இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கும் ஒரு வேளை உணவுக்கும் உங்களிடம் உதவி கோருகிறார்கள் எமது ஊரை பிறப்பிடமாக கொண்ட திருமதி நடராசா பத்மலீலா.அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எமது உறவுகளே
கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற போரில் எமது தாயக மக்கள் பாதிக்கப்பட்டு சொல்லோண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். அதுவும் இறுதியாக நடைபெற்ற வன்னிப்போர் எவ்வளவு கொடுமையானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் இருந்தாலும் எப்படி உதவுவது, உதவி பெறுபவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் தானா என்ற கேள்வியுடன் யாரும் உதவிகள் செய்ய முன்வருவமில்லை. இந்த இறுதி யுத்தத்தில் எமது கிராமத்தை சேர்ந்த உறவுகளும் பாதிக்கப்பட்டார்கள் என்தை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் எமது ஊரைப் பிறப்பிடமாக கொண்ட வைத்திலிங்கம் (வண்டில்கார) அவர்களின் பேத்தி மணி (நடராசா பத்மநீலா) அவர்கள் எமது ஊடகத்தோடு தொடர்பு கொண்டு தமது தற்போதைய நிலமைகளை தெளிவுபடுத்தினார். ஆனாலும் அவருடைய நிலமையை உடனடியாக வெளியிடுவதற்கு தயங்கினோம். ஆனால் அவர் தனது கஸ்ட நிலமைகளை தனது சொந்தக்காரர்கள், நண்பர்கள், ஊரவர்களுக்கு தெரியப்படுத்தும்படி இரங்கி கேட்டு கொண்டார். இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை செய்தார். அவர்கள் உண்மையில் கஸ்ட நிலமையில் இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்திய பின்னர் இதை வெளியிடுகின்றோம்.இறுதி யுத்தத்தில் பாதிக்கபட்ட குடும்பங்களில் அவரின் குடும்பமும் ஒன்று. அவரின் கணவர் பெயர் ஆறுமுகம் நடராசா, அவர்களுக்கு 3 பிள்ளைகள் உண்டு. பிள்ளைகள் விபரம் சுஜாதா (10), இன்னிசை(07), கெளரிதரன்(03). போரின் காரணமாக அவரின் கணவரின் வலது காலும் கையும் இயங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. மணி அவர்களுக்கு இடது காலும் முழங்காலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவரால் கடினமான வேலை செய்ய முடியாது. அவரின் மூத்த மகளுக்கு ஒருவகை குண்டுத் தாக்குதல் காரணமாக தோல் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தற்போது எது வித வருமானங்களும் இல்லை சாப்பாடுக்கே கஸ்டபடும் இவ்வேளை மருத்துவ செலவுக்கு என்ன செய்வதென்று அறியாமல் மிகவும் கவலையில் உள்ளனர்.
ஆகவே எமது உறவுகளே உங்களால் இயன்ற சிறு உதவிகளை செய்யுமாறு வேண்டுகின்றோம், அவரிடம் உங்கள் உதவிகளை நேரடியாக அனுப்ப முடியும். மிக சிறு தொகை என்றாலும் பறவாயில்லை நேரடியாக அனுப்ப கஸ்டம் என்றால் உதவும் கரங்கள் சுவிஸ், விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள அமைப்புக்களினூடும் அனுப்பி வைக்கலாம்.
இந்த செய்தியானது யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. ஒருவர் உதவி தேவை என்று கோரும் போது அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு.

அவர்களுக்கு நேரடியாக உதவி செய்ய விரும்புபவர்கள் அவர்களின் வங்கி இலக்கம் பின்வருமாறு
வங்கி பெயர்- HNB
கணக்கு இலக்கம் - 195020001547
மூங்கிலாறு
உடையார்கட்டு தெற்கு
முல்லைத்தீவு.

அடையாள அட்டை இலக்கம் - 728364971v


தொலைபேசி இலக்கம் - 0094774563626