குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் நூல் வெளியீடு தொடர்பான அறிவித்தலும், அமரர் சிவசோதி ஞாபகார்த்தமாக செய்யப்படும் மைதான அபிவிருத்தி பற்றிய ஒளிப்படங்களும்.


குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் தமது வரலாற்று ஆவணம் ஒன்றை வெளியிட உத்தேசித்துள்ளனர். அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டு வருகிறார்கள் மேலும் பல தகவல்களை பெறவேண்டியுள்ளதால் அது சம்பந்தமான தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். இந்த வருடம் இடம்பெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியுடன் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகமும், எமது கிராமமும் யாழ் மாவட்டத்தில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. யாழ் வலிகாமத்திலேயே மிகப் பெரிய விளையாட்டு மைதானமாக உருவெடுத்திருக்கும் குப்பிழான் விக்கினேஸ்வரா மைதானத்தின் அபிவிருத்தி வேலைகளும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. வரலாற்று ஆவணம் தொடர்பான தகவல்கள் இதோ.


எமது குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டு கழகத்தினால் எதிர்வரும் தை மாதம் விளையாட்டுகழக வரலாற்று நூல் வெகுசிறப்பாக வெளிவரவுள்ளது. இதற்கான தகவல்கள் எம்மால் திரட்டப்பட்டுக்கொண்டிருப்பதனால் ...

தங்களிடம் ஏதாவது தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் ஏதாவது விடயங்களை வைத்திருப்பின் உடனடியாக எமக்கு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். விக்கினேஸ்வரா விளையாட்டு கழகம் தொடர்பான தகவல்களை தகுந்த நேரத்தில் வழங்கவென கழக அக்கறையுடைய சிலர் வைத்துள்ளதாகவும் அறிகின்றோம். எனவே அவற்றையும் மேலதிகவிபரங்களையும் வழங்கி நூல் சிறப்பாக வெளிவர உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் நூல் வெளிவந்த பின்னர் தங்களால் வெளிவிடப்படும் கருத்துகளிற்கு நாம் பெறுப்பாளிகளாக இருக்க முடியாது என்பதுடன் அதற்கு தாங்களே பொறுப்பு என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நீங்கள் வைத்திருக்கும் தகவல்களை அனுப்பவேண்டிய முகவரிகள்

தபால் -
இ.நிரூபன்
குப்பிளான் வடக்கு
குப்பிளான்
ஏழாலை.
யாழ்ப்பாணம்.

அல்லது

Email - Rasanirupan@gmail.com

Facebook - Rasanirupan

தங்களால் அனுப்பப்படும் தகவல்கள் வீரர்களின் விளையாட்டு மற்றும் சமூகம் சார்ந்தசெயற்பாடுகள் என பிரிக்கப்பட்டு புகைப்படங்களுடன் வெளியிடப்படும். எனவே பார்வையாளராக இல்லாமல் செயற்பாட்டாளர்களாக அனைவரும் மாறி குப்பிளான் மண்ணின் பொது விளையாட்டுக் கழகமான விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் சிறப்பாக வளர உழைப்போமாக.
நன்றி

தகவல்
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம்.