லண்டன் மாநகரில் நடைபெறவுள்ள எமது ஊரின் பொன்விழா கொண்டாட்டம் தொடர்பான மிக முக்கிய அறிவித்தல்கள். updated 12-09-2014


குப்பிழான் என்ற கிராமம் தனி கிராமமாக உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இனிய நிகழ்வை சிறப்பாக கொண்டாட சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வானது 29-11-2014 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணிக்கு நிறைவு பெறும். நடைபெறும் இடம் - Warren school, Warren Sport Centre, Whalebone lane north, Chadwell Heath, Romford, Essex RM6 6SB. இந்த நிகழ்வில் பல நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த விசேட நிகழ்வில் பேச்சுப்போட்டிகள், பாடல்போட்டிகள், பெரியோர்களை கவுரவித்தல், பட்டிமன்றம், கலைநிகழ்வுகள், நகச்சுவை நிகழ்ச்சிகள், விருதுகளை வழங்கி கௌரவித்தல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வுகளில் பங்கு பற்றும்படி பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய வாழ் மக்களுக்கு அழைப்பு விடுகின்றோம்.

கலைநிகழ்ச்சிகள்

நடனம், நாட்டியம், பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் இந்த மேடையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில் பங்கு பற்ற ஆர்வம் உள்ளவர்கள் திரு மோகனதாஸ், திரு சச்சிதானந்தன் அவர்களை தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். ஆகவே தயவு செய்து உங்கள் பெயர்களை உடனடியாக பதிவு செய்யுங்கள்.

தொடர்புகளுக்கு
உபேந்திரன் - 07939100865, 02838394697
மோகனதாஸ் - 07725868320
சச்சிதானந்தன் - 07884238359

பேச்சுப்போட்டி, திருக்குறள் போட்டி, தேவாரப்போட்டி மற்றும் பாடல் போட்டி

சகல வயதினர்க்குமான இந்த போட்டிகள் ஒக்டோபர் மாதத்தில் மேற்கு மற்றும் கிழக்கு லண்டனில் நடைபெறும். ஜரோப்பா மற்றும் லண்டனுக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு நிகழ்ச்சி நாளன்று நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பேர்கள் விழா மேடையில் பேச அனுமதிக்கபடுவார்கள். பங்கு பற்றுபவர்கள் அனைவருக்கும் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன் முழு விபரங்களும் பின்னர் அறியத்தரப்படும். இதற்கு பொறுப்பாக திரு கஜனன் செயல்படுவார்கள்.

தொடர்புகளுக்கு
கஜனன் - 07403374810

பட்டி மன்றம்

இந்த பட்டிமன்றமானது திரு சிவபாதம் கணேஸ்குமார் தலைமையிலும் அவரின் வழிகாட்டுதலிலும் நடைபெறும். இதில் பங்குபற்ற ஆர்வமுடையவர்கள் அவரை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவர் சகல பயிற்சிகளையும் பங்குபற்றுபவர்களுக்கு வழங்கி சிறந்த பேச்சாளர்களாக உருவாக்கி மேடையில் அரங்கேற்றுவார்.

தொடர்புகளுக்கு
கணேஸ்குமார் - 07411354315

பெரியார்களை கௌரவித்தல்

பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை விழா மேடையில் வைத்து கௌரவிக்கப்படுவார்கள். பண்டைய காலங்களில் ஒவ்வொரு நிகழ்விலும் பெரியவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்று வந்தது. கால மாற்றத்தால் இந்த நிகழ்வுகள் நடைபெறுவது மிகவும் குறைந்து வருகின்றது. அதை மீண்டும் முன்னிலைப்படுத்த விரும்புகின்றோம். அவர்களின் ஆசீர்வாதம் எப்பவும் நாமும் நமது சமூகமும் வாழ இன்றியமையாதது. ஆகவே தயவு செய்து திரு அருந்தவராஜாவோடு தொடர்பு கொண்டு பெயர் விபரங்களை பதிவு செய்யவும்.

தொடர்புகளுக்கு
அருந்தவராஜா - 07831378022

 

விருது வழங்கல்.

ஊரின் வளர்ச்சிக்கு பெருமளவு நிதி உதவி செய்தவர்கள், சரீர சேவையாற்றியவர்கள், வேறுபட்ட துறைகளில் இருந்து கொண்டு ஊருக்கு பெருமை சேர்த்தவர்கள், சிறந்த சாதனையாளர்கள் (உதாரணமாக விளையாட்டுத்துறையை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள்) போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த விருதின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும். இந்த விருதை பெறுபவர்கள் உலகெங்கும் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் வாழும் காலங்களில் அவர்களுக்கான கௌரவத்தை வழங்க வேண்டும் என்ற நன்நோக்கோடு நடைபெறவுள்ளது. அமரர்களுக்கான விருதை அவர்களின் குடும்பங்களிடம் வழங்கப்படும். இந்த விருதை பெறுபவர்கள் வேறு நாடுகளில் வசித்தால் அந்நாடுகளில் நடைபெறும் விழாக்களில் இந்த விருதுகள் வழங்கப்படும். இது சம்பந்தமாக எல்லோருடைய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் தேவைபடுகின்றது. இந்த பொன்விழாவின் ஒரு பொதுவான விருதாக இருக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். ஆகவே தயவு செய்து விருதை பெற தகுதியுடையவர்களின் பெயர் விபரங்களையும் அவர்களின் சாதைனைகள் சேவைகளையும் அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். விருது வழங்கலில் எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் பல பேரின் ஆலோசனையின் அடிப்படையிலும் விருதுக்கு உரியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இந்த தெரிவு செய்தலில் பல்வேறு பட்டவர்களின் ஆலோசனை கேட்கப்படும். தகவல்களை பெறுவது மட்டும் தான் திரு மோகனதாஸின் பொறுப்பு. யாரேனும் விடுபட்டால் அதற்கு அவர் பொறுப்பல்ல. ஆகவே தயவு செய்து தகவல்களை முன்னமே தாருங்கள்.


தொடர்புகளுக்கு
மோகனதாஸ் - 00447725868320
விபரங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - mohanathas@live.com

மற்றைய நிகழ்ச்சிகள்

நகச்சுவை, வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற ஏனைய நிகழ்ச்சிகளை செய்ய விரும்புபவர்கள் திரு சச்சிதானந்தன் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

தொடர்புகளுக்கு
சச்சிதானந்தன் - 07884238359

பரிசுப்பொருட்கள் வழங்கல்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும். உங்கள் அன்புக்குரியவர்களின் பெயர்களில் பரிசில்கள் வழங்க விரும்பினால் திரு முகுந்தன் (மன்ற பொருளாளர்) அவர்களோடு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு
முகுந்தன் - 07572875382

எமது மற்றைய உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம்.

எல்லோரையும் அரவணைத்து இந்த விழாவை செய்ய முயலுகின்றோம். ஆகவே தயவு செய்து எல்லோரும் பங்கு பற்றி ஒத்துளைப்புக்களை நல்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி
ந.மோகனதாஸ்
செயலாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா.