நூற்றாண்டை நிறைவு செய்த குப்பிழான் அன்னையின் தவப்புதல்வனுக்கு இன்று பிறந்த நாள். பார் எங்கும் வாழும் குப்பிழான் மக்கள் உங்களை வாழ்த்தி வணங்குகின்றோம்.

 

 

 

 

எங்கள் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கிராம பற்றாளன், சமூக சேவகர், செம்மண் சுடர் உயர் திரு கந்தையா கிருஷ்ணன் தனது 100வது பிறந்த நாளை இன்று தாம் வாழும் சிங்கப்பூரில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். அவரை உலகம் வாழ் குப்பிழான் மக்கள் வாழ்க வாழ்க என நெஞ்சார வாழ்த்துகின்றார்கள். இந்த கலியுகத்தில் தூற்றுவதற்கு பலர் இருந்தாலும் சில அன்பான மனிதர்களின் வாழ்த்துக்கள் ஒரு ஆத்ம பலத்தை கொடுக்கும். அந்தவகையில் குறுகிய அழைப்பை ஏற்று அன்புக்குரிய பெருமக்கள் எங்கள் தலைமகனை வாழ்த்துரைகளாலும் கவிதைகளாலும் வாழ்த்துகின்றார்கள். தினமும் எமது இணையத் தளத்தை பார்வையிடும் திருவாளர் கிருஷ்ணர் உங்கள் வாழ்த்துக்களை ஏற்று வாழ்வின் முழுப் பலனையும் இன்று பெற்றிருப்பார். திரு தெட்சணமூர்த்தி அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வாழ்த்துக்களை நூலக வெளியிட வேண்டும் என்று சம்பந்தபட்டவர்களை அன்பாக வேண்டுகின்றோம். அவரின் பிறந்த நாளாகிய இன்று நலிவடைந்த 100 பேருக்கு சமூக உதவிகள் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பித்தக்கது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எங்கள் ஊரின் தலைமகனே.

வாழ்த்தும் உயர்ந்த உள்ளங்கள்.

1- தில்லையம்பலம் சசிதரன். (ஆசிரியர், தலைவர் கிராம முன்னேற்ற சங்கம் குப்பிழான்) மேலும் படிக்க

2- சிவத்தமிழ் வித்தகர், கலாபூசணம் சிவ மகாலிங்கம் ( இலங்கையின் சிறந்த சமய பேச்சாளர்) மேலும் படிக்க

3- குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலையம் மேலும் படிக்க

4- நல்லதம்பி மோகனதாஸ் ( குப்பிழான் வெப் நிர்வாக இயக்குனர்) மேலும் படிக்க

5- சித்தாந்த இரத்தினம் கலாநிதி கந்தையா கனேசலிங்கம். (குப்பிழான் கிராமத்துக்கு முதன் முதல் மின்சார இணைப்பை ஏற்படுத்தியவர், பொறியிலாளர், தமிழர்களில் பெரு மதிப்புக்குரிய அறிஞர்) மேலும் படிக்க

6- திருமதி தம்பித்துரை ( கனடா, அன்பான ஆசிரியர், சிறந்த கவிஞர், எழுத்தாளர்) மேலும் படிக்க

7- குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா. மேலும் படிக்க

8- திருமதி மங்களேஸ்வரி சிவசிதரம்பரலிங்கம் (கவிஞர், ஓய்வு பெற்ற ஆசிரியர் உரும்பிராய் இந்துக் கல்லூரி) மேலும் படிக்க

9- திரு சண்முகம் சதானந்தன் ( பொறியியலாளர், முன்னாள் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற தலைவர்) மேலும் படிக்க

10 - திரு நல்லதம்பி சிவலிங்கம் ( முன்னாள் பல நோக்கு கூட்டுறவு சங்க மேலாளர், முன்னாள் சன சமூக நிலை தலைவர், முன்னாள் கற்கரை கற்பக விநாயகர் ஆலய உப தலைவர்) மேலும் படிக்க

11- திரு சிவபாதசுந்தரம்(சிவாமாஸ்டர்)( கனடா, முன்னாள் பிறைன் கல்வி நிலைய நிர்வாக இயக்குனர், ஆசிரியர்) மேலும் படிக்க

12- திரு சிவ பஞ்சலிங்கம். ( கனடா, கனடா பத்திகைகளின் பத்தி எழுத்தாளன்) மேலும் படிக்க

13 -திரு ஜயாத்துரை சண்முகன்(குப்பிழான் சண்முகன்) ( இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர், தனது பெயரின் முன்னாள் குப்பிழான் என்று போட்டு எமது கிராமத்துக்கு பெருமை சேர்க்கும் கிராம பற்றாளர்) மேலும் படிக்க

14- திரு தெட்சணாமூர்த்தி (முன்னாள் கிராம சேவகர்) மேலும் படிக்க

15- திரு க. தங்கவேல் ( முன்னாள் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா தலைவர்) மேலும் படிக்க

16- திரு செல்வநாயகம் சற்சொரூபன் ( செயலாளர் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா) மேலும் படிக்க

17- ராசன் குடும்பம் ( நெதர்லாண்ட், உறவினன்) மேலும் படிக்க

18- திரு தில்லைநாதன் ரவீந்திரநாதன் ( அதிபர்) மேலும் படிக்க

19- வலம்புரி பத்திரிகையில் வந்த வாழ்த்துரை. மேலும் படிக்க

20 - கடந்த காலங்களில் அவரை வாழ்த்தி வெளியிடபட்ட வாழ்த்துக்கள். மேலும் படிக்க

மேலும் சில வாழ்த்துரைகள் பின்பு பிரசுரிக்கப்படும் என்பதை அறிய தருகின்றோம்.