<%@LANGUAGE="JAVASCRIPT" CODEPAGE="65001"%> kuppilanweb.com
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எமது மண்ணின் மூத்த குடிமகன், மண் பற்றாளன் திரு கிருஸ்ணன் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து எழுதிய கடிதம். கடிதங்கள் updated05-06-2013

சுவிஸ் வாழ் குப்பிழான் உறவுகள் நமது அறிவாலயமாகிய விக்கினேஸ்வரா மகா வித்தியாலய கட்டிடத்திற்கு வழங்கிய பங்களிப்பை இணையத்தளத்தில் அறிந்து அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். அதே போல் கனடா வாழ் உறவுகளும் வாசிகசாலை கட்டுவதற்கு பெரும் முயற்சி எடுப்பதாக அறிந்தேன். பிரித்தானியா வாழ் உறவுகள் தமது கஸ்டத்தின் மத்தியிலும் இயன்றளவு கொடுத்தும் சில வசதியுள்ளவர்கள் பார முகமாய் இருப்பதும் வருத்தத்திற்கு உரியதாகும். நோர்வேயில் உள்ள சிலரும் நிதி கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள் இறுதில் அவர்களும் ஏமாற்றி விட்டதாக அறிந்தேன். நாங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்று மட்டும் மனதில் கொள்ள வேண்டும் (குறள் 31) சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

உங்கள் அனைவருக்கும் கோடி நமஸ்காரம், இதே போல் மற்றைய திட்டங்களுக்கும் ஆதரவளித்து இயன்றளவு நிதி வழங்குமாறு சிரம் மேல் கைகள் கூப்பி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றேன். நான் வசிக்கும் நாடு சிறிய தீவு உலகப்பரப்பில் ஒரு புள்ளி. பரப்பளவு 71 சதர கிலோ மீற்றர். மக்கள் பல நாட்டுச் சந்ததியினர். மொத்தம் 40லட்சம் சனத்தொகையில் சீனர் 80 வீதம், மலாய் சாதியினர் 15 வீதம், பிற சாதியினர் 5 வீதம். நான் ஒருவன் மட்டும் தான் குப்பிழான் கிராமத்தில் இருந்து வந்தவன். கிராமத்தை விட்டது 1938, வயது 95, நமது பள்ளி அபிவிருத்திக்கு நான் அனுப்பிய தொகை 30 லட்சம், 14 லட்சம் எனதும் மிகுதி சிங்கப்பூர் வாழும் மற்ற ஊர் மக்கள் அன்பளிப்பு செய்தது. ஆழ்ந்து சிந்தித்து பார்க்கவும் நாம் பிறந்து வாழ்ந்த மண்ணிற்கும், அறிவூட்டிய நமது பாடசாலைக்கும் என்ன செய்திருக்கிறோமென்று. உங்கள் மனசாட்சிக்கு ஒரு பதிலை சொல்லுங்கள். நான் குப்பிழானை விட்டு 75 வருங்கள் நீங்கள் ஆகக் கூடியது 30 வருசங்கள். எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்பது புரியவில்லை. நாம் பிறந்த போது எதையும் கொண்டு வரவில்லை இனி இவ்வுலகை விட்டு போகும் எதையும் கொண்டு செல்லப்போவதில்லை.