குப்பிழான் விக்கினேஸ்வரா சன சமூக நிலையத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் 29-12-2016 அன்று நடைபெறவுள்ள இவ்வேளையில் அதன் எதிர்கால செயல்பாடுகள். updated 26-12-2016

 

உறுதி கொள்வோம் எமது மதிப்பிற்கு உரிய குப்பிழான் வாழ்மக்களே!

உங்கள் அனைவரக்கும் எமது பணிவான வேண்டுகோள். எமது மண்ணில் கேந்திரமுக்கியத்துவம் கொண்ட ஒரு இடத்தில் ஒரு அழகான நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள கட்டிடமானது எமது மன்றத்தின் பலவருட கடும் உழைப்பிலும் புலம்பெயர் வாழ் குப்பிழான் மக்களின் தன்னலமற்ற ஒத்துழைப்பினாலும் குப்பிழான் விக்கினேஸ்வரா சனசமூக நிர்வாகத்தினரின் நேர்மையான செயற்திறனாலும் உருவானது.

இருப்பினும் கட்டிடத்திற்கான அழகுபடுத்தும் சிலவேலைகள் பாக்கியுள்ளது. அத்துடன் புத்தகங்கள் உட்பட தளபாடங்கள் இதர உபகரணங்களும் வழங்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.

கட்டிடம் உத்தியோக பூர்வமாக திறக்கப்படும் நாளில் இருந்து நூல் நிலைய மேற்பார்வையாளர் ஒருவர் மாதாந்த கட்டண அடிப்படையில் நியமிக்கப்பட்டு அவர்மூலம் நூல்நிலையத்திற்கான செயல்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

முதல் கட்டமாக சில செயற் திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என நாம் கருதுகிறோம்.

1- தினசரி பத்திரிகைகள் உட்பட மதாந்த சஞ்சிகைகள் பாடப் புத்தகங்கள் என்பன மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல்.

2- ஆசிரியர் ஒருவர் நியமிக்கபட்டு அவர் மூலம் சிறுவர்களுக்கான வாசிப்பு ஆற்றலை வளர்த்தல், மூளை வளர்ச்சிக்கான விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்தி பயிற்சி பெறுதல். இச் சந்தர்ப்பத்தில் பெற்றோர்களும் கூடவே இருப்பார்கள்.

3- எமது பாடசாலை மாணவர்கள் ஒய்வு நேர பாட வேளையில் அவர்கள் விரும்பும் பட்சத்தில் எமது நூல்நிலயத்தை பயன்படுத்த ஒழங்கு செய்து கொடுத்தல்.

4- வைத்தியர் ஒருவர் மாதம் ஒரு முறை அல்லது குறிப்பிட்டகாலத்துக்கு ஒருமுறை அழைக்கப்பட்டு முதியவர்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை வழங்கல்.

இது மட்டுமன்றி காலப்போக்கில் கலைஇ கலாச்சாரஇ கல்வி புகட்டுதல்இ அனைத்து வயதினர்க்குமான கணனி பயிற்சிஇ தமிழ்இ ஆங்கில பேச்சாற்றலுக்கான பயிற்சிஇ பாடசாலை விட்டு நீங்கிய மாணவர்களுக்கான தேவை எதுவென கண்டறிந்து அவர்களை வழிப்படுத்தல்.


மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அனைத்து வயதினர்க்குமான பொழுது போக்கு வசதிகளை வழங்கல்.
தேவைப்படும் பட்சத்தில் மேலும் பல செயற்திட்டங்களை உட்புகுத்தி எமது மக்கள் அனைவரும் பயன் பெறும் ஒரு முக்கிய இடமாக மாற்ற எமது மன்றம் அயராது உழைக்கும் என நம்புகின்றோம்.

எனவே மக்களே இந்த அழகான கட்டிடம் அனைத்து மக்களுக்கும் ஆக்க பூர்வமான முறையில் பயன்பட்டு யாழ்மாவட்டத்தில் இதுவும் சிறந்த நூல்நிலையம் என்பதனை உறதி செய்யும் பொறுப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது.

இதோ அதற்கான முதல் சந்தர்ப்பம் 31-மார்கழி-2016 நூல்நிலைய மண்டபத்தில் நடைபெறவிருக்கும் பொது கூட்டத்தில் அனைவரும் தவறாது சமூகமளித்து குப்பிழானின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களையம் ஒன்று சேர்த்து தன்னலமற்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி மக்களின் நலன் ஒன்று மட்டும் தான் எமது குறிக்கோள் என இயங்கும் ஒரு நிர்வாகசபயை அமையுங்கள். அப்படி அமைய எமது மன்றத்தின் நல்லாசிகள்.

ஒன்றுபடுவோம் நாம் வென்று விடுவோம் நம் கனவை.

எம்மண்ணின் உயர்வு ஒன்றே எம் மன்றத்தின் குறிக்கோள்.

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா