குறிஞ்சிகுமரன் விளையாட்டு கழக பொருளாளர் அறிக்கை.

த.மாறன் ஆகிய நான் 2011 இல் இருந்து 05.06.2014  வரை குறிஞ்சிகுமரன் விளையட்டுக்கழகத்தினை பிரதிநிதிபடுத்தி என்னால் இயன்ற அளவு இக் கழகத்துக்கு பணி கிடைதமையிட்டு பெருமையிட்டு கொள்வதுடன் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இருந்த குறையினை எமது வீரமனை இளைஞர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட முயற்சிக்கு புலம் பெயர் எமது உறவுகள் கரம் கொடுக்க  பெரிய தடைகள் பல  தாண்டி  புதிய மைதான நல்லாக்கத்ததிணை  மேற்கொண்டு இருந்தோம் , இதன் பின்னர் எமது கழகத்தின் வெற்றி படிகள் ஏராளம் மைதான நல்லாகம் மற்றும் மற்றைய காலபகுதியில் உள்ள சகல கணக்கு சார்ந்த  செயற்பாடுகளுக்கு பொறுப்பு என்ற வகையில் எனது அறிவுக்கு எட்டிய வகையிலும் எமது செயற்பட்டாளர் திரு க .மோகன் (னா ) உடன் இணைத்து செய்து வந்திருந்தேன்  

      மைதான நல்லாக்கம் அதன் பின்னரான அபிவிருத்தி தொடர்பாகவும் எமது மதிப்புக்குரிய திரு க. மோகன்னா அவர்களுடன் இணைந்து அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அவரினால் கொடுக்கப்பட்ட  பணத்தினை கொண்டு மைதானத்தினை சுற்றி வலை பின்னல் வேலை திட்டம் மேற்கொள்ள பட்டது. இவ் வேலைத்திட்டம் நடைபெற்று முடிவுற்ற பின்னர் உடனடியாக கணக்கு விபரங்கள் கொடுக்க முடிய வில்லை ( தனிப்பட வேண்டுதலின் பிரகாரம் அவராலும் அவராலும் ஒத்துகொள்ள பட்டு இருந்தது )இருபினும் 2014 தை மாதம் அளவில் சகல கணக்கு அறிக்கைகளும்  குப்பிளான் இணையதளங்கள் ஊடாகவும் , மற்றும் எமது அன்புக்குரிய செயற்ப்பாட்டாளர் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பபட்டு அவரும் எல்லாம் சரி என எனது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி இருந்தார்.

இதன் பின்னர் எல்லாம் சரி என கூறப்பட்டதன் பின்னர் ஒரு சுவிஸ் வாழ் வீரமனை புலம் பெயர் அன்பர் ( வீரமனை என்பதால் மட்டுமே பதில் அனுப்பபடுகிறது ) எமது கழகம் தொடர்பாகவும் தனது கருத்துகளை முகபுத்தகத்தில் தெரிவித்து இருந்தார் அதிலே முக்கியமாக.

 

 

-  குறிஞ்சிகுமரன் மைதான அபிவிருத்திகென ஒதுக்கிய நிதியினை எப்படி விளையாட்டு கழக செயற்பாட்டுகளுக்கு எடுபீர்கள் என .....................?

பொருளார்  என்ற வகையிலும் எமது செயற்பட்டாளர் திருவாளர் க. மோகன்னா  உடன் தொடர்பில் இருந்தவன் என்ற ரீதியிலும் எனக்கு மோகன்னா எந்த சந்தர்பத்திலும் தான் அனுப்பும் பணத்தில் கழக செயற்பா டுகளுக்கு  பயன் படுத்த வேண்டாம் என கோரவில்லை. அத்துடன் நாம் விளையாட்டு கழக சுற்று வலை மற்றும் முன் மதில் வேலைகள் முடிந்த பின் தான் விளையாட்டு கழக செயற்பாடுகளுக்கு பணத்தினை பயன் படுத்தி இருந்தோம். சுவிஸ் அன்பர் சொல்வது போல யாரும் குற்றப்பணமோ அல்லது தண்ட பணமோ கட்ட பணம் அனுப்ப வில்லை தான்( உதை பந்து போடியில் மஞ்சள் அட்டையோ அல்லது சிகப்பு அட்டையோ காட்டப்படும் போது குற்றப்பணம் கட்டும் முறை இருப்பது தெரியவில்லை போலும் )

-  சிறுவர் கழக விளையாட்டு நிகழ்வுக்கோ அல்லது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என ...................................?

எமது சிறுவர் கழக விளையாட்டு நிகழ்வின் இறுதி நிகழ்வுக்கு செல்லவில்லை தான் அது ஏன் எனில் இறுதி போட்டி நடந்தது 2.30  மணிக்கு அது எந்த வகையிலும் பங்கு பற்ற முடியாத சூழ்நிலை ஏன் எனில் நாங்கள் யாரும் வேலைக்கு போகாமல் இருப்பவர்கள் அல்ல. அத்துடன் யாரும் சொல்வதினை கேட்டு குற்றம் சொல்பவர் ஏன் அவர்களை கேக்க வில்லை பிரதேச ரீதியாக நடைபெற்ற  சிறுவர் நிகழ்வுக்கு யாரு சிறுவர் கழக வீரர்களை அழைத்து சென்றது என்று ..........

நன்றி

த. மாறன் ( முன்னால் பொருளாளர் )

 

Ø  சனசமூக நிலைய செயற்பாடுகள் தொடர்பாக தலைவர் அறிக்கை

குப்பிளான் குறிஞ்சிகுமரன் சனசமூக நிலைய செயற்பாடுகளின் தேக்க நிலை காரணமாக 2013,2014 ஆம் வருடத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு தலைவராக செயற்பட்டு வந்து இருந்தேன். நான் தலைவராக செயற்பட்டு வந்த காலபகுதியில் எமது செயற்பட்டாளர் களுக்கும் எமது இனிய உறவுகளுக்கும் மன கஷ்டம் கொடுத்த சகல விடயங்களுக்கும் தலைவர் என்ற ரீதியில் மன்னிப்பு கேட்டு கொள்கின்றேன்.

      இருப்பினும் ஒரு சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது அந்த வகையில் நாம் எமது வரவு செலவு கணக்கு விபரங்களை ஒவ் வொரு வருட ஆரம்பதிலும் முதல் வருடத்துக்கான வரவு செலவினை தெளிவு படுத்த வேண்டியது எமது பொறுப்பு அவ்வாறு எமது வரவு செலவு விபரங்கள் ஆறு மாதங்களாக வெளிவர வில்லை இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பொருளாளரிடம் செலவு விபரம் கோரபட்டு இருந்தது இருபினும் அவரால் பங்குனி மாத இறுதியில் அறிக்கை கொடுக்கப்பட்டு குப்பிளான் இணையதளத்துக்கு கொடுக்கப்பட்டு இருந்தது இருபினும் ஏதோ ஒரு தவறுதலாக அது இடம் பெறாமல் போய் விட்டது இதற்கு எமது நிர்வாகம் சார்பில் ஏற்பட்ட்ட தடங்கலுக்கு மனம்வருந்துகின்றோம்.

Ø  சனசமூக கணக்குக்கு இலக்கத்துக்கு பிரதேச சபையினால் பணம் வரவு வைக்க எதற்கு இடம் அளிக்க பட்டது ...........

சனசமூக நிலையம் என்பது வெறுமனே பத்திரிக்கை போடும் நிலையமாக செயற்படாமல் ஏதாவது சமூகத்துக்கும் நல்லது செய்யும் நிலையமாக இருக்க வேண்டும் அந்த வகையில் எமது குப்பிளான் தெற்கு கிராம அபிவிருத்தி சபையின் தலைவரின் வேண்டுதல் காரணமாக எமது மயான அபிவிருத்தி இணை கருத்தில் கொண்டும்  (சமூக நலன் நோக்கிலானது ) அதற்கு ஒத்துகொள்ள பட்டது இவ் நிதி யானது வெறுமனே தனி ஒருவருக்கு அனுப்புவதாக இருப்பின் நிட்சியமாக ஒத்துகொள்ள பட்டிருக்க மாட்டாது. இதே வேளை எமது ஆலயம் சார்பாகவோ கேட்டு இருந்தால் அதற்கும் உடன் பட்டு இருப்போம் இதில் குற்றம் காணும் அந்த அன்பர் ஒருவேளை தாங்கள் முன் நின்று செய்து முடிக்க வேண்டிய வேலை திட்டத்துக்குள் எதுக்கு அரச பணம் என்று நினைத்து இருக்கலாம்.

Ø  நாம் சனசமூக நிலைய வைப்புக்கு பணம் வைப்பில் இடுவதர்ற்கு ஒத்துகொள்ள காரணம்

Ø  குப்பிளான் தெற்கு கிராம அபிவிருத்தி சபை யினால் கடிதம் மூலம் கேட்டு கொண்டமை (சுவிஸ் அன்பர் கிராம அபிவிருத்தி சபை தனது வேலை திட்டத்தினை முன்னேடுக்கும் போது சொல்லி இருக்க வேண்டியது தானே அரச அல்லது அரச சார்பற்றவர்களிட்மோ பணம் பெற வேண்டாம் என்று )

Ø  குப்பிளான் கிராமதுக்கென ஒரு நிதி உதவி அரசு சார்பாக வருகிறது எனில் கிராம அபிவித்தியினை கருத்தில் கொண்டு அதற்க்கு உடன் பட்டு இருந்தோம்

அவர் சொல்வது போல் நாம் ஒன்று இரண்டு பந்துக்கு ஆசை பட்டு இவ் காரியத்தினை மேற்கொள்ள வில்லை இருபினும் தலைவர் நாட்டில் இல்லாத நேரத்தில் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் மேற்கொண்ட இவ் செயற்பா ட்டினால் எமது மதிப்புக்குரிய செயற்பாடாளர் களுக்கு தலை குனிவு ஏற்பட்டு இருப்பின் அதற்கு முழு பொறுப்பினை தலைவர் என்ற ரீயில் ஏற்று மன்னிப்பு கேட்டு கொள்ள கடமை பட்டு உள்ளேன் அத்துடன்

Ø  குறிஞ்சிகுமரன் விளையாட்டு கழகம் மற்றும் சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களின் செயற்பட்டுகளினால் எமது செயற்பட்டாளர் மற்றும் நலன் விரும்பிகளுக்கு ஏதாவது மனவருத்தமோ அல்லது சௌகரியங்களோ ஏற்பட்டு இருப்பின் பகிரக மன்னிப்பு கேட்டு கொள்வதுடன் அதற்கு பொறுப்பேற்று கொண்டு குறிஞ்சிகுமரன் சார்ந்த நிர்வாக செயற்பட்டுகளில் இருந்து முழுமையாக விலத்திகொள்கின்றேன்.

நன்றி

த. மாறன்