குப்பிளான் வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் அனுசரனையுடன் 01.01.2011 ஆண்டு சனசமூக செயலாளர் இ.நிரூபன் தலைமையில் எமது குப்பிளான் கிராம பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்துரையாடல் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் திரு.சோ. பரமநாதன்(G.S), ஞானசபேசன் (G.S), திரு.நா.பஞ்சலிங்கம் (RDO), திரு.தி.சசிதரன்(ஆசிரியர்) திரு.வ.தமிழ்ச்செல்வன் சனசமூக நிலைய தலைவர், மாதஜி விசாலாட்சி ஆகியோரின் பங்கு பற்றலுடன் `பல்கலைக்கழக மாணவர்களின் அபிவிருத்தியின் ஊடாக கிராமத்தை அபிவிருத்தி செய்தல்` எனும் தொனிப்பொருளை மையமாகக் கொண்டு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் பிற்பகல் 4 மணிக்கு இவ் நிகழ்வு ஆரம்பம் பெற்றது. எமது கிராமத்தைச் சேர்ந்த 32 பல்கலைக்கழக மாணவர்களில் வெளிமாவட்டத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தவிர ஏனைய அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நிகழ்வில்,

(1) மங்கள விளக்கேற்றல்
(a) திரு.சோ.பரமநாதன் (G.S)
(b) விசாலாட்சி மாதாஜி
(c) திரு.தி.சசிதரன் (ஆசிரியர்)
(d) திரு.நா.பஞ்சலிங்கம் (RDO)
(e) திரு.வ.தமிழ்செல்வன் (சனசமூக நிலைய தலைவர்)

(2) ஆசியுரை
(a) மாதாஜி விசாலாட்சி

(3) கருத்துரை

(4) கலந்துரையாடல்
(a) மாணவர்களின் எண்ணக்கரு

(5) கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட விடயங்கள்
(a) குப்பிளான் வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் விபரங்களை தாங்கியதும், குப்பிளான் கிராம தகவல்களையும், ஆக்கங்களும் கொண்டு அமைந்ததான புத்தகம் வெளியீடு செய்தல்.
(b) பல்கலைக்கழகத்தில் கற்கும் வறிய மாணவர்களின் தேவைகளை இனங்கண்டு திட்டங்களை தீர்மானித்து அவற்றை நடைமுறைப்படுத்தல்.
(c) குப்பிளானைச் சேர்ந்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்களின் தொடர்பை ஏற்படுத்தலும் அதனை வலுப்படுத்தலும்.
(d) குப்பிளானில் உள்ள மாணவர்களை பல்கலைக்கழகம் செல்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
(e) கிராமத்தின் அபிவிருத்தி திட்டங்களில் பங்குபற்றல்.

இவ்வாறான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் விதமாக மாணவர்களை ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்த இவ் மன்றத்தை உருவாக்கியுள்ளோம்.

இவ் புதிய மன்ற உறுப்பினர்களின் விபரங்கள்
தலைவர்:- இ.நிரூபன்
உபதலைவர்: - ம.ஜெனேபா
செயலாளர்:- க.சிவகிருஸ்ணன்
உபசெயலாளர்: - த.தனுஜா
பொருளாளர்: - பெ.பிரசாந்தன்
பத்திராசிரியர்கள: - ர.நிலக்சன்,செ.கலைவாணி

உறுப்பினர்கள்:-
த.யசோதரன்
சி.அறிஞன்
ப.கிருஸ்ணகுமார்
பா.லசோதா
சு.ரதீபா
சி.சிந்தியா
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ் நிகழ்வு இடம் பெற்று இருக்கும் போது லண்டன் வாழ் விக்கினேஸ்வரா மன்றத்தால் எமக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியினால் எம் மாணவர்கள் மிக்க மகிழ்வடைந்தனர். அவ் வாழ்த்து செய்திக்கு அச்சந்தர்பத்தில் மாணவர்களால் நன்றிகளையும், அதற்கான வரவேற்பையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மன்ற செயலாளர் க.சிவகிருஸ்ணன் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. இவ் நன்றியுரையில் மேற்கூறப்பட்ட செய்திகளை பூரணமாக நிறைவேற்ற தங்கள் அனைவரின் கரங்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம் எனக் கூறி நன்றியுரையை நிறைவு செய்தார். இத்துடன் இவ் நிகழ்வு மாலை 6.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.

இங்கனம்
உண்மையுள்ள,
தலைவர்,
இ.நிரூபன்