் ஊரின் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். ஆன்மீகவாதியின் மறைவுக்கு தமது இரங்கலை தெரிவித்து தமது வரலாற்று பங்களிப்பை செய்துள்ளனர்.

இன்பத்திலும் துன்பத்திலும் கால நேரம் பாராமல் பெரும் பங்காற்றி தமது பங்களிப்பை செலுத்தும் ஊர் பெரியவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பற்றும் நமது வடமாகண சபை உறுப்பினர் என்றும் நன்றிக்கு உரியவர்களே.