குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழாவில் களைகட்டிய  'ஆன்மீகத்தைத் தேடு' சிறுவர் நாடகம் (Photos) updated 20-10-2015

 


யாழ்.குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தின் வாணி விழா நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை (18-10-2015) மாலை -4 மணி முதல் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.

சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற  விழாவில் யாழ்.பல்கலைக் கழக வாழ்நாள் பேராசிரியர் அ -சண்முகதாஸ் தம்பதியர் பிரதம விருந்தினராகவும் ,யாழ்.பல்கலைக் கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்-சிவலிங்கராஜா,யாழ்.போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் .பேரானந்தராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்,ஓய்வு நிலைக் கிராம உத்தியோகத்தர் சோ.பரமநாதன்  கெளரவ விருந்தினராகவும்  கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதன்போது மாணவி பூஜா பரமநாதனின் பேச்சும் ,குப்பிளான் கன்னிமார் கெளரி அம்பாள் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் "ஆன்மீகத்தைத் தேடு " எனும் சிறுவர் நாடகமும் இடம்பெற்றது.இந்து கலாசாரத் திணைக் களத்தால் யாழ். மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட நாடக இறுதிப் போட்டி அண்மையில்  யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற போது  குறித்த நாடகம்  மூன்றாம்  இடத்தைப்  பெற்றமையும்  குறிப்பிடத்தக்கது .இந்த நாடகம் ஓய்வு நிலைக் கிராம உத்தியோகத்தர்  சோ-பரமநாதனின் எழுத்துருவில் உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த நாடகத்தில் பாத்திரமேற்று நடித்த கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அனைவரும் தமது சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர். 

குறித்த விழாவில் இந்து கலாசாரத் திணைக்களத்தின் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ,பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம்,ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்-சிறிதரன் மற்றும் தொல்புரம் சிவபூமி முதியோர்   இல்லத்தவர்கள் ,ஊரவர்கள்,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்களாகக் கலந்து கொண்டவர்களுக்கு பாரம்பரியமான ஓலைப் பெட்டியில் பிரசாதம் வழங்கப்பட்டது.


செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-எஸ்-ரவி.