குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் செய்திக்குறிப்பு. updated 21-08-2012

அமரர் இராமநாதன் சிவசோதி (பொன்னன்) அவர்களின் கனவை நனவாக்கும் எண்ணத்துடன் அன்னாரின் குடும்பத்தின் பெருமுயற்சியினால் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக மைதானம் மிகச் சிறப்பாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களிற்கான எமது நன்றியினை எமது விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழக அனைத்து உறுப்பினர்களின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். இதன் முதல் கட்டமாக திரு. இ.மோகன் அவர்களால் 31.07.2012 அன்று எமது மைதானத்தில் வைத்து எம்மிடம் 3000 சுவிஸ் பிறாங்கினை கையளித்தார். (இலங்கை ரூபா-401500.00) இது 02.08.2012 ம் திகதி 1000 சுவிஸ் பிறாங் மாற்றியமையால் 133500ரூபாவும் 10.08.2012 ம் திகதி 2000 சுவிஸ் பிறாங் மாற்றியமையால் 268000ரூபாவும் எமக்கு கிடைக்கப்பெற்றது. எனவே அவர்களிற்கு மீண்டும் நன்றியினை தெரிவித்துக்கொள்வதுடன் ஏனைய அனைவரையும் எமக்கு பூரன ஒத்துளைப்பு வளங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


நிர்வாகம்