முத்தர் வளவு சேது விநாயகர் ஆலய நிர்வாக சபை பற்றிய விபரமும், அவர்களின் வேண்டுகோளும். updated 30-10-2012


எமது மக்களின் பண்டைய வாழ்வு, கலை, கலாச்சாரம் என்பன ஆலயங்களை சார்ந்தே இருந்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது எமது பெரியோர்கள் கூறிய வாக்கு. ஆனால் எமது கிராம மக்கள் ஊருக்கு ஒரு கோயில் என்று வைத்திராமல் குறிச்சிக்கொரு கோயில் என்று அமைத்து வழிபட்டு வந்தனர். சிறிய கிராமமாக இருந்தாலும் கோயில்கள் மிக அதிகம். ஒவ்வொரு கோயிலையும் மிகவும் சிறப்பாக பராமரித்து வந்தார்கள். 25 வருடங்களுக்கு முன்பு வரை திருவிழாக்கள் கழை கட்டி, பக்தர்கள் கூட்டம் அலை மோதும், அன்றைய நாட்களில் எல்லா கிராம மக்களும் உற்சவ காலங்களில் எல்லா ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தார்கள். இன்று அந்த நிலை மாறி விட்டாலும் அதை பழைய நிலைக்கு கொண்டு செல்வது எல்லோரினதும் கடமையாகும். நாம் ஒன்றுபட்டு நின்றால் எமது பண்டைய பண்பாடுகளை அழிக்க நினைப்போர் இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்க தயங்குவார்கள். எம்முடையே இருந்த ஒற்றுமை இல்லாமல் போனதால் இதை சாதகமாக பயன்படுத்திய சிலர் வேற்று மதத்தை எம்மீது திணிக்க முயல்கிறார்கள். இதை தடுக்க எம் மண்மீது பற்றுள்ள ஒவ்வொருதரும் முயல வேண்டும். எமது மக்கள் போரினால் அழிந்த எமது ஆலயங்களை புனரூத்தானம் செய்து வருகிறார்கள். ஆனாலும் முத்தர் வளவு ஆலயம் இன்னும் புனருத்தானம் செய்யப்படாமல் போரின் வடுக்களோடு அப்படியே இருக்கிறது. இதை ஓரளவு பழைய நிலைக்கு புனரமைப்பதற்கு குறைந்தத 5 லட்சங்கள் தேவைப்படுகிறது. ஆகவே தயவு செய்து ஆலய அடியார்கள் இந்த திருப்பணிக்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.


எமது ஆலய நிர்வாக சபை விபரம்.

முத்தர்வளவு சேது விநாயகர் ஆலய புதிய நிர்வாகம்

தலைவர் - கதிரமலை குகானந்தன்
உபதலைவர் - கிருஸ்னர் வடிவேலு

செயலாளர் - ஏரம்பமூர்த்தி நிர்மலன்
உபசெயலாளர் - நாகையா சன்முகலிங்கம்

பொருளாளர் - வைத்திலிங்கம் தசீகரன்

நிர்வாக உறுப்பினர்கள் -
சின்னத்தம்பி ஆனந்தன்
கிருஸ்னர் கதிரமலை
வீரவாகு கனகம்மா
சிவாநந்தசோதி தவமணி
விமலேஸ்வரன் சிவசாந்தி
செல்வநாயகம் லோகேஸ்வரி

லண்டனில் வதியும் திரு கற்பானந்தன் அவர்களின் ஆதரவில் ஆலயத்திற்கென்று ஒரு கிணறு அமைக்கப்பட்டு வருகிறது.

தொடர்புகளுக்கு

திரு தசீகரன் - 0094778002045