குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் அறிக்கை. updated 17-10-2012

அன்புள்ள
எம் உறவுகளுக்கு வணக்கம் குறிஞ்சிக்குமரன் விளையாட்டு கழகத்துக்கான
விளையாட்டு மைதானம் ஒன்று தேவை என்பதை நாம் 2004 ம் வருடமே கேட்டு
இருந்தோம்
முன்பு 08 . 08 .2004 அன்று அனுப்பிய கடிதத்தில் உள்ளவை .......
சனசமூக நிலையம் வீரமானைக் குறிச்சி அபிவிருத்தி தொடர்பானது ..
வீரமானைக் குறிஞ்சியினதும் குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையம் மற்றும்
அதனுடன் இணைந்த விளையாட்டுக்கழகம் ஆகியவற்றின்
வளர்ச்சிக்கு வெளி நாடுகளில் உள்ள எமது கிராம மக்களின் பங்களிப்பு இதுவரை
காலமும் கிடைத்து வந்தது அதனைக்கொண்டு
எம்மால் முடிந்தளவு வேலைத்திட்டங்களை ஒன்றரை ஆண்டுக்குள் செய்து
முடித்துள்ளோம் ஆனால் தற்போது
எமது சனசமூக நிலையம் மற்றும் கிராம வளர்ச்சிக்கான நிதி போதாது உள்ளது
இதற்க்கான உதவியை வெளிநாடுகளில் வாழும்
உங்களிடம் எதிர் பார்க்கின்றோம் எமது சன சமூக நிலையத்தில் இதுவரை நடந்த
வேலை திட்டங்கள்

ஒன்று நிலம் துப்பரவு செய்தமை இரண்டு புதிய கட்டிடம் அமைத்தமை மூன்று
தளபாடம் வாங்கியமை நான்ங்கு குழந்தைகளுக்கான
விளையாட்டு உபகரணம் செய்தமை ஐந்து குழாய்க்கிணறு வெட்டி கைத் தண்ணீர் பம்
செய்தமை ஆறு சுற்றி வர கேட்டின் மதில் கட்டியமை
உட்பட இன்னும் பல சமூகப் பணிகள் (திறமைகள் ) ஒன்று அந்த ஆண்டு உடுவில்
பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில்
எமது சனசமூக நிலையம் மொத்தப்புள்ளி அடிப்படையில் முதலிடம் பெற்றமை
(சம்பியன் ) இரண்டு அதே விளையாட்டுப் போட்டியின்
சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டு அணியாக நிலையம் தெரிவு செய்யப்பட்டது இனி
மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள்

இனி வரும் காலங்களி ல் பாலர் பாடசாலை நிலையம் திறப்பது இரண்டு அதற்க்கான
தளபாடங்களினை விலைக்கு வாங்குவது
மூன்று சனசமூக நிலைய விளையாட்டுக் கழகத்தின் அணியை வளர்ப்பது நான்ங்கு
அதற்க்கான விளையாட்டு மைதான ஒன்றை பெறுவது
போன்றவற்றுடன் வீதி ஆலயம் பொது இடங்கள் ஆகியவற்றின் துப்பரவுப் பணியிலும்
ஈடு படுவது

வெளி நாட்டில் வாழும் உங்களுக்கு
மேற்ப்படி எமது சன சமூக நிலையத்தின் அனைத்துச் செயற்பபாடுகளும்
திருப்திகரமாக இயங்க இதுவரை காலமும்
ஒத்துழைப்பு நல்கிய நீங்கள் இனியும் எமக்கு ஒத்துழைப்பு நல்கி எமது
செயர்ப்பாடுகளுக்கு ஊக்கம் தருமாறு வேண்டுகின்றோம்

(மற்றும் குப்பிளான் அபிவிருத்திச் சங்கம் என்ற பெயரில் அல்லது
தனிப்பட்டவர்களின் கணக்குகளில் அனுப்பப் படும் பணத்தில்
சிறிதளவும் எமக்கு பயன்படவில்லை என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள
விரும்புகின்றோம் )

அதைவிட குப்பிளான் அபிவிருத்திச் சங்கம் நடாத்திய ஆண்ட்டுக் கூட்டத்தில்
பங்கேற்கச் சென்ற
எமது சன சமூக நிலைய உறுப்பினர்கள் அவதிக்கப் பட்டதுடன் எமக்கு எவ்வித
உதவியையும் அச்சங்கத்தின் மூலம்
செய்ய முடியாது என மறுத்தும் விட்டனர் அதை விட விக்கினேஸ்வரா
விளையாட்டுக் கழகத்தின் மைதானமாக மட்டுமே
கற்க்கரைக் கற்பக விநாயகர் ஆலயம் அருகில் உள்ள விளையாட்டு மைதானம் இயங்கி
வருகின்றதேயன்றி
அது குப்பிளான் பொது மைதானமாக இயங்கவில்லை என்பதையும் அங்கு குப்பிளான்
கிராமத்தின் அனைவரும்
ஒன்றாகக் கூடி விளையாட முடியாத நிலை உள்ளதையும் உங்கள் கவனத்துக்கு
கொண்டு வருகின்றோம்

இவர்கள் செய்வது குப்பிளான் கிராம அபிவிருதியா? அல்லது பிரதேச அபிவிருத்தியா?
எனவே வீர மனை மக்களாகிய நீங்கள் செய்ய விரும்பும் உதவிகளை குறிஞ்சிக்
குமரன் சன சமூக நிலைய
கணக்கு இலக்கத்துக்கு அனுப்பும் படியும் அல்லது நிர்வாகத்துடன் தொடர்பு
கொள்ளும் படியும் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்
எமது சிறார்களின் கல்வி விளையாட்டு ஆகியவற்றின் எதிர் காலம் உங்கள்
கைகளில்தான் என்பதை
உறுதியுடன் கூறி நிற்கின்றோம்

த.மாறன்
பொருளாளர்
செயலாளர்
குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம்
பதிவு இல j /v c 9 /c c /407