குப்பிளான் வெளிநாட்டினர் அமைப்பின் தலைவரும் சமூக சேவகருமான திரு திருமேனி பஞ்சாட்சரதேவன் அவர்களின் 70வது பிறந்த நாள் இன்று 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை.


குப்பிளான் வெளிநாட்டினர் அமைப்பின் தலைவரும் சமூக சேவகருமான திரு திருமேனி பஞ்சாட்சரதேவன் அவர்கள் தனது 70வது பிறந்த தினத்தை ஜேர்மனியிலுள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்றார். கற்கரை கற்பக விநாயகர் அருளோடு பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம்.


குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சியிலும் அதன் பெருமையிலும் தனது வாழ் நாள் காலத்தில் அரும்பணிகளை ஆற்றியுள்ளார். அவரை வாழ்த்துவதில் குப்பிழான் மக்களாகிய நாம் மிகவும் பெருமையடைகின்றோம்.

நாடுவிட்டு நாடு சென்றாலும்
ஊர் மாறவா உள்ளம் நீங்கள்
எத்தனை ஆண்டுகள்
வெளிநாட்டில்
உங்கள் வாழ்வு கழிந்தாலும்
உங்கள் ஊரையும்
மக்களையும் மறவாது வாழ்வது
தான் ஐயா உங்கள்
பண்பும் பெருமை...!!!

உங்களால் வாழ்வோர்
உங்களை வாழ்த்திக்கொண்டே
இருப்பர்.
என்ன செய்யவில்லை நீங்கள்.
காணியற்றோருக்கு காணி
பசியால் வாடியோருக்கு
நல்ல சத்துணவு
கொடுத்தே
பழக்கப்பட்டவர் நீங்கள்
அதனால் தான் உங்கள்
இதயங்களில் வாழத் -
துடிக்கின்றோம் நாங்கள்.

பஞ்சாட்சரதேவன் ஐயா
உங்களுக்கோ அகவை
எழுபது
எப்பொழுதும் இளைஞர் நீங்கள்
என்றும் நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்து எங்களை
ஆசிர்வதிக்க வேண்டும் என்று
வாழ்த்த வயதில்லை
வணங்குகின்றோம் ஐயா
உங்கள் பொற் பாதங்கள் தொட்டு .

குப்பிளான் மக்கள்

தொடர்புகளுக்கு - 004915210257300