குப்பிழான் கடா கடம்பை இந்து மயான அபிவிருத்தியும் வரவு செலவு கணக்கறிக்கையும். updated 06-07-2014

 


கடா கடம்பை இந்து மயான அபிவிருத்தி வேலைகள் கடந்த 2 வருடங்களுக்கு முதல் ஆரம்பிக்கப்பட்டு அதன் வேலைகள் காலதாமதமாக முடிந்தாலும் வேலைகள் முடிவடைந்தது மனநிறைவை தருகின்றது. ஒவ்வொரு திட்டங்களின் முடிவிலும் பல்வேறு விமர்சனங்கள் நன்நோக்கோடோ அல்லது தீயநோக்கோடோ வைக்கப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. அந்தவகையில் இவ்வளவு செலவில் மயான அபிவிருத்தி, திறப்பு விழாக்கள் செய்யப்பட்டது சரியா மற்றும் நிதி கையாடல்களில் பல்வேறு விமர்சன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. விமர்சனம் செய்வது என்பது எல்லோரினதும் ஜனநாயக உரிமை. எல்லோரினதும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது. பல்வேறு தரப்பினரின் சந்தேகங்களை நீக்குவது சம்பந்தபட்டவர்களின் கடமையாகும். அந்தவகையில் இதன் கணக்கறிக்கை திரு கணேசலிங்கம் அவர்களால் பொதுமக்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றது.