குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக அபிவிருத்திச் செயற்பாடுகளும் கழக இளைஞர்களின் சமூகச் செயற்பாடுகளும். updated 23-01-2013

நாம் வாழும் இவ் உலகம் அனைவருக்கும் ஒன்றே. ஆனால் அதில் வாழும் கோடான கோடி மக்களில் இருவர்க்கு கூட அது ஒரே மாதிரி தெரிவது இல்லை. குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் குப்பிளான் மக்கள் அனைவருக்குமான பொதுவான ஒன்றே. குப்பிளான் மக்கள் வெளிநாடு சென்றாலும் அவ் எண்ணங்கள் என்றும் மாறாமல் உள்ளமை கிராமப் பற்றுடன் செயற்படும் அனைவரின் மனங்களிலும் சந்தோசத்தினை தருகின்றது. ஏனெனில் வெளிநாடு சென்ற சிலர் தமது சுயநலத்திற்காக குப்பிளான் கிராமத்தின் பெருமைகளை மறந்து தமக்கு தோண்றிய பிழையான எண்ணங்களை நடைமுறைப்படுத்த முனையும் போது அது கிராமப்பற்றுடன் செயற்படுபவர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றது. அவ் எண்ணங்கள் முரன்பாடுகளை தோற்றுவிப்பதுடன் சிலவேளைகளில் கிராமத்தின் அமைதிக்கு பங்கத்தினையும் ஏற்படுத்திவிடுகின்றது. இதற்கு ஓர் உதாரணமாக தற்போது சட்டவிரோதமாக கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தினை குறிப்பிடலாம்.

குப்பிளான் மண்ணின் பெருமைகளை மறந்து அல்லது அறியாமல் தமது சுயநலத்திற்காக ஒரு சிலரின் தவறான துண்டுதலுக்கு உட்பட்டு தமது கௌரவத்தையும் இழந்து ஏதோ ஒன்றை செய்வதற்கு முனைவது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஆனால் அதையே நேரான வழியில் கிராமத்தின் ஏதாவதொரு வளர்ச்சிக்காக பாடுபட்டால் அல்லது செயற்பட்டால் அதனால் வரும் விளைவுக் நேரானதாகவும் அனைவராலும் போற்றப்படக்கூடியதாகவும் கிராமத்தில் வசிக்கும் அனைவரும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வழிசமைப்பதாக அமையும்.

நிஐத்தில் நடப்பது கூட ஒரு காலத்தில் நிஐத்துக்குப் பொருந்தாத கற்பனையாகத் தான் இருந்தது. ஆனால் அது இன்று மாற்றமடைந்து நன்மையான விடையங்கள் பலவும் சில தவறான விடயங்களாகவும் தற்போது நடைபெற்று வருகின்றது. தமது மனதினையும் சஞ்சலத்திற்கு உள்ளாக்கி அடுத்தவர் மனங்களையும் சஞ்சலத்திற்கு உள்ளாக்கி விடுவதும் தம்மால் செய்ய முடியாத சமூக வளர்ச்சி சார்ந்த செயற்பாடுகளை மற்றவர் செய்ய முனையும் போது அதனை ஊக்குவிக்காமல் அதற்கான தடைகளை அல்லது குழப்பங்களை விளைவிப்பதும் ஏதே ஒரு உளவியல் பிரச்சினைக்கு உட்பட்ட தன்மையாக தான் இருக்க முடியும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறது. சாதனைப்பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறுவதில் ஆர்வம் காட்டாத சாதனையாளர்களும் இருக்கிறார்கள். இது என்னுடைய கடமை இதற்கு விளம்பரம் எதற்கு என்று அவர்கள் எண்ணுகிறார்கள் அவ்வாறானவர்களை நாம் தற்போது கண்டுபிடித்து அவர்களின் செயற்பாடுகளிற்கு உறுதுனையாக இருப்பதுடன் அவர்களை சிறப்பாக செயற்பட துண்டுதல் ஒவ்வெருவர் கடமையுமாகும். அது போல அவர்களை போற்றவேண்டியதும் தற்போது மிக அத்தியாவசியமானதாகும். ஏனெனில் கிராமத்தினை விட்டு புலம் பெயர்ந்தாலே அல்லது கிராமத்தில் வசிப்பவரே தன்னை அர்பணித்து கிராம வளர்ச்சிக்கு பாடுபடுதல் குறைவடைந்து செல்வதை அவதாணிக்க முடியும்.

வெற்றிக்கும் சாதனைக்கும் கூட்டு முயற்சி வேண்டும். நங்கள் சாதிக்க விரும்பினால் எங்களிடம் திறமையானவர்கள் கொண்ட ஒரு குழு நிச்சயம் இருக்க வேண்டும். வெற்றிக்கு இன்றியமையாதது எங்களைச் சுற்றியிருப்பவர்களின் தகுதியில் திறமையில் நங்கள் வைக்கும் நம்பிக்கையாகும். இவற்றை நாம் உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருப்பது போல எம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து பல கிராமபற்றுள்ளவர்கள் செயற்பட்டுக்கொண்டிருபதால் தான் எம்மால் பல காலமாக சிறு சிறு உதவிகளுடன் வளர்க்கப்பட்ட விளையாட்டு கழகத்தில் ஓர்மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். மைதானத்தினை அகலமாக்கி அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற பெரு விருப்புடன் பல்வேறு கஸ்ரங்களிற்கு மத்தியில் நாம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியினை சிறப்பாக நடாத்தி அனைவரின் கவனத்தினையும் எம்பக்கம் நோக்கி திருப்பியதுடன் அபிவிருத்திக்கான வழிகளை உருவாக்கியதுடன் பெருமளவு நிதிகளையும் பெற்றுக்கொண்டோம். எனினும் இவ் நிதிகளை நாம் யாரையும் குறை கூறியே அல்லது யாரையாவது நோகடித்தோ இதனை செய்யவில்லை. ஆனால் எமது கிராம வளர்ச்சி செயற்பாடுகள் ஏனைய இளைஞர்களையும் அதாவது கிராமம் பற்றி எவ்வித சிந்தனையுமற்று செயற்பட்ட இளைஞர்களையும் சிந்திக்க வைத்ததுடன் சிலர் தவறான வழிவகைகள் மூலம் தமது எண்னத்தினை நிறைவேற்ற முனைவதும் கண்கூடு. ஆனால் எமது கழகம் கிராம ஒற்றுமை இளைஞர்களின் ஒன்றினைந்த செயற்பாடு போன்றவற்றிற்கு முன்னுரிமை வழங்கி அனைவருடனும் ஒன்றாக இனைந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதுடன் மேலும் செயற்படவும் தயாராக உள்ளது என்பதனை பொதுநோக்கோடு சிந்திக்கும் அனைவரும் இலகுவாக அறிந்துகொள்ள முடியும்.

குப்பிளான் கிராம நல்ல உள்ளத்தவர்களின் நீன்டநாள் கனவும் அமரர் இ.சிவசோதி அவர்களின் கனவினை நனவாக்கும் நோக்குடன் இராமநாதன் குடும்பத்தினர் சார்பாக திரு. இ.மோகன் திரு .இ.சச்சிதானந்தன் மூலம் மைதானத்தினை அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற பெரு விருப்புடன் கிராமத்தில் வசிக்கும் கழக இளைஞர்கள் பல்வோறு கஸ்ரங்களிற்கு மத்தியில் உன்னதமான ஒரு நோக்கத்தை அடைய பாடுபட்டு வருகின்றனர். அது போல கிராமத்தில் வசிக்கும் கழக இளைஞர்கள் பலர் கிராமத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக முன்பள்ளி செயற்பாடுகளை முன்னெடுத்தல் ஏனைய நிர்வாகங்களில் அக்கறையுடன் செயற்படல் மற்றும் சில தீய செயற்பாடுகளிற்கு (சட்ட விரோத கட்டிடங்கள் மூலம் கிராம பெருமையை சீரளிக்கும் நடவடிக்கைகளுக்கு) எதிராக சட்டரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டு கிராமத்தின் ஒற்றுமைக்காகவும் கிராம வளர்ச்சிக்காகவும் எமது கழக வீரர்கள் பாடுபட்டு வருகின்றமை அறிந்ததே. இவ்வாறாக கழக வீரர்களின் கிராமம் சார்ந்த நல்ல செயற்பாடுகளிற்கான ஆதரவினையும் வழங்கி நல் ஒழுக்கம் உள்ளவர்களாகவும் கல்வி கற்ற கிராம பற்றுள்ள இளைஞர் யுவதிகாக வளர்ப்பதற்கு முழுமையான அர்ப்பனிப்புடன் செயற்படும் விக்கினேஸ்வரா கனடா மன்ற தலைவர் திரு நா. பாலசுப்பிரமணியம் (அப்பன்) அவருடன் இனைந்த நிர்வாகத்தினர் விக்கினேஸ்வரா இலண்டன் மன்றத்தினர் இராமநாதன் குடும்பத்தினர் குப்பிளான் நெற் குப்பிளான் வெப் நடத்துனர்கள் மற்றும் அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

(கழக வீரர்களால் சொக்கர்வளவு ஆலய சுற்றாடலில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகளையே மேலே காண்கிறீர்கள். புலம்பெயர் மக்கள் ஊரின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் போது ஊரில் உள்ளவர்களின் இப்படியான செயல்பாடுகள் எல்லோருக்கும் உற்சாகத்தை கொடுக்கும் அவ்வேளை இதுவரையில் உதவி செய்யாமல் இருப்பவர்களும் உதவி செய்ய முன்வருவார்கள் என்பதில் ஜயம் இல்லை)

விளையாட்டில் ஆர்வமுள்ள, தங்கள் பிள்ளைகளும் விளையாட்டில் ஈடுபட்டு திறமையாளர்களாக திகழ வேண்டும் என்ற எண்ணங்கள் கொண்ட எமது கிராம மக்கள் மனதில் உள்ள எண்ணம் என்னவென்றால் தமது பிள்ளைகள் வெளிநாட்டில் எவ்வாறான சிறந்த மைதானத்தில் அனைவருடனும் ஒற்றுமையாக விளையாடி மகிழ்கின்றார்களே அதுபோல தமது பிறந்த மண்ணான குப்பிளான் மண்ணிலும் அனைவருடனும் ஒற்றுமையாக விளையாடி மகிழவேண்டும் என்பதே கிராமப்பற்றுள்ள ஒவ்வொருவர் மனங்களிலும் ஆழப் பதிந்துள்ள விடயமாகும்.

அதன் அடிப்படையிலேயே அனைவருக்கும் பொதுவான குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதாகத்தில் பல்வேறு பட்ட திறமையுள்ளவர்களும் விளையாட தமது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை உருவாக்கி வழங்கிவருகின்றார்கள்அந்தவகையில் அமரர் இ.சிவசோதி அவர்களின் ஞாபகார்த்த மைதான அபிவிருத்தி பணிகளின் தொடர்ச்சியாக அமரர் நா.இராசநாயகம் ஞாபகார்த்தமாக மின்னொளியுடனான கரப்பந்தாட்ட தளம் ஒன்றினை 113,070 ரூபா செலவில் அமரர் நா.இராசநாயகம் அவர்களின் மகன்களான திரு. இ.கிருஸ்னன் திரு. இ. வரன் மற்றும் மருமகனான திரு. றமேஸ்வரன் ஆகியோரால் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இவ்வாறான அபிவிருத்தி பணிகளின் போது ஏற்படுகின்ற கூலி செலவுகளை குறைக்கும் நோக்கோடு விளையாட்டுக்கழக வீரர்கள் செயற்பட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது. இவ் வேலைகளின் போது முன்னால் வீரரான திரு இ.கிருஸ்னன் அவர்களும் இனைந்து வேலைகளை செய்தமை தற்போதய வீரர்கள் மனதில் முன்னால் வீரர்களின் கழக பற்றினை எடுத்துக்காட்டுவதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் போன்ற உணர்வு கொண்டவர்களுக்கு விளையாட்டக்கழகம் அழகிய நந்தவனமாக காட்சியளிக்கும் என்பதில் எவ்வித ஜயமுமில்லை.