குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமுக நிலைய அபிவிருத்திக்கு பங்களித்தவர்களின் விபரங்கள். updated 30-10-2012.
நாம் பிறந்த மண்ணாம் குப்பிழான் கிராமமானது போரினால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று. எமது மக்கள் பல்வேறு நாடுகளில் செல்வ செளிப்போடு வாழ்ந்து வருகிறார்கள். கடின உழைப்பினால் தமது குடும்பத்தையும் ஒரு முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றது மட்டுமல்ல தாம் பிறந்த மண்ணையும் ஒரு முன்னேற்றமான பாதைக்கு கொண்டு செல்ல முனைகிறார்கள். அந்த வகையில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்ளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உதாரணமாக நமது ஆலயங்களின் வளர்ச்சியை நோக்கலாம். மயானம், பாடசாலை, விளையாட்டு மைதானம் என்று பல வேலைத்திட்டங்கள் நடந்து வருகின்றது. அந்த வகையில் மிக நீண்ட காலமாக கவனிப்பு இன்றி இருந்த எமது சன சமுக நிலையமானது இன்று இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடமாக அமையவுள்ளது. இந்த கட்டிடம் அமையப்பெற்றால் எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஏற்கனவே கல்வித்துறையில் எமது கிராமம் சிறந்து விளங்குகிறது. 35க்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்தில் கல்வி கற்று வருகிறார்கள். இந்த நூலக வேலைத்திட்டத்தை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதற்கு இதுவரை பங்களித்தவர்களின் விபரங்கள் வருமாறு.

திரு.சிவலிங்கம் மோகன் (குடும்பம்)(சுவிஸ்) $3000.00

திரு.உதயகுமார் உஜீசன் (கு.க) (சுவிஸ்) $1500.00

திரு.கந்தையா பாலசுந்தரம் (சுவிஸ் ) 1000.00

திரு.கந்தையா சிறி (USA) $1000.00

திரு.சுப்பிரமணியம் சந்திரசேகரம் (ஜெர்மனி) $1000.00

திரு.இராசநாயகம் குடும்பம்(சசி) $1000.00

திரு.சக்திவடிவேல் சாந்தன் $1000.00

திரு.இராமலிங்கம் தியாகராஜா $1000.00

திரு.ஆறுமுகம் சிவசக்திவடிவேல்(சுவிஸ்) $1000.00

திரு.பொன்னம்பலம் கனகசபாபதி $1000

திரு/திருமதி.முத்தையா ஆசிரியர் குடும்பம் $1000

திரு.Dr.கனகசபை கனகேஸ்வரன் (அமெரிக்க)$1000.00(u.s)

திரு.கனகசபை கணேசன் (ராதன் பிரித்தானிய)$1000.00

திரு.இரத்தினம் மனோகரன் $1000.00

திரு. கந்தையா தேவசேகரம் ( திருமால்)$1000

திரு. வீரசிங்கம் இராஜசிங்கம் (கெனடி)$1000

திரு. சேனாதிராஜா இந்திரன் $1000

திரு. தம்பிராஜா ஏரம்பமூர்த்தி(தயாளன்-நோர்வே) $1000

திரு. பொன்னுத்துரை சுரேஷ்குமார்$1000

திரு/திருமதி.நாகமணி லட்சுமி குடும்பம் $1000

திரு. ஐயாத்துரை தனிஸ்வரன் $1000

திரு. வயிரமுத்து மகாலிங்கம்(ஆசிரியர்)$1000

திரு. கணேஷ் கேதீஸ் $1000

திரு. முத்துலிங்கம் பிரதீபன் $1000

திரு. தங்கராசா ரவி $1000

திரு. தம்பிமுத்து மோகன் $1000

திரு. ஐயாத்துரை சின்னராசு $1000

திரு. ஆறுமுகசாமி ஜீவன் $1000

திரு. திரு. இராமநாதன் மோகன் $1000

திரு. செல்லையா சிவா $1000

திரு.கணிதசிங்கம் புவனேஸ்வரன் $1000

திரு. வீரசிங்கம் சக்திவேல் $1000 new

திரு. வ.பகீர்$1000 new

திரு.கந்தசாமி காண்டீபன்(பிரித்தானிய)$1000.00 new

திரு. தங்கவேல்(மன்றத்தின் முன்னாள் தலைவர்)$1000.00

முத்துக்குமாரு சாந்தி $1000.00

திரு.கதிரமலை தாசன் $1000.00

திரு. நடராஜா முருகன்$1000.00

திரு. வீரபாகு அப்பன்$1000.00

திரு. இராசையா நந்தன்$1000.00

திரு.பூதப்பிள்ளை சிவகுமார் (Norway)$1000.00

திரு. கந்தையா ஞானசேகரம்(ஞானம்)$1000.00

திரு. கதிரவேலு தயாபரன் $1000.00

திரு. வல்லிபுரம் சிறிதரன்(தேவன்)$1000.00

திரு.இராசநாயகம் மதியழகன் $1000.00

திரு. சிவபிரகாசம் மேகவர்ணன் (அப்பன்)$1000.00

திரு.வீரவாகு ஞானராஜா (ரூபன்) $1000.00

திரு. பொன்னையா சிவபாதசுப்பிரமணியம்$1000.00

திரு. கனகரட்னம் கலைச்செல்வன்(பாபு) $1000.00

திரு. செல்வநாயகம் சற்சொரூபன் $1000.00

திரு. சபாரட்ணம் ஜெயக்குமார் $1000.00

திரு. தம்பிதுரை குகதாசன் $1000.00

திரு. சிவஞானம் சிவபாலன்$1000.00

திரு. நடராசா இளங்குமரன் (இளங்கோ) $1000.00

திரு. சசிகுமார்(சசிதரன்) சுவிஸ்$1000.00

திருமதி. புஸ்பம் நடராசா$1000.00

திரு. விசுவலிங்கம் சோமு $1000.00

திரு. பிதாம்பரம் வைத்தியநாதன்(ஜெர்மனி )$1000.00

திருமதி. கமலா செல்லைய$1000.00

திருமதி.சச்சியானந்தம் வர்ணமலர் (கோபால்) $1001.00

திரு. கந்தையா விக்னேஸ்வரன்(ரவி)$1000.00

திரு. குப்பிளான் ச. அன்பு (அமெரிக்க)$1000.00

திரு . தம்பிதுரை சிவானந்தன் (பிரித்தானிய)$1000.00

திரு. கந்தையா லிங்கம் (ஆசிரியர்)$1000.00

திரு. வீரப்பு அப்பன்$1000.00

திரு. தம்பிராஜா ரட்ணசிங்கம்$1000.00

திரு .கணேசலிங்கம் கணேஷ் $1000.00

திரு. சின்னதுரை சோதி$1000.00

திரு.போனம்பலம் ரத்தினசபாபதி$1000.00

திரு.சின்னத்துரை கந்தசாமி $1000.00

திரு. வல்லிபுரம் சிறிகாந்தன் $1000.00

திரு. திரு.செல்வநாயகம் பரராசசிங்கம்$1000.0

குப்பிழான் மண்ணின் மைந்தர்களாகிய எங்களில் பலரும் புலம் பெயர் தேசங்களின் பல சிறப்பான வசதிகளுடன் வாழ்ந்து வருகிறோம். இவ் வசதிகளில் முக்கியமானதொன்று community centers எனப்படும் சனசமுக நிலையங்கள் ஆகும்.
இவை ஒரு சமுகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறான நிலையங்கள் பல வசதிகளை தம்மகத்தே கொண்டுள்ளன. நூல்நிலையம், கணணி, இணைய வசதி, படிப்பறை(study room), நீச்சல் தடாகம், உடல் பயிற்சி நிலையம், கூட்ட அறைகள(meeting rooms) என்பன இவற்றில் அடங்கும்.

ஆயினும் நாம் பிறந்த மண்ணில் உள்ள சனசமுக நிலையத்தின் நிலையைப் பாருங்கள். ஒரு அரை குறைக் கட்டடத்தில் ஒரு மேசையில் சில பத்திரிகைகளை மட்டுமே தாங்கி அழுத வண்ணம் உள்ளது. உலகம் நவீன யுகத்தில் முழு வீச்சாக முன்னேறிக் கொண்டு இருக்க எங்கள் செம்மண் குப்பிழான் மட்டும் கற்கால வசதிகளுடன் பின் தங்கி நிற்பதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. குப்பிழானில் வாழும் சிறுவர்கள். இளையோர்கள், முதியோர்களின் உடலுள ஆரோக்கியம், அறிவுத் தேடல், நல்லதோர் கட்டமைப்பான சமூக வளர்ச்சி என்பவற்றில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய சனசமுக நிலையம் பல வருடங்களாக உரிய வசதிகளோ கட்டடமோ இன்றி பின்தங்கி நிற்கிறது.

இவ்வாறான வேதனைக்கு ஆறுதல் அளிக்க குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா முன்வந்துள்ளமை இனிப்பான செய்தியாக உள்ளது. குப்பிழானில் உள்ள தற்போதைய சனசமுக நிலையக் கட்டடத்தை தற்காலத்திற்கேற்ப போதிய வசதிகளுடன் இரண்டு மாடிக் கட்டடமாக மீளக் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டமானது உலகெங்கும் பரந்து வாழும் குப்பிழான் மக்களின் உதவிகளை குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா ஒருங்கிணைத்து செயற்படுத்தப்படவுள்ளது. ஆரம்பக் கட்டக் கணிப்புகளின் படி இதற்கான செலவு சுமார் 1 தொடக்கம் 2 கோடி இலங்கை ரூபாய் வரை ஆகலாமென மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இதில் 25 வீதமான தொகையை வழங்குவதற்கு பெரு மனதுடன் குப்பிழான் நலன்விரும்பிகள் முன்வந்துள்ளனர்.

பல குப்பிழான் மண்ணின் மைந்தர்கள் ஆயிரம் கனடிய, பிரித்தானிய, சுவிஸ் மற்றும் பல நாடுகளின் நாணயங்களாக வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். வேறு பலரும் தம்மாலான சிறிய தொகைகளையும் வழங்குகிறார்கள். இதில் ஆயிரம் கனடிய டொலர்களுக்குச் சமமான தொகையை வழங்குபவர்களின் பெயர்கள் அல்லது அவர்கள் விரும்பும் ஞாபகார்த்தப் பெயர்கள் புதிதாக அமையவுள்ள கட்டடத்தில் மிகச் சிறப்பான முறையில் பதிக்கப்பட்டு குப்பிழான் வரலாற்றிலேயே பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவுள்ளது. இத் திட்டத்திற்கு எங்கள் பங்களிப்பையும் வழங்கி நாம், நமது பெற்றோர் பிறந்து வளர்ந்து ஓடி ஆடி விளையாடி இன்றைய நிலைக்கு உயர அடித்தளம் தந்த குப்பிழான் மண்ணிற்கு எங்கள் நன்றி கடனை செய்வோம்.

உங்கள் உதவிகளை வழங்க குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா

தலைவர் திரு நா பாலசுப்பிரமணியம் 647-624-7357

பொருளாளர் திரு சி விக்கினேஸ்வரன் 647-286-9089

செயலாளர் திரு செ சற்சொரூபன் 418-854-4290