எமது உறவுகளுக்கு அவசரமும் அவசியமான வேண்டுதல் .
விளையாட்டுத்துறையில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்கியது எமது கிராமம். அன்றில் இருந்து இன்று வரை பல வெற்றிக் கேடயங்களை தமதாக்கி கொண்டது எமது விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம். உண்மையாக சொல்லப்போனால் எமது கிராமத்திற்கென்று 80களின் ஆரம்பம் வரை ஒரு விளையாட்டு மைதானம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் கேணியடியில் உள்ள தனியார் காணிகளை பிரதான விளையாட்டு மைதானமாக பாவித்து வந்தார்கள். 80களின் ஆரம்பத்தில் எமது கிராம இளைஞர்களின் முயற்சி பங்களிப்போடு கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் ஒரு நிரந்தர மைதானம் உருவாக்கப்பட்டது. இதற்கு பலரது அயராத முயற்சியும் உழைப்பும் காரணமாக இருந்தது. எவ்வளவோ பிரச்சினைகளை தாண்டி உருவாக்கப்பட்ட அந்த மைதானத்திற்கு ஒரு ஆபத்து வந்துள்ளது. எமது உறவுகள் இடம் பெயர்ந்தாலும் எமது கிராம வளர்ச்சிக்கு தன்னாலான பங்களிப்பை செய்து வரும் அதே வேளை எமது மண்ணில் பிறந்த ஒரு நச்சுக் காளான் பொதுச் சொத்தின் மீது ஆசை கொண்டு செயல்பட தொடங்கியுள்ளார். அவர் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அதாவது எமது விளையாட்டு மைதானத்தின் குறுக்கே ஒரு பாதை இருப்பதாகவும், தான் அதை பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்கிறார். உண்மையில் இந்த விளையாட்டு மைதானம் ஆனது எமது கிராமத்தில் உள்ள சில நலன் விரும்பிகளால் அன்பளிப்பு செய்யபட்டது. ஏற்கனவே மைதானத்தின் பரப்பளவு போதுமானதாகவில்லை. இதனால் பெரிய போட்டிகளை நடாத்த முடியாத நிலமையில் உள்ளது. இந்த வழக்கை நாம் சட்ட பூர்வமாக சந்திக்க வேண்டும். இந்த மைதானத்தை உருவாக்கியோர் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இதற்கான ஆதாரங்கள் இருக்கலாம். தயவு செய்து உங்கள் ஆதாரங்களை தந்து உதவுங்கள்.குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தின் வேண்டுதல் இதோ.

விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்
குப்பிளான் வடக்கு குப்பிளான்.
12.03.2012

விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான வழக்கு தொடர்பாக,
எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தின் ஊடாக பாதை ஒன்று செல்வதாகவும் அதனை நாம் ஆக்கிரமித்து மைதானமாக பாவிப்பதாகவும் எமது நிர்வாகத்தின் மீது உடுவில் இணக்கசபையில் (Mediation Board-251, Uduvil) வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இவ்வழக்கினை உத்தமமான முறையில் நாம் எதிர்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளையும் ஏதாவது ஆவணங்கள் தங்கள் கைவசம் வைத்திருந்தால் அவற்றை எமக்கு அனுப்பிவைக்குமாறும் விளையாட்டுக் கழகத்தின் மீது பற்று வைத்துள்ள, கழகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
நிர்வாகம்

தொடர்புகளுக்கு

0094772309939

அல்லது

kuppilan@hotmail.com இமெயில் உங்கள் பெயர் தொடர்பு இலக்கங்களை அறியத் தாருங்கள் நாங்கள் உங்களோடு

தொடர்பு கொள்வோம்.