காடையர்களின் வன்முறை நிறுத்தப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். updated 30-03-2015


கடந்த வாரம் காடையர்களினால் அப்பாவி குடும்பஸ்த்தர் கடுமையாக தாக்கப்பட்டதை செய்தியாக உங்கள் இணையத்தளத்தில் படித்திருந்தேன். இதில் எமது ஊரை முற்பக்கமாக போட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். அதற்காக அந்த விடயம் சரி என்று வாதிடவில்லை. இது மனநலம் பாதித்த ஒரு குடும்பத்தின் வன்முறை. இதற்கும் ஏழாலைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.


படுகாயமடைந்த அப்பாவி இளைஞனுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் யார் என்று தெரிந்தும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அவர்களோடு சமாதானம் ஏற்பட்டுள்ளதாக இங்கு கூறிக்கொண்டு அந்த குடும்பம் அச்சுறுத்தப்பட்டு பொலிசிடம் கொடுக்கப்பட்ட புகாரை திரும்ப பெறும்படி கேட்கிறார்கள். புகார் கொடுத்தால் எதிர் காலத்தில் நிம்மதியாக இருக்க முடியாது என்று பயமுறுத்தப்படுகின்றார்கள். இந்த காடையர்களினால் ஏற்கனவே பல அப்பாவிகள் தாக்கப்பட்டிருகின்றார்கள். அப்பாவிகளின் வீடுகளுக்குள் புகுந்து தமது வீரத்தை காட்டியிருக்கின்றார்கள். எல்லோரும் தமக்கு பயப்படவேண்டும் என்று விரும்புகின்றார்கள். இவர்கள் சாதாரணமாகவே பல பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள். குடிபோதையில் எப்படியெல்லாம் நடப்பார்கள் என்று எல்லோரும் சிந்திக்க வேண்டும். தமிழ் சினிமாக்களில் வருவது போல் பணத்தை பெற்று கூலிப்படை போல் செயல்பட்டு ஏழாலையை சோந்த அப்பாவிகளையும் தாக்கியிருக்கின்றார்கள். ஊர்களுக்கிடையே பதற்றத்தை உண்டு பண்ணி தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடிக்க பார்க்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு இதே காடைத்தனத்தை முனியப்பர் கோவிலடியிலும் அரங்கேற்றினார்கள் அவர்களும் பதில் தாக்குதல் நடாத்த அந்த பக்கம் வாலாட்டுவதை நிறுத்திவிட்டார்கள். அந்த நேரம் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியது. எமது மக்கள் அவசர தேவைக்கு கூட முனியப்பர் கோவில் பக்கம் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்கள் உண்மையான வீரர்களோடு சண்டை பிடிப்பதில்லை. அப்பாவிகளை தான் இலக்கு வைக்கிறார்கள்.


இவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படவில்லையென்றால் இந்த அப்பாவி இளைஞன் மாதிரி எத்தனை பேர் பாதிக்கப்படபோகின்றார்கள் என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டத்தில் யாரும் வன்முறையையோ அல்லது ரவுடித்தனத்தையோ விரும்புவதில்லை. தான் தனது குடும்பம் என்று அமைதியான வாழ்வை கொண்டு செல்ல விரும்புகின்றனர். மக்களின் மனமாற்றத்தை இப்படியான சமூக விரோதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்ததுகின்றார்கள். துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியால் தான் சாவான் கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்று எமது பெரியவர்கள் கூற கேட்டிருக்கின்றோம். அது நமது நிய வாழ்வில் நடந்தும் இருக்கின்றது. இவைகளை அனுபவ ரீதியாக பார்த்தும் திருந்தாத இந்த ஈனப்பிறப்புக்கள் இனியும் திருந்தும் என்று யாரும் நம்ப முடியாது. இந்த சம்பவத்தால் எல்லோரும் கொதித்து யோயுள்ளனர். ஆனாலும் காடையர்கள் தம்மையும் இலக்கு வைப்பர்கள் என்று யாரும் முன்னின்று குரல் கொடுக்க பயப்படுகின்றார்கள்.


குப்பிழான் ஏழாலை பகுதியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களுக்கு இவர்கள் தான் காரணம் என்று மக்கள் சந்தேகிக்கின்றார்கள். இந்த காடையர்கள் நிட்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆகவே குப்பிழான் ஏழாலை பொது அபை;புக்கள் ஒன்றிணைந்து இந்த ரவுடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

அன்புடன்
மார்க்கண்டு
ஏழாலை