கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற திரு சிவபாதம் கணேஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழாவை சிறப்பித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள் அதன் ஏற்பாட்டாளர்கள்.
updated 04-05-2011


நன்றி தெரிவிக்கின்றோம்

03-04-2011 அன்று எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட திரு சிவபாதம் கணேஸ் எழுதிய இந்து சமயமும் இந்து நாகரிகமும் என்ற தொகுப்பு நூல் வெளியீட்டுக்கு குறுகிய நேர அழைப்பை ஏற்று வருகை தந்து வாழ்த்து தெரிவித்த அறிஞர் பெருமக்களுக்கும் மண்டபம், ஒலிபெருக்கி வசதி செய்து தந்த மதியழகன் (மதி, Suri Auto நிறுவனம்) மற்றும் இறுதி மணித்தியாலத்தில் அழைத்த போதும் மனம் கோணாது வருகை தந்து புகைப்படம் எடுத்து தந்த நம் மண்ணின் சிறந்த புகைப்பட கலைஞர் திரு ஜீவன் அவர்களுக்கும் மற்றும் TVI தொலைக்காட்சி நிறுவனத்திற்கும். இவ் விழாவை தலைமையேற்று திறம்பட நடாத்திய திரு திருமதி தம்பித்துரை அவர்களுக்கும், இவ் விழாவுக்கு அனுசரணை நல்கி ஆதரவு வழங்கிய குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்திற்கும், எம் அன்பான அழைப்பை ஏற்று வருகை தந்த எம் மண்ணின் பாசமிகு உறவுகளுக்கும் வாசக நேயர்களுக்கும் மீண்டும் மீண்டும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்பின் உங்கள் உறவுகள்
பொ.சிவபாதசுப்பிரமணியம் (சிவா மாஸ்டர்)
சி.மேகவர்ணன் (மார்க்கோணி)


தனது நன்றியை தெரிவிக்கிறார் சிவபாதம் கணேஸ்குமார் அவர்கள்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.
என்ற பொய்யா மொழி புலவரின் வாக்குக்கு இணைய வாழ்கின்ற மக்கள் குப்பிழான் மக்கள். யாழ் மாவட்டத்தில் அழகிய சிறு கிராமம் குப்பிழான். வாசம் உள்ள மலர் ஒன்றை பறித்த பின் அதை எங்கெல்லாம் கொண்டு செல்கின்றோமோ அங்கெல்லாம் அதன் வாசனை வீசிக்கொண்டே இருக்கும். அப்படித்தான் குப்பிழான் மக்களும்.


என்னுடைய ஈழத்து மத வரலாறு என்ற நூலினை கனடாவில் வெளியீடு செய்வதற்காக புஸ்பா அண்ணா அவர்கள் மூலம் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்ற உறுப்பினர்களான திருமதி தங்கமுத்து தம்பித்துரை ஆசிரியையுடனும், மேகவர்ணனுடனும் கேட்ட பொழுது அவர்கள் மறு சொல்லு தெரிவிக்காது கணேஸ் அவரை வரச்சொல்லும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து கனடாவில் சிறப்பான விழா எடுப்போம் என்றனர். அதே போன்று சிவா ஆசிரியரிடமும் கதைத்த போது என்னுடைய மாணவனும், எனது பிள்ளையும் போன்ற கணேஸ்ற்கு நாம் எல்லோரும் சேர்ந்து விழா எடுப்போம் என்று கூறினார். அதே போன்று மண்டபத்தை தந்ததுடன் தன்னால் இயன்ற சரீத உதவியையும் செய்தவர் மதி அண்ணா அவர்கள். அத்துடன் தமது வேலைகளையும் பொருட்படுத்தாமல் படப் பிடிப்பு செய்த ஜீவன் அவர்களுக்கும். TVI தொலைக்காட்சி நிறுவனத்தினர்க்கும் என்னுடைய தனிப்பட்ட அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கும், பேச்சாளர் பெருந்தகைகளுக்கும்,கனடா இந்து சமய பேரவை சிவ முத்துலிங்கம் ஜயா அவர்களுக்கும்,குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றத்தின் அழைப்பை ஏற்று வந்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.