குப்பிழான் விக்கினேஸ்வரா வித்தியாசாலையின் மீழ் எழுச்சியில் திரு.சின்னத்துரை சிவகுமாரனின் (ஓய்வு பெற்ற அதிபர்) பங்களிப்பு.

பதவிக்காலம் - 15-08-2001 ----- 30-11-2008

சாதனைகள்

1) ஆரம்ப கல்விக்குரிய 30x20 அடி ஓலைக் கொட்டில், மேற்கு பக்கம் - தூண்டு போட்டு சுவர் கட்டல், நெற் அடித்தல், சீற் போடல், நில வேலைகள் செய்தல்.
2) G.T.Z (ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனம்) உதவியோடு 40x25 அடி 2 மாடி கட்டல்.
3) கீழ் மாடி வகுப்பறைகள் ஆக்கல், நெற் அடித்தல், கதவு போடல், மேல் மாடி வாசல் கேற் போடல் - உதவி நல்லப்பா சிவசுப்பிரமணியம்- சுவிஸ்)
4) சிறுவர் பூங்கா அமைத்தல் - 50,000 ரூபா அகாலமரணமடைந்த தன் மகன் நினைவாக திரு.நல்லப்பா சிவசுப்பிரமணியம்)
5) இராமநாதி பொன்னன் (சுவிஸ்) - 2,00,000 ரூபா (மேற்கு பகுதி எல்லை மதில் கட்டல், றோணியோ மெசின், அலுவலக காற்றாடி வாங்கல், 01 கணனி, 01 printer, வாங்கல்.
6) அம்பிளிபயர்,ஸ்பீக்கர் - 35,000 ரூபா இராசன்(நல்லையா மருமகன் - கனடா)
7) தொலைக்காட்சி, டெக் - ஏகாம்பரம் பாலன் -லண்டன்
8) 4 கணனி - செல்வரத்தினம் நந்தன் (கனடா).
9) பாடசாலை மின்சார வசதி, நீர்பாசன , குழாய் நீர் வசதி - குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் இலண்டன்.
10) பாண்ட் இசை கருவிகள் m.p மகேஸ்வரன் நிதி மூலம் - நா.பஞ்சலிங்கம்.
11) உணவு - சொக்கர்வளவு இரத்தினம் மகன்
12) அலுமாரி, நூலகப் புத்தகங்கள் - சுண்ணாகம் மக்கள் வங்கி (45,000 பெறுமதியானது).
13) 01அலுமாரி -இரத்தினசிங்கம் பூமணி.
14) 01 அலுமாரி வைரமுத்து மகாலிங்கம்.
15) பாடசாலை பெயர் வளைவு - கனகரத்தினம் கலைச்செலவன் தந்தை நினைவாக (கனடா).
16) மூன்று தடவை பெயின்ற் அடித்தல்.
17) பாடசாலை தொலைபேசி இணைப்பு - இளைப்பாற்றுக் கால அன்பளிப்பு சிவகுமார் அதிபர்.
18) 10 பாலர் மேசை, 10 பாலர் கதிரை - பூரணி (கனடா), ஆ.குகனேசன் ஆசிரியர்.
19) 10 ஆசிரியர் மேசை, 10 ஆசிரியர் கதிரை, மாணவர்களுக்கு 60 மேசை,கதிரை - G.T.Z (ஜேர்மன் அபிவிருத்தி நிறுவனம்).
20) 100 மேசை,கதிரைகள் - நீகொட் நிறுவனம் மூலம்.
21) தரம் 1, தரம் 2 மாணவர் பாதணி - சுண்ணாகம் rotary club.
22) தரம் 1 முதல் 3 வரை இலவச உணவு திட்டம் - சோமலிங்கம் ஞானலிங்கம் (ஜேர்மனி).
23) மருத்துவமுகாம் மூலம் கண் பரிசோதனை, மருந்து வழங்கல் - லயன் கிழப்.
24) இதுவரை இல்லாமல் இருந்த க.போ.த (சாதாரணம்) பொதுப் பரிட்சை நிலையமாக பாடசாலையை மாற்றல்.
25) உடுவில் கோட்ட மட்டச் சைவை திருமுறை விழாவை (உடைந்த மண்டபத்தில் தகரக் கொட்டகை போட்டு ) மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடல்.
26) பாடசாலை தோட்ட போட்டியில் யாழ் மாவட்டத்தில் 2ம் இடம் பெற்று 10,000 பரிசு பெறல் (மதிய உணவிற்கு பாடசாலை தோட்டத்தில் போஞ்சி வாழைக்காய், மிழகாய் எடுத்தல்).
27) மென் பந்து கிறிக்கெற் - வலய மட்டத்தல் 140 பாடசாலைகள் மோதி 2ம் இடத்தை பெறல், பெண்கள் வலைப்பந்து வலய மட்டம் 2ம் இடம்.
28) கல்வித்துறையில் குறைந்தளவு மாணவர்கள் இருந்தும் மிகப்பாரிய முன்னேற்றம்
29) கனடா மக்கள் மன்ற உதவிகள் 1,00,000 ரூபா

இவை அனைத்தும் குப்பிழானை சேர்ந்த திரு தில்லையம்பலம் சசிதரன் ஆகிய நான் எமது ஊரில் பிறந்து , ஆசிரியராகி, தனது ஓய்வு காலப் பகுதி வரை எமது பாடசாலை அதிபராகக் கடமை ஆற்றிய திரு. சின்னத்துரை சிவகுமாரன் அவர்களுடன் இணைந்தும், உரையாடிய போதும் பெற்றுக் கொண்ட தகவல்கள். மண்ணை நேசிச்சு, மக்களை நேசிச்சு, தான் கற்ற, கற்பித்த அதிபராய் இருந்த சிறப்பான மனிதனின், சிறப்பான பணிகளை உலகம் முழுவதிலும் வாழும், எமது ஊரில் வாழும் மக்களிற்கு தெரியப்படுத்த வேண்டிய கடமையின் பால் இந்த இணையம் வாயிலாக இதனை வெளிப்படுத்துகிறேன்.

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு - குறள்

அன்புடன்
தி.சசிதரன் (ஆசிரியர்)