கண்ணீர் அஞ்சலி

 

ஊர்பற்றாளர் அமரர் கந்தையா செல்வகுமார்

 

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்களானை வசிப்பிடமாகவும் கொண்ட ஊர்பற்றாளர் அமரர் கந்தையா செல்வகுமாரின் மறைவு குப்பிழான் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இழப்பானது குப்பிழான் கிராமத்திற்கு ஒரு பேரிழப்பாகும். குப்பிழான் அன்னை தனது செல்ல மகனை இழந்த சோகத்தால் தவிக்கிறாள். எல்லோரினது சோகத்திலும் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவும் இணைகின்றது.
கண்கள் கலங்குகிறதே
காற்று வீச மறுக்கிறதே
உன் மறைவுச் செய்தி கேட்டு
நெஞ்சு வெடித்திடும் போல இருக்கிறதே
நேற்று வரை வாழ்ந்த வாழ்க்கை
இன்று பாரை விட்டு போனதேனோ?
உன்னை இனி எப்ப காண்போமோ என
மனம் பதைபதைக்கிறது செல்வ குமாரா
கதறியழும் - உன் உறவுகளுக்கு
இனி யார் ஆறுதல் சொல்வார்
உன்வரவை மீண்டும் எதிர்பார்த்து
ஏங்குகின்றோம்
கண் திறந்து பாராயோ
கவலைகள் தான் தீராதோ
மீளாத் துயில் கொள்ளும்
எம் தோழா எழுந்து வா ஊர் செல்வோம்
அரச மரத்தடியில் ஒன்று கூடி கும்மாளமடிக்க
குப்பிழான் அன்னை உன்
வரவுக்காக காத்திருக்கிறாள்.
 


அன்னாரின் ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா