அமரர். இராமநாதன் சிவசோதி ஞாபகார்த்தமான இராமநாதன் குடும்பத்தினரின் குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விளையாட்டுக் கழக தலைவர் அறிக்கை updated 08-09-2012அமரர் இராமநாதன் சிவசோதி ஞாபகார்த்தமான இராமநாதன் குடும்பத்தினரின் பாரிய அளவிலான மைதான அபிவிருத்தித் திட்டங்கள் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக வரலாற்றில் மிக முக்கிய திருப்புமுனையான காலகட்டமாகவும் எமது விளையாட்டு கழகத்தின் வளர்ச்சியில் ஓர் மைல் கல்லான விடையமாகவும் காணப்படுகின்றது.
எமது மண்ணிற்கும் எம் மண்ணில் பிறந்து வளர்கின்ற ஓவ்வெரு பிள்ளையின் உடல் உள ஆற்றல்களை வளர்ப்பதற்கும் நல்ல ஆரேக்கியமான சமுதாயத்தினை நவீனமயமான முறையில் வளர்ப்பதற்கும் தற்போதய அபிவிருத்தி திட்டங்களிற்கு பாரிய பங்களிப்பினை வழங்குகின்றமையானது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக வீரர்கள் மற்றும் முன்னால் விளையாட்டு வீரர்களும் ஏனைய குப்பிளான் மக்களினது மனங்ளில் சந்தோசத்தினையும் இராமநாதன் குடும்பத்தினரின் மைதான அபிவிருத்தித் திட்டங்களிற்கான ஆதரவும் பாரட்டுக்களையும் எமது நிர்வாகத்தினரிடம் தெரிவிப்பதன் மூலம் நாம் இன்னும் மிக உத்வேகத்துடன் மைதான அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்திவருகிறோம்.

முன்னைய நிர்வாகத்துடன் திரு.நா.பாலசுப்பிரமணியம் (அப்பன்- கனடா) அவர்கள் இனைந்து விளையாட்டுக் கழகத்திற்கான கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது. அது போல் தற்போது முழுமையான விருப்புடன் இராமநாதன் குடும்பத்தினர் இனைந்திருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினை தருகின்றது. அத்துடன் விளையாட்டுக் கழக வரலாற்றில் தமக்கென ஒரு இடத்தினையும் பிடித்திருப்பதுடன் மேலும் எம்முடன் இனைந்து செயற்பட அனைவரையும் அழைப்பதுடன் தமது பங்களிப்பினையும் எமக்கு வழங்குவதுடன் எம்முடன் இனைந்து செயற்படும் போது நிதி மற்றும் ஏனைய விடையங்களையும் சிக்கனமாகவும் பல்வேறு சவால்களிற்கு இலகுவான தீர்வினையும் கண்டு குறித்த திட்டங்களை சிறப்பாக செயற்படுத்தலாம்.

முதல்கட்டமாக மைதானத்தின் நீள அகலத்தினை கருத்தில் கொண்டு தெற்கு பக்கத்தில் ஒரு பகுதி காணி கொள்வனவு செயப்பட்டுள்ளதுடன் அவ் காணியினை பயன்படுத்தி சிறப்பான வடிவமைப்பிலானதும் யாழ்ப்பாணத்தில் உள்ள மைதானங்களில் எமது மைதானத்தினையும் ஓர் சிறந்த மைதானமாக மாற்றவுமே நாமும் இராமநாதன் குடும்பத்தினரும் மற்றும் அனைவரும் பாடுபட்டு செயற்படுகின்றோம்.

அடுத்து மைதானத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் திட்டத்தில் மைதானத்தின் மேற்கு பக்கமாகவுள்ள மதில் அமைக்கும் வேலைகள் மற்றும் நெற் அடிக்கும் வேலைகளும் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அது போல் மைதானத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் திட்டத்தில் மைதானத்தின் தெற்கு பக்கமாகவுள்ள மதில் அமைக்கும் வேலைகள் ஆரம்பிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எனவே தெற்கு பக்கத்தில் உள்ள காணி சம்மந்தமான விடையங்களை கையாளவும் குப்பிளான் மண்ணில் வசிக்கின்ற மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற அனைவரும் இத்திட்டங்களை செயற்படுத்தவும் எமக்கு மேலும் மேலும் ஒத்துழைப்புக்களையும் ஆலேசனைகளையும் வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்வதுடன் மீண்டும் இராமநாதன் குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த நன்றியினையும் நிர்வாகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறோன்.


நன்றி
தலைவர்
இ.நிரூபன்
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்


குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைக்கும் திட்டம் தொடர்பாக. 08-09-2012
எமது குப்பிளான் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கின்ற எமது கிராமத்தவர்களால் உருவாக்கப்பட்ட விக்கினேஸ்வரா கனடா மன்றம் எமது குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைப்பதற்கான பொறுப்பினை ஏற்றுள்ளதுடன் அதற்காக மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இரவு பகல் பாராது எம்முடன் இனைந்து செயற்பட்டு வருகின்றமையும் ஆதன் அடிப்படையில் கனடா மன்றத்துடன் இணைந்து எமது நிர்வாகம் செயற்படுகின்றமையும் அனைவரும் அறிந்த விடயமாகும்.

எமது சனசமூக நிலையத்திற்கான நூலக கட்டிடம் அமைப்பதன் மூலம் குப்பிளான் மண்ணில் வசிக்கின்ற ஓவ்வெரு பிள்ளையின் கல்வி கலை கலாச்சார மற்றும் கணனி அறிவினை மேம்படுத்துவதாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

எமது குப்பிளான் மண்ணில் பிறந்து குப்பிளான் மண்ணில் மிகுந்த பற்றுடன் வெளிநாடுகளில் வசிகின்ற தாங்கள் முழுமையான விருப்புடன் இத்திட்டத்தில் பங்கெடுத்து பாரிய பங்களிப்பினை வழங்குகின்றமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினை தருகின்றது.

முதல்கட்டமாக சுற்றுமதில் அமைக்கும் திட்டத்தில் சனசமூக நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள மதில் அமைக்கும் வேலைகள் மற்றும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக 160 அடியும் மதிலும் 20 அடி மதிலுக்கு பூச்சு மட்டுமான வேலைகளும் முன்பக்கத்தில் மதிலும் மற்றும் இரட்டை நுழைவாயிலுக்கு இடையில் அமைந்ததான கேற்றும் தயாரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது தெற்கு பக்க மதில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றது. எனவே அனைவரும் ஒன்றினைந்து கிராமத்தின் வளர்ச்சிக்கு பங்ளிப்பு செய்வோம்.

நன்றி
தகவல்
இ. நிரூபன்