குப்பிளானில் கட்டப்படும் தேவாலயத்திற்கு எதிராக சைவப் பெரு மக்களால் மேற்கொள்ளப்படும் அகிம்சை வழி செயற்பாடு தொடர்பாக

தனித்தமிழ் சைவக்கிராமமாகிய குப்பிளான் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் இல்லாத இக்கிராமத்தில் கட்டப்படும் கிறிஸ்தவதேவாலயம் தொடர்பாக பிரதேச சபைக்கும் பிரதேச செயலத்துக்கும் மாவட்ட செயலத்துக்கும் அகிம்சை வழி போராட்டத்தின் மூலம் தெரியப்படுத்தி இருந்தோம். இதன் பயனாக பிரதேச சபையினால் தடை உத்தரவுக் கடிதம் வழங்கி தோவாலய திறப்பு விழாவையும் வழிபாட்டு முறைகளையும் தற்காலிகமாக தடைசெய்துள்ளனர்.

இருந்த போதும் தோவாலயத்துடன் தொடர்புடைய சிலர் அதை உதாசீனம் செய்து எமது கிராமத்தில் அமைதியின்மையினை ஏற்படுத்தி தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். எனவே குப்பிளான் கிராமத்தில் வசிக்கின்ற ஒவ்வெரு சைவ மக்களும் ஒன்றாக அணிதிரளவேண்டியது காலத்தின் தேவையாகும்.

'எமது கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர் அல்லர். அவர்கள் எமது பிராந்தியத்தில் புதிதாக தமது செயற்பாடுகளை மேற்கொள்வதும் எமது வாழ்வின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் மாற்றுமத செயற்பாடுகளில் ஈடுபடுவதும் எமது கிராமத்தில் சமுக அமைதியின்மையின்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அமைதியான வாழ்வுச்சூழலை உத்தரவாதப்படுத்தி உறுதிப்படுத்தும் வரை எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

என்ற (மனு மூலம் அரசஅதிபருக்கு வழங்கப்பட்ட) தீர்மானத்திற்கு அமைய தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் சைவபெரு மக்கள் அனைவரையும் ஒன்றாக அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

இடம் :- கிராம அபிவிருத்திச் சங்க மண்டபம்

நேரம் :- பிற்பகல் 4.00மணி

காலம் :- 21.10.2012 ஞாயிற்றுக்கிழமை

 

தகவல்

.......................
திரு. க.சுதர்சன்
செயலாளர்
சைவ மகாசபை
குப்பிளான்

குப்பிளானில் கட்டப்படும் தேவாலயத்திற்கு எதிராக சைவப் பெரு மக்களால் மேற்கொள்ளப்படும் அகிம்சை வழி செயற்பாடு தொடர்பாக

மறுபக்கத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக நடைபெறும் கூட்டத்திற்கு குறித்த நேரத்திற்கு கீழ் குறிப்பிடப்பட்ட அனைத்து நிர்வாகத்தினரையும் தவறாது பங்குகொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கற்கரை கற்பக விநாயகர் ஆலயம்
2. சொர்க்கவளவு சோதி விநாயகர் ஆலயம்
3. கன்னிமார் கௌரிஅம்பாள் ஆலயம்
4. சிவகாமி அம்மன் ஆலயம்
5. காளி அம்பாள் ஆலயம்
6. வீரபத்திரர் ஆலயம்
7. பேச்சி அம்மன்
8. முனியப்பர் ஆலயம்
9. முத்தர்வளவு பிள்ளையார் ஆலயம்

1. குப்பிளான் விக்கினேஸ்வரா சனசமூக நிலையம்
2. குப்பிளான் கலை இலக்கிய மன்றம்
3. குப்பிளான் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
4. குப்பிளான் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம்
5. குப்பிளான் கிராம அபிவிருத்தி அமைப்பு
6. குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்
7. குப்பிளான் குறிஞ்சி குமரன் சனசமூக நிலையம்
8. குப்பிளான் குறிஞ்சி குமரன் விளையாட்டுக் கழகம்
9. செந்தில் நாதையர் ஞாபகார்த்த சபை
10. குப்பிளான் விவசாயிகள் சம்மேளனம்

குப்பிளான் கிராமத்தில் வசிக்கின்ற ஒவ்வெரு சைவபெரு மக்களும் ஒன்றாக அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சைவ மகாசபை
குப்பிளான்