சனசமுக நிலைய நிர்மாணத் திட்ட வரைபடம் updated 20-02-2012

எமது சனசமுக நிலையநிர்மாணத் திட்ட வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது. பல சுற்றுத் திருத்தங்களுக்குப் பின் நாம் அனைவரும் எதிர்பார்த்தவாறு இது அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வீதியில் இருந்து உள்ளே செல்லும் போது முதலில் தனியான பாதையுடன் பத்திரிகை வாசிப்பிடமும் (Newspaper Reading Area ), அதனை தொடர்ந்து நூல்நிலையமும் அமைகிறது.மேல் மாடியில் பல தேவைக்கும் பயன்படக் கூடிய மண்டபம் அமைகிறது. இதில் வீதிப் பக்கமாக மேடை அமைகிறது. இம் மேடை கிழக்கு நோக்கியதாக அமைவது எமது சமய சம்பிரதாயங்களுக்கு ஏற்ப திருமண வைபவங்களையும் நடாத்த சிறப்பான அம்சமாகும். அடுத்த கட்டமாக ஒப்பந்தகாரர்களைத் தெரிவு செய்து கட்டட வேலைகள்விரைவில் ஆரம்பமாகவுள்ளன.சனசமூக நிலையத்திற்கான நிதிகளை வழங்குபவர்கள் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம்-கனடா உறுபினர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை விரைவில் வழங்கி நாம் பிறந்த செம்மண் குப்பிழான் செழிப்புறும் வரலாற்றில் பங்காளராவோம்.

பெரிதாக பார்ப்பதற்கு அழுத்தவும்