#

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


நீண்ட போரின் கொடுமையால் சிதைக்கப்பட்ட எமது பாடசாலையான குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தின் தற்போதைய நிலையும் அதனை மீழ் அமைக்க வேண்டிய பாரிய பொறுப்பும்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலய வேலி கிராமத்தின் வட எல்லையை ஆக்கிரமித்து நிற்க அதனால் ஏற்பட்டுள்ள இன்னல்களை எல்லாம் சுமந்து கொண்டு குப்பிழான் கிராமம் தனது வாழ்வை நடாத்திக் கொண்டிருந்த காலம் ஒன்றிரண்டு வருடம் அல்ல 25 வருடங்கள். உயர் பாதுகாப்பு வலயம் சார்ந்த ஊர்களில் மிகக் கூடிய சன அடர்த்தியைக் கொண்ட கிராமமாகக் குப்பிழான் கிராமம் விளங்கியது என்றால் அது மிகையாகாது. இக்கிராமத்தில் முன்பு 2000 குடும்பங்கள் இருந்தன தற்போது 1200 குடும்பங்கள் வரை உள்ளன எனலாம். போர் காரணமாக 50 வீதமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். எமது கிராமத்தின் வடக்கின் பெரும்பகுதி குறிப்பாக சமாதி கோவிலடி, முத்தர்வளவு, பலட்டன், ஊரங்குணை பிரதேசம், கற்கரையின் பெரும்பாலான பிரதேசம், கற்கரை விநாயகர் ஆலயத்தின் வடக்கு பகுதி முற்றாகவே அழிக்கப்பட்டுள்ளது.

எமது கிராமத்தின் ஏக கல்வி நிலையமாக விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம் அமைந்துள்ளது. 1928 ஆம் ஆண்டு எமது சமூக அக்கறையுள்ள ஊர் பெரியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையில் தான் பெரும்பாலான எமது கிராம மக்கள் தனது ஆரம்ப கல்வியை கற்றனர். தரம் 11 வரை உள்ள இப்பாடசாலையில் 1970, 1980 களில் 800க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். பொதுப் பரீட்சைகளில் சாதனைகள் படைத்து உயர் கல்விக்காக வேறு பாடசாலைகளுக்கு சென்றவர்களும் உள்ளனர். இன்று சுமார் 250 மாணவர்கள் வரையே கல்வி கற்கின்றனர். போரின் கொடுமை அதனால் ஏற்பட்ட புலப்பெயர்வுகள், வசதிகள் போதுமானவளவு இன்மை இப்பாடசாலையின் பின்னடைவுக்கு காரணமாயின.

இப்பாடசாலையானது எமது கிராமத்தின் அனைத்து சமூக நடவடிக்கைகளுக்கும் பங்களிப்பு செய்யும் சமூக மையமாகவும் விளங்கி வந்துள்ளது. பாடசாலையின் பிரதான மண்டபமே கிராமத்தின் மக்கள் ஒன்று கூடுவதற்கேற்ற ஒரே ஒரு களமாக அமைந்திருந்தது. முறைசார்ந்த, முறைசாராக் கல்வி வளர்ச்சிக்கும், கலை எழு்ச்சிக்கும் இம்மண்டபம் செய்து வந்த பங்களிப்புக்கள் வார்த்தைகளில் சொல்லியடங்கா. பாடசாலையோ, பொது நிறுவனங்களோ பல்வேறு நிகழ்ச்சிகளை இம்மண்டபத்தில் நடாத்தி வந்தன. எமது கிராமத்தின் பெரிய மண்டபமும் இது தான். ஒவ்வொரு வருடமும் இந்த மண்டபத்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை பாடசாலை மாணவர்கள் மட்டுமல்ல ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.1988ம் ஆண்டு இந்த மண்டபத்தில் மிகப்பெரியளவில் பொதுமக்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய விழாவாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரு குணாளம் ஆசிரியர் அவர்களின் நெறிப்படுத்தலில் இரு பெரும் நாடகங்கள் எல்லோரையும் மிகவும் கவர்ந்தது. கு.குகதாசன், எம் எஸ் சிவகுமார், மார்க்கோணி, ஜெயக்குமார், செல்வம், உபேந்திரன், சக்தி போன்றவர்களின் நடிப்பு திறமையை எல்லோரையும் கவர்ந்தது. இது தான் இந்த மண்டபத்தில் நடைபெற்ற பெரிய இறுதி விழாவாக கணிக்கப்படுகிறது.


போரின் கொடுமையால் 1990 ஆம் ஆண்டு இம் மண்டபம் முற்றாக அழிக்கப்பட்டமை மேற்கண்ட பல நன்மைகளை புறந்தள்ளியது. திரு சிவகுமார் ஆசிரியர் அதிபராக கடமையாற்றிய பொழுது இந்த மண்டபத்தை திரும்ப அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் அரசாங்கத்தின் ஆதரவில் இந்த மண்டபத்தை கட்ட முயற்சித்த போது அது கை கூடவில்லை. ஆதலால் எமது கிராம மக்களின் உதவியுடன் இந்த மண்டபத்தை அமைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. திரு சிவகுமார் ஆசிரியரால் 2007ம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு எமது கிராம மக்களின் சிலரது உதவியுடன் இந்த மண்டபத்தின் ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டது. திரு சிவகுமார் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் கட்டிடத்தினை தொடர்ந்து கட்டும் பணி பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. புதிய நிர்வாகம் இந்த கட்டிடத்தினை கட்டி முடிப்பதற்கு போதியளவு ஆர்வம் செலுத்தவில்லை.

செல்வந்தர்களின் பிள்ளைகள் அயல் கிராமத்து பாடசாலைகளில் கற்று வரும் வேளை, ஏழை பிள்ளைகள் தொடர்ந்தும் இங்கேயே கல்வி கற்று வருகிறார்கள். கட்டிட வேலைகள் அத்திவாரத்தோடு நின்று விடுமோ என்று எல்லோரும் எண்ணும் நேரத்தில், எங்கோ ஒரு மூலையில் இருந்து எமது கிராமத்தின் மூத்த மகன் திரு கிருஸ்ணன் ஜயா அவர்கள் கிருஸ்ணபரமாத்வாக உருவெடுத்து பாடசாலை கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது தள்ளாத வயதிலும் உதவி கேட்டு கடிதங்களை உலகின் எல்லா மூலைகளிலும் வாழும் எமது உடன் பிறப்புக்களுக்கு அனுப்பினார். ஆனாலும் அதனால் உடனடியாக ஒரு மாற்றமும் நடந்துவிடவில்லை. ஆனாலும் அவர் தனது முயற்ச்சியை கைவிடவில்லை. அவர் தனது பங்களிப்பாக 6,58,690.00 ருபாவை வழங்கினார்.

இதே சமயம் இந்த கட்டிட வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு திரு சிவ மகாலிங்கம் தலைமையில் பாடசாலை அபிவிருத்தி மன்றம் தொடங்கப்பட்டது. திரு கிருஸ்ணர் மற்றும் தாயகத்தில் வாழ்ந்துவரும் காயகிட்டினரின் மருமகளினால் அவரது கணவர் அமரர் சுந்தரலிங்கம் ஞாபகார்த்தமாக 350,000 ரூபாவும், பிரித்தானியாவை வதிவிடமாக கொண்ட திரு பாக்கியநாதன் அவர்களால் 50,000 ரூபா வழங்கப்பட்டது. செய்த பங்களிப்பை கொண்டு வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிதி வசதி இன்மையால் மீண்டும் வேலைகள் இடை நிறுத்தப்பட்டன.


அதே சமயம் உள்ளூராட்சி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் அரசாங்கத்திடம் இருந்து ஒரு கடிதம் அதிபருக்கு அனுப்பப்பட்டது. அதில் பாடசாலை கட்டிடத்தை கட்டி தருவதாக கூறப்பட்டது. அதன்பின் உள்ளூராட்சி தேர்தலில் ஆழும் கட்சி படு தோல்வி அடைய தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது என்பது யாவரும் அறிந்ததே. கல்வி திணைக்களத்தோடு தொடர்பு கொண்டு வினாவிய போது தம்மிடம் போதிய நிதி வசதி இல்லை என்று பதில் தரப்பட்டது. இது அரசால் மேற்கொள்ளபட்ட பிரச்சார யுக்தியாக நோக்கப்படுகிறது. உள்ளூராட்சி தேர்தலுக்காக பல பணிகளை தொடங்கினார்கள் இன்று எல்லாம் அப்படியே தொடங்கிய நிலையில் இருக்கிறது.93வது வயதை தாண்டிய அந்த குப்பிழான் மைந்தனின் குரல் மெல்ல மெல்ல எல்லோருடைய மன சாட்ச்சியையும் எட்டி உதைத்தது. அந்த மனச்சாட்சி தான் குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா உங்கள் சார்பில் அந்த பொறுப்பை எடுத்துள்ளது. இந்த மண்டபத்தை மூன்று மாடி கட்டிடமாக அமைப்பதற்கு அத்திவாரம் இடப்பட்டது. நாம் எல்லோரும் சேர்ந்து முதல் மாடியை கட்டி கொடுப்போம் அரச உதவி கிடைக்கும் போது மற்யை இரண்டு மாடிகளை கட்டலாம். பிரித்தானியா மன்றம் இந்த பொறுப்பை எடுத்ததே தவிர கட்டி கொடுக்கப்போவது உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து வரும் எமது உறவுகள் தான். போர் சூழாலால் நாம் எல்லோரும் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறோம் அதற்காக பிரித்தானியாவோ சுவிற்சலாந்தோ அல்லது மற்றைய நாடுகளோ எமக்கு சொந்தமல்ல. இவையெல்லாம் அகதியாக வந்த எமக்கு விரும்பியோ அல்லது விரும்பாமலோ அடைக்கலம் கொடுத்த நாடுகள். அதற்காக நாம் இந்த நாடுகளின் உண்மையான பிரஜைகள் அல்ல அதற்கு உரிமை கோரவோ எமக்கு எதுவித அருகதையும் இல்லை. பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் குப்பிழான். நாம் வாழ்ந்த, வாழுகின்ற பிரதேசங்களால் எம்மிடையே எதுவித பேதங்களைகளை யாராலும் உருவாக்க முடியாது. தூரங்கள் மட்டும் தான் எம்மை பிரிக்கின்றதே தவிர எமது உணர்வுகளை அல்ல.

இந்த மண்டபத்தின் கீழ் மாடியை அமைப்பதற்கு குறைந்தது இன்னும் 60 லட்சங்கள் தேவை. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் சிறு துளி பெரு வெள்ளம். உங்கள் உதவிக்கான சகல கணக்கு விபரங்களும் உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். எந்த காரணம் கொண்டும் இந்த நிதி தனிப்பட்ட ஒருவரிடம் வழங்கப்படமாட்டாது. இந்த பணியை பாடசாலை அபிவிருத்தி மன்றமே மேற்கொள்ளும். இந்த நிர்வாகத்தில் திரு சிவ மகாலிங்கம். திரு சசிதரன், திரு சிவலிங்கம் (GM) பங்கெடுக்கிறார்கள். அன்று இராமர் பாலம் கட்டும் போது அணிலும் தன் பங்கை செய்ததாக இதிகாசம் கூறுகிறது. அதே போல் உங்களுக்கு வசதி இல்லாவிட்டாலும் உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பை செய்யுங்கள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் மிகவும் நேர்மையான நிர்வாகம் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஆகவே எவ்வித தயக்கமும் காட்டாது உங்கள் ஆதரவை நல்குங்கள். காலத்தால் செய்த சிறு உதவி ஞாலத்தால் போற்றப்படும். இது வள்ளுவன் வாக்கு. அதே போல் நாம் செய்கின்ற இப்படியான உதவிகள் என்றுமே வீணாக போகாது. எமது சந்ததிகள் கல்வியில் சாதனைகள் படைத்து எம்மை வாழ்த்துவார்கள். அவர்களின் வாழ்த்துக்கள் எமது பிள்ளைகளை வாழ வைக்கும். இந்த பாடசாலையை அரசாங்கம் கட்டி தரவில்லை எமது மூதாதையர்கள் தான் கட்டினார்கள். எமது மூதாதையர்கள் எமது வாழ்வுக்கென்று பலவற்றை விட்டு சென்றார்கள் நாம் எதை விட்டு செல்ல போகுறோம்.

பங்களிப்பு செய்ய விரும்புபவர்களும், மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள்.

உபேந்திரன் - 02838394697

ஜங்கரலிங்கம் - 00447983717888

அருந்தவராசா - 00447831378022

விக்கினேஸ்வரா மன்ற உறுப்பினர்கள்

kuppilan@hotmail.com Email மூலமோ அல்லது welcometokuppilanweb facebook மூலமோ உங்கள் பெயர் தொலைபேசி எண்களை தெரிவிக்கவும் நாம் உங்களோடு தொடர்பு கொள்வோம்