school2
 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


அழிக்கப்பட்ட பாடசாலை மண்டபத்தை மீண்டும் அமைப்பதற்கு உங்களின் உதவியை நாடி மீண்டும் அழைப்பு. updated 21-10-2012அன்பான எமது உறவுகளே
குப்பிழான் கிராமத்தில் பிறந்த பெரும்பாலானவர்கள் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் தமது ஆரம்ப கல்வியை கற்றுள்ளார்கள். சிலர் கல்வி கற்றிருக்கலாம் அல்லது கற்காமல் இருந்திருக்கலாம். இன்று எமது பிள்ளைகள் புலம் பெயர் தேசங்களில் இலவசக் கல்வியை பெறுகின்றார்கள். அந்த பாடசாலையை நமது சொந்த பணத்தில் கட்டப்படவில்லை. பெரும்பாலான பாடசாலைகள் அரசாங்கத்தால் அமைக்கப்படவில்லை, சமூகத்தில் அக்கறையுள்ள நல்ல இதயங்களால் அமைக்கப்பட்டது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது வழித்தோன்றல்களோ பயன்பெறுகிறார்களோ இல்லையோ அகதிகளாக வந்த நாங்கள் மிகப்பெரிய பயனை பெற்று இப்போது நமது பிள்ளைகள் வைத்தியர்களாகவோ அல்லது பொறியலாளர்களாகவோ இருப்பதற்கு காரணம் நாம் அல்ல. அன்று வாழ்ந்த அந்த சமூகத்தில் அக்கயையுள்ள நல்ல உள்ளங்கள் தான். அதே போல் எதிர்கால எமது சந்ததிகள் நல்ல அறிவுள்ள சமூகமாக இருப்பதற்கும், அவர்களும் எமது பிள்ளைகள் போல் நல்ல வாழ்வை வாழ்வதற்கு கல்வி அவசியம். அந்த கல்வியை கொடுக்கும் பாடசாலையை மீளவும் அமைத்துக் கொடுப்பது எல்லோரினதும் கடமையாகும். அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட பாடசாலை மண்டபம் திரும்பவும் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கி விட்டன.

அந்த பாடசாலையின் பழைய மாணவன் மற்றும் எமது கிராமத்தின் மூத்த குடிமகன் தனது 95 வயதிலும் தான் படித்த பாடசாலையின் வளர்ச்சிக்காக 25 லட்சம் ரூபாவை வழங்கி கட்டிட வேலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார். தனது ஒரு காலையும் இழந்த நிலையில் தள்ளாடும் வயதிலும் எமது கிராமத்தின் வளர்ச்சியில் ஆர்வமாக இருக்கும் போது சுகதேகியாக இருக்கும் நாம் ஏன் இதைச் சிந்திக்க மறந்தோம். ஊரை விட்டு வெளியேறிதோடு எமது உணர்வுகளும் செத்து விட்டதா.
70 வருடங்களுக்கு முன்பு தாய் மண்ணை விட்டு புலம்பெயர்ந்த ஒரு மனிதனின் நன்றி விசுவாசம் அண்மையிலே வெளியேறிய சிலருக்கு இல்லாமல் போனது மிகவும் கவலை அழிக்க கூடிய விடயமாகும். ஆனாலும் இன்று எல்லோரும் மனசாட்சியை அல்லது மனிதத்தை விட்டு விட்டு வாழவில்லை. எத்தனையோ நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு எங்களின் அன்பான வேண்டுகோள். எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்த மண்டபத்தை கட்டி முடிப்பதற்கு 60 லட்சங்கள் தேவைப்படுகிறது. திரு கிருஸ்ணன் ஜயா வழங்கிய 25 லட்சத்தை கொண்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து வேலைகளை செய்வதற்கு உங்கள் பங்களிப்பு அவசியமாகும். இலங்கை ரூபாவில் 1 லட்சத்திற்கு மேல் வழங்குபவர்களின் பெயர்கள் கல் வெட்டில் பதிக்கும் அவ்வேளை அதற்கு குறைவான தொகையை வழங்குபவர்களின் பெயர்கள் குப்பிழான் வெப் இணையத்தளத்திலும், பாடசாலை திறப்பு விழா மலரிலும் இடம்பெறும் என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். கட்டிட வேலைகளை தெடர்ந்து செய்வதற்கு உங்கள் உதவிகள் மிகவும் அவசியம் ஆகவே உங்கள் உதவிகள் எமக்கு உடனடியாக கிடைக்க வழி செய்யுமாறு வேண்டுகின்றோம். பாடசாலை திறப்பு விழா மலரில் உங்களின் ஆக்கங்களும் இடம்பெறவேண்டுமானால் உடனடியாக எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு

பிரித்தானியா

திரு ப.உபேந்திரன் - 00442838394697, 00447939100865
திரு கருணாகரன் - 00447868522368
திரு இ.சச்சிதானந்தன் - 00447884238359
திரு பா.முகுந்தன் - 00447572875382
திரு சு.அருந்தவராஜா(சேகர்) - 00447831378022
அல்லது குப்பிழான் விக்கினேஸ்வரா மன்ற உறுப்பினர்கள்.

சுவிற்சலாந்து

திரு பஞ்சலிங்கம் பாஸ்கரன் - 0041799647561
திரு
காங்கேசு அசோக்குமார் - 0041788467486
திரு சிவலிங்கம் சிவகுமார் - 0041447255002
திரு தம்பிமுத்து மேனன் - 0041323732572
திரு சிவசுப்பிரமணியம் கிருஸ்ணதாஸ் - 0041797803036
திரு தில்லையம்பலம் சசிகுமார் - 0041797151906