குப்பிழான் தனிக்கிராமாக 1964 ஆம் ஆண்டு உருவான போது வெளியிடப்பட்ட கிராமோதய மலர். பகுதி ஒன்று. updated 24-07-2018


குப்பிழான் தனி கிராமமாக உருவான போது வெளியிடப்பட்ட இந்த கிராமோதய மலரானது எமது கிராமத்தின் காலத்தால் அழியா பொக்கிசமாகும். எமது கிராமத்தின் வரலாற்று ஆவணமான இந்த மலரை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். எந்த மனிதனும் இந்த இடத்தில் இவர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டும் என்று கேட்டு பிறப்பதில்லை. கடவுளால் அருளப்பட்ட விதி இங்கு தான் நாம் பிறக்க வேண்டும் என்று. எம்மை படைத்தவன் எங்களை ஒன்றுமில்லாத இடத்தில் கொண்டு வந்து விடவில்லை. எல்லா வளமும் நிறைந்த குப்பிழான் கிராமத்தில் தான் நாம் எல்லோரும் பிறந்திருக்கின்றோம் அல்லது புகுந்த வீடாக இந்த மண்ணுக்கு வந்துள்ளோம். எமது வரலாற்றை பண்பாட்டை காப்பது எல்லோருடைய கடமையுமாகும். எத்தனையோ புத்தகங்கள் எமது மண்ணில் வெளியிடப்பட்டாலும் குப்பிழான் சார்ந்து வெளியிடப்பட்ட முதலாவது மலர். 100 பக்கங்கள் கொண்ட இந்த மலரானது குப்பிழானின் வரலாற்றை முற்று முழுதாக கொண்டு வரவில்லை என்றாலும். எதிர் காலத்தில் குப்பிழானின் வரலாற்றை வெளியிட விரும்புபவர்களுக்கு இந்த நூல் அடிப்படை தகவல்களை வளங்க கூடும். உள்நாட்டு போர் போன்ற காரணிகளால் கிராமம் சார்ந்து எந்த நூலும் வெளியிடப்படவில்லை. கடந்த பொன்விழாவன்று ஒரு சிறிய மலர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மலரின் உண்மையான பிரதி அமரர் தருமலிங்கம் அவர்களிடமிருந்தது. அதிலிருந்து சில புகைப்பட பிரதிகளை எடுத்து வைத்திருந்தோம். இந்த பிரதியானது நூலகம் என்ற இணையத்திலிருந்து தரைவிறக்கம் செய்யப்பட்டு 4 பகுதிகளாக தரவிருக்கின்றோம். இதனை எமது இணையத்துக்கு அறியத்தந்த திரு சிவ பஞ்சலிங்கம் அவர்களுக்கு நன்றிகள்.